என் மலர்
சேலம்
- ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப் பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
- சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சேலம்:
சேலம் மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப் பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. 1981-ல் சிறு பூங்காவாகத் தொடங்கப்பட்டு, 2008-இல் சுமார் 78 ஏக்கர் அளவுக்கு பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த வன உயிரியல் பூங்காவில் கடமான், புள்ளிமான், முதலை, ஆமை, மலைப்பாம்பு, நரி, மயில், குரங்கு, வெளிநாட்டு நீர்ப்பறவைகள், பல்வேறு வகை கிளிகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, பன்னம் செயற்கை அருவி ஆதியவை அமைக்கப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
இதனிடையே, சிறுபூங்கா என்ற தர நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற நிலைக்கு மேம்படுத்த ரூ. 8 கோடி நிதி ஒதுக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அட்டவணை 1-இல் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட 10 வகை விலங்குகளை கொண்டுவர வனத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் பூங்காவை சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ. 70-ம், சிறுவர்களுக்கு ரூ. 35-ம் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது.
இதனிடையே பூங்காவை சுற்றிப் பார்க்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் இ-சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 10 சைக்கிள் கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வகை சைக்கிள்கள் ஒவ்வொன்றும் தலா ரூ. 32 ஆயிரம் மதிப்புடையதாகும்.
இந்த சைக்கிள்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ரூ. 30 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சைக்கிள் ஓட்ட ஆர்வமுள்ளவர்கள் இ-சைக்கிள் மூலம் பூங்காவை சுற்றிப் பார்க்க லாம்.
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சைக்கிள் ஓட்டுபவரின் உடல் ஆரோக்கியம் மே ம்படுகிறது என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
- சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
- சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொம்மி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 35). இவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி (31) என்ற பெண்ணுடன் திருமணமாகி, கிரிதர் (10) என்ற மகன் உள்ளான்.
சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில், சுந்தர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் சுந்தர் வேலைக்கு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில், மாற்று காவலாளி அந்தோணிசாமி வந்து பார்த்தபோது, சுந்தர் கம்பெனியில் உள்ள மேற்கூறையில் உள்ள கம்பியில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தோணசாமி, இதுகுறித்து உடனடியாக கம்பெனி ஊழியர்களுக்கும், அன்னதானப்பட்டி போலீ சாருக்கும் தகவல் தெரி வித்தார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீ சார், சுந்தரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சுந்தரின் மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளி குழந்தைகள் மத்தியில் பேசிய தையல் நாயகி, உங்களில் யார் எல்லாம் எதிர்காலத்தில் போலீஸ் ஆக விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
- மாணவர்கள் பலரும் உற்சாகமாக கைதூக்கினார்கள்.
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஊஞ்சபாளையம் நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் கருமத்தம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி தையல் நாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பள்ளி குழந்தைகள் மத்தியில் பேசிய தையல் நாயகி, உங்களில் யார் எல்லாம் எதிர்காலத்தில் போலீஸ் ஆக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பல மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கை தூக்கினார்கள். அப்போது நீங்கள் நன்றாக படித்தால் போலீசாக முடியும். சமூகத்தில் திறமைவாய்ந்த குடிமகனாக உருவாக முடியும் என்று அறிவுரை கூறினார்.
இதனை தொடர்ந்து டி.எஸ்.பி தையல்நாயகி மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி எழுதிய நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி எனத் தொடங்கும் சினிமா பாடலை ராகம் போட்டு பாடினார். இதனை குழந்தைகளும் ஒருசேர பாடி மகிழ்ந்தனர்.
சினிமா பாடலின் முடிவில் மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் என்று பாடி முடித்த தையல் நாயகி, உங்களில் யார் எல்லாம் தலைவராக விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் பலரும் உற்சாகமாக கைதூக்கினார்கள்.
இதனை தொடர்ந்து ஊஞ்சபாளையத்தில் புதிதாக சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் டி.எஸ்.பி தையல்நாயகி சினிமா பாடல் பாடிய போது, சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.
- போலீஸ் நிலையம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே மாமுண்டி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் சக்திவேல் (வயது 29), மளிகை கடை வைத்துள்ளார்.
