சவுதி அரேபியாவில் நடந்த தீ விபத்தில்சேலம் வாலிபர் உடல் கருகி பலி

சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி.அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த சீதாராமன்.
உயிரிழந்த சீதாராமன்.
Published on

சேலம்:

சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி. இவர் இன்று தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது மகன் சீதாராமன், சவுதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதிக்கு பெட்ரோல் என்ஜினீயர் பணிக்காக, கடந்த திங்கட்கிழமை சேலத்தில் இருந்து மும்பை வழியாக சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அதில் எனது மகன் உட்பட 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

மகன் சவுதி அரேபியாவுக்கு சென்று ஒரு வாரத்திற்குள்ளே தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் நேற்று தான் எங்களுக்கு தெரியவந்தது.

எனது மகன் உடல் எப்போது தமிழ்நாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. எனவே மாவட்ட கலெகடர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com