என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
- அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. கோடைகாலத்தில் பெய்த மழை, பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளை யத்தில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் - 6, கெங்கவல்லி - 5, வீரகனூர் - 4, தலைவாசல் - 4 என மாவட்டம் முழுவதும் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
- தலைமை இடமாகக் கொண்டு அமுத சுரபி சிக்கனம் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி, தமிழகம் முழுவதும் 1000 கிளைகள் திறக்கப்பட்டன.
- இதில் சேலத்தில் அழகாபுரம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய 2 கிளைகள் அடங்கும்.
சேலம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை தலைமை இடமாகக் கொண்டு அமுத சுரபி சிக்கனம் கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி, தமிழகம் முழுவதும் 1000 கிளைகள் திறக்கப்பட்டன. இதில் சேலத்தில் அழகா புரம், அயோத்தியாப்பட்ட ணம் ஆகிய 2 கிளைகள் அடங்கும்.
சேலம் அம்மாபேட்டை யை சேர்ந்த பாஸ்கரன், அயோத்தியாப்பட்டணம் கிளையில் பல்வேறு திட்டத்தில் ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் முதலீடு செய்து முதிர்வுக்கு பின் திரும்ப பெற முடியாமல் பாதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், போலி கூட்டுறவு சங்கம் திறந்து தமிழக முழுவதும் ரூ.58 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அயோத்தியாப்பட்டணம் சங்க கிளை தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27), மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்க நிறுவனர் தங்கப்பழம் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் தங்கபழத்தை போலீஸ் காவலில் எடுத்து 4 நாட்கள் விசாரிக்க கோவை டான் பிட் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையாடுத்து நீதிபதி செந்தில் குமார் மனுவை ஏற்று, 2 நாட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதை அடுத்து போலீசார் தங்கபழத்தை சேலத்திக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
தொடர்ந்து மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.
- சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஊராட்சி கல்லப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சேகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி அடுத்த கள்ளுக்கடை அருகே அரசு மதுபான கடையும், அதன் அருகில் மதுபான பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மதுபான பாரில் சேகர் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் சேகர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சேகரின் உறவினர்கள் அங்கு திரண்டனர். உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.
இந்த நிலையில் சேகர் இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மேலும் ஒரு நபர் நீண்ட நேரமாக மதுபோதையில் சுயநினைவு இன்றி கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், நானும், சேகரும் பாரில் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கவில்லை. அவர் யார்? என எனக்கு தெரியாது. வழக்கம்போல் நான் இங்கு மது குடிக்க வருவேன். அதுபோல் நேற்று இங்கு வந்து மது குடித்தேன். போதை தலைக்கேறியதால் நடக்க முடியாமல் பார் அருகில் படுத்துவிட்டேன், என்றார்.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூலாம்பட்டி போலீசார், சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேகர், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் மது குடிக்கக்கூடாது என டாக்டர்கள் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் சேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவு அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என முழு விபரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சேகர் சொந்த ஊரான கல்லப்பாளையம் காலனி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவி வருவதால் சேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனிடையே அவரது உறவினர்கள், சேகரின் சாவில் சந்தேகம் இருப்பதால், மது வாங்கி குடித்த அரசு டாஸ்மாக் கடையில் உள்ள மது வகைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பாரில் உள்ள உணவு பொருட்களையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும் தொழிலாளர் நலத்துறையின் http://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தொழிலாளர்களின் ஆதார் எண் விவரங்கள், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சேலம்:
கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, சேலம் இணை ஆணையர் புனிதவதி, உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறு வனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங் கள், கோழிப்பண்ணைகள், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகள், ஆஸ்பத்திரி கள், பள்ளிகள், கல்லூரிகள், முடி திருத்தும் நிலையங் களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும், சுய வேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணிபுரிவோர், வீட்டு வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும் தொழிலாளர் நலத்துறையின் http://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவர்களின் பயனாளர் குறியீடு, கடவுசொல் ஏற்படுத்தி வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் எண் விவரங்கள், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைகள், நிறு வனங்கள், தொழிலாளர்கள் நலத்துறையில் படிவம் 3 சான்று பெற்றும் பதிவு செய்ய வேண்டும். மேலும் பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவன உரிமம் பெற்று தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரிவர்களின் விவரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டாத நிறுவனங்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டம் மேட்டூரில் பசு, காளை, எருமை மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
- இந்த கால்நடைகள் பல நேரங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் பசு, காளை, எருமை மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள், மேட்டூர் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் உட்பட முக்கிய பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், இந்த கால்நடைகள் பல நேரங்களில் போக்கு வரத்துக்கு இடையூறாக நடுரோட்டிலேயே உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
நேற்று மாலை மேட்டூர் சின்ன பார்க் அருகே, சுமார் 10-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் நடுரோட்டில் வரிசையாக சென்றது. இதனை பார்ப்பதற்கு எருமை மாடு பேரணி போன்ற காட்சி அளித்தது.