இவர் நண்பருடன் சேர்ந்து கடந்த 18-ந் தேதி இரவு காளிப்பட்டியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த முனுசாமி மகனான பெயிண்டர் நவீன்குமார் (27) என்பவரும் நண்பர்களுடன் வந்து மது அருந்தினார்.
அப்போது திடீரென நவீன்குமார் நண்பர்களுக்கும், சக்திவேல் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் கோஷ்டியினர், சக்திவேல் கோஷ்டியினரை சிறிது தூரம் துரத்தி சென்று தாக்கினர்.
அப்போது சக்திவேல் வயிற்றில், குளிர்பான பாட்டிலை உடைத்து நவீன் குமார் குத்தினார். இதில் காயமடைந்த சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுக்க அன்று இரவு 10 மணிக்கு மேல் சென்றனர்.
இந்த நிலையில், நவீன்குமார் தரப்பினரும் அங்கு வந்தனர். அப்போது, தங்களை தாக்க வருவதாக நினைத்து, நவீன்குமார் தரப்பினர் சக்திவேல் தரப்பினரை தாக்கினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் போலீஸ் நிலையம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
இதை பார்த்த போலீசார் இரு தரப்பையும் விலக்கி விட்டனர். ஆனாலும் அவர்கள் மாறி மாறி தாக்கினர். இதில் ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். போலீசாரும் அவர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நிலை தடுமாறினர். இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு வழியாக, மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து சக்தி வேல் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் நவீன்குமார், சத்யராஜ் (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது கெட்ட வார்த்தையால் திட்டுதல், கும்பலாக சேர்ந்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பவர்களை பீதி அடைய செய்துள்ளது.
- ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
- ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 408 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 328 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 98.31 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 97.63 அடியாக சரிந்துள்ளது.
- பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.
- ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன.
சேலம்:
மாறி வரும் நவீன தொழில் நுட்ப யுகத்துக்கு ஏற்ப சமீப காலமாக இணையவழிக் குற்றங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படு கிறார்கள்.
இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நம்ப வைத்து பணம் பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடக்கின்றன. இத்தகைய குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற மின்னஞ்சல், வாட்சப் என போலியான தகவல்களை அனுப்பு கின்றனர். இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்குக் எஸ்.எம்.எஸ்.அனுப்புகிறார்கள்.
செல்போன் டவர் அமைத்துத் தருகிறோம், ஆஸ்திரேலியக் கப்பலில் வேலை வாங்கித் தருகிறோம், முத்ரா திட்டத்தில் மானிய மாகக் கடனளிக்கிறோம், வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது அதைக் கொடுக்கிறோம், கொரோனா நிவாரணநிதி அளிக்கிறோம், வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம் என்று நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவார்கள். நம்பிக்கையை அதிகரிக்க போலியான மின்னஞ்சல், போலியான இணையதளத்தைக் கூடக் கொடுப்பார்கள்.
இவ்வாறாக பெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டு முன்பணம் அல்லது சேவைக் கட்டணம் அல்லது சுங்கக் கட்டணம் என்று ஏதாவது சொல்லி, பணத்தைக் கட்டச் சொல் வார்கள். நமக்கும் ஆசை கண்ணை மறைப்பதால் கேள்வியே கேட்காமல் கேட்கும் தொகையை கட்டிவிடுவோம். அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்வோம்.
சில நேரங்களில் பணமாகக் கேட்காமல் அறியாமையைப் பயன்படுத்த வங்கி அதிகாரியாக ஆதார் சரிபார்க்கிறோம், வருமான வரித்துறையினராக பான் சரிபார்க்கிறோம், ஆதார் - பான் அட்டை இணைக்கிறோம், தொலைத்தொடர்புத் துறையினராக கே.ஒய்.சி. சரிபார்ப்பு, கூரியர் வந்துள்ளது அடையாளத்தைச் சரி பார்க்கிறோம், கொரோனா தடுப்பூசி போடப் பதிவு செய்யச் சொல்லியோ கறாராகவும் பேசுவார்கள்.
இவர்களை நம்பி பல தகவல்களைக் கொடுத்தால் ஏ.டி.எம்.கார்டின் எண், ரