மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 408 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நேற்று 454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 408 கனஅடியாக சரிந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 408 கனஅடியாக சரிவு
Published on

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 454 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 408 கனஅடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 98.98 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 98.31 அடியாக சரிந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com