search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erudku Bus Station"

    • சேலம் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.96.53 கோடி செலவில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டப்பட்டது.
    • இன்று காலை முதல் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.96.53 கோடி செலவில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டப்பட்டது. இந்த பஸ் நிலைய கட்டுமான பணி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது .

    பணிகள் நிறைவ டைந்ததை அடுத்து மறு சீரமைப்பு செய்யப்பட்ட இந்த பஸ் நிலையம் கடந்த 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தபஸ் நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. இங்கு தரை மற்றும் முதல் தளத்தில் 54 பேருந்துகள் நிறுத்துவதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது தவிர கடைகள், அரசு அலுவலகங்களும், மொட்டை மாடியில் ஓட்டல் வசதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சோலார் பேனல் அமைக்கப் பட்டுள்ளது. வைபை இணைப்புடன் பயணிகள் தங்கும் அறை உள்ளது. பேருந்து நிலையம் 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் விஸ்தாரமாக உருவாகி உள்ளது.

    11500 சதுர மீட்டரில் தரைத்தளம் அமைக்கப்பட்டு 4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 29 கடைகளும் 11 அலுவலகங்களும் கட்டப் பட்டுள்ளது. இத்தளத்தில் 26 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும் 2-ம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு 26 பேருந்துகள் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கூரை தளத்தில் 11 கடையும், ரெயில் நிலையத்தில் உள்ளது போல் வைபை இணைப்பு வசதியும், ஏ.சி. வசதியும், பயணிகள் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் பணிகள் 100 சதவீதம் முழுமை பெறாததால் பஸ்களின் இயக்கம் ஒத்திவைக்கப்பட்டது .

    இந்த நிலையில் இன்று முதல் பஸ்கள் இயக்க மாநகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம், போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் . அதன்படி இன்று காலை முதல் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு சென்றன.

    மேல் தளத்திலிருந்து ஜங்ஷன் ,அஸ்தம்பட்டி, தாரமங்கலம், சித்தர் கோவில் மார்க்க பஸ்கள் இயக்கப்பட்டன. தரைதளத்திலிருந்து வாழப்பாடி, காரிப்பட்டி ,மல்ல சமுத்திரம் , ஆட்டையாம்பட்டி மார்க்கமான பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதை ஒட்டி பஸ் நிலையம் பரபரப்பாக காட்சியளித்தது. நீண்ட காலத்துக்கு பிறகு பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களும் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×