ரோட்டின் நடுவே மாடுகள் சென்றதால், மாலை நேரத்தில் போக்குவரத்து நிறைந்து காணப்படும் அந்த சாலையில், நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எனவே, சாலையில் சுதந்திரமாக சுற்றி வரும் கால்நடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கால்நடை வளர்ப்பவர்கள் மீது மேட்டூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆரூர்பட்டி கிராமம் வெள்ளக்கல்பட்டி பகுதியில் 48 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- அரசு இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி புதிய தனித்தனி வீட்டுகள் கட்டி வருகிறது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம் வெள்ளக்கல்பட்டி பகுதியில் 48 நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அரசு இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி புதிய தனித்தனி வீட்டுகள் கட்டி வருகிறது. மேலும் இந்த நரிக்குறவர் இன மக்கள் அரசின் பல்வேறு சலுகைகளை பெற்று பொருளாதார மேம்பாடு அடைய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பில் இருந்த இந்த நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் இன பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தபோது தாரமங்கலம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 74 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீதமுள்ள நபர்கள் 32 பேருக்கு நேற்று ஆரூர்பட்டியில் உள்ள அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்ற மேட்டூர் ஆர்.டி.ஓ. தனிகாசலம் ஜாதி சான்றிதழை வழங்கினார். அப்போது தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன். வி.ஏ.ஓ.க்கள் கீர்த்திவாசன். ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- கால்நடைகளை தாக்கும் நோய்கள் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்ன? நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- இதில் மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு பட்டிபாடி வேலூர் கிராமத்தில், மலை கிராம மக்கள் பயனடையும் விதமாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலம் கால்நடை துறை உதவி இயக்குனர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.
கால்நடைகளை தாக்கும் நோய்கள் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்ன? நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பாண்டியன், செல்வகுமார், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.
வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சின்னசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று 454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 408 கனஅடியாக சரிந்துள்ளது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 408 கனஅடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 98.98 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 98.31 அடியாக சரிந்துள்ளது.
- மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நுண்மீன் குஞ்சுகளை விரலிகளாக வளர்த்தெடுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட மீன்வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 2 எக்டேர் பரப்பளவில் புதிய பண்ணைகுட்டை அமைக்க 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மானியம் உள்ளிட்ட, மீன் வளர்க்கும் பலருக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளன.
பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பை மேம்படுத்த ஏதுவாக, மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணை பொருட்கள், மீன்கள் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 6 பயனாளி களுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்
பட்டுள்ளன. மேலும், 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
- கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- பொதுபெட்டியில் சீட் எண்-70 -ன் மேலே லக்கேஜ் ஸ்டேண்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த கருப்பு கலர் 2 சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.
சேலம்:
தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இசையரசு, அசோக்குமார் ஆகியோர் ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை சோதனை செய்தனர். அப்போது, பொதுபெட்டியில் சீட் எண்-70 -ன் மேலே லக்கேஜ் ஸ்டேண்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த கருப்பு கலர் 2 சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.
