என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணை பூங்காவுக்குஒரே நாளில் 8 ஆயிரம் பேர் வருகை
    X

    மேட்டூர் அணை பூங்காவுக்குஒரே நாளில் 8 ஆயிரம் பேர் வருகை

    • நீர்வள துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
    • வெயில் தாக்கம் காரணமாக காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். பூங்காவிற்கு சென்று புல் துறையில் அமர்ந்த பொழுதை கழித்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்வள துறையின் பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    இதை ஒட்டி நேற்று சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    வெயில் தாக்கம் காரணமாக காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். பூங்காவிற்கு சென்று புல் துறையில் அமர்ந்த பொழுதை கழித்தனர். பாம்பு முயல் பண்ணைகளை கண்டு மகிழ்ந்தனர். குடும்பத்துடன் உணவு அருந்தி ஓய்வெடுத்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சாலையோர கடைகளில் வியாபாரம் அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் மேட்டூர் அணை மீன்களையும் வாங்கி சமைத்து சுவைத்தனர்.

    ஏராளமான கார்களிலும் சுற்றுலா வேன்களிலும் வந்ததால் கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பகுதிகளிலும் காவிரி பாலம் பகுதியில் ஏராளமானோர் நீராடினர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் 8066 சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிற்கு வந்தனர்.

    இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 40 ஆயிரத்து 330 ரூபாய் வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 750 பேர் வந்து சென்றனர்.

    Next Story
    ×