என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு
    X

    ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சின்னசாமி ஊக்கத்தொகை வழங்கிய காட்சி.  

    கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு

    • கால்நடைகளை தாக்கும் நோய்கள் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்ன? நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • இதில் மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பட்டிபாடி வேலூர் கிராமத்தில், மலை கிராம மக்கள் பயனடையும் விதமாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலம் கால்நடை துறை உதவி இயக்குனர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

    கால்நடைகளை தாக்கும் நோய்கள் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்ன? நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பாண்டியன், செல்வகுமார், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.

    வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சின்னசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×