இந்த 2 பேக்கை வைத்திருந்த கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர், விஜயவாடாவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் விற்பனை செய்தற்காக கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். சேலம் ரெயில்வே நிலையத்தில் ரெயில் வந்ததும் போலீசார், அந்த நபரையும் பறிமுதல் செய்த கஞ்சாவை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இறக்கி மேல் நடவடிக்கைக்காக சேலம் என்.ஐ.பி. சி.ஐ.டி யிடம் ஒப்படைக்கப்பட்டது.
- நீர்வள துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
- வெயில் தாக்கம் காரணமாக காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். பூங்காவிற்கு சென்று புல் துறையில் அமர்ந்த பொழுதை கழித்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்வள துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
இதை ஒட்டி நேற்று சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
வெயில் தாக்கம் காரணமாக காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். பூங்காவிற்கு சென்று புல் துறையில் அமர்ந்த பொழுதை கழித்தனர். பாம்பு முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர். குடும்பத்துடன் உணவு அருந்தி ஓய்வெடுத்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சாலையோர கடைகளில் வியாபாரம் அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் மேட்டூர் அணை மீன்களையும் வாங்கி சமைத்து சுவைத்தனர்.
ஏராளமான கார்களிலும் சுற்றுலா வேன்களிலும் வந்ததால் கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பகுதிகளிலும் காவிரி பாலம் பகுதியில் ஏராளமானோர் நீராடினர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் 8066 சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிற்கு வந்தனர்.
இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 40 ஆயிரத்து 330 ரூபாய் வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 750 பேர் வந்து சென்றனர்.
- சேலம் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.96.53 கோடி செலவில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டப்பட்டது.
- இன்று காலை முதல் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.96.53 கோடி செலவில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டப்பட்டது. இந்த பஸ் நிலைய கட்டுமான பணி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது .
பணிகள் நிறைவ டைந்ததை அடுத்து மறு சீரமைப்பு செய்யப்பட்ட இந்த பஸ் நிலையம் கடந்த 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தபஸ் நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் 54 பேருந்துகள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது தவிர கடைகள், அரசு அலுவலகங்களும், மொட்டை மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.
பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சோலார் பேனல் அமைக்கப் பட்டுள்ளது. வைபை இணைப்புடன் பயணிகள் தங்கும் அறை உள்ளது. பேருந்து நிலையம் 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் விஸ்தாரமாக உருவாகி உள்ளது.
11500 சதுர மீட்டரில் தரைத்தளம் அமைக்கப்பட்டு 4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 29 கடைகளும் 11 அலுவலகங்களும் கட்டப் பட்டுள்ளது. இத்தளத்தில் 26 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும் 2-ம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு 26 பேருந்துகள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை தளத்தில் 11 கடையும், ரெயில் நிலையத்தில் உள்ளது போல் வைபை இணைப்பு வசதியும், ஏ.சி. வசதியும், பயணிகள் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் பணிகள் 100 சதவீதம் முழுமை பெறாததால் பஸ்களின் இயக்கம் ஒத்திவைக்கப்பட்டது .
இந்த நிலையில் இன்று முதல் பஸ்கள் இயக்க மாநகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம், போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் . அதன்படி இன்று காலை முதல் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன.
மேல் தளத்திலிருந்து ஜங்ஷன் ,அஸ்தம்பட்டி, தாரமங்கலம், சித்தர் கோவில் மார்க்க பஸ்கள் இயக்கப்பட்டன. தரைதளத்திலிருந்து வாழப்பாடி, காரிப்பட்டி ,மல்ல சமுத்திரம் , ஆட்டையாம்பட்டி மார்க்கமான பஸ்கள் இயக்கப்பட்டன.
இதை ஒட்டி பஸ் நிலையம் பரபரப்பாக காட்சியளித்தது. நீண்ட காலத்துக்கு பிறகு பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களும் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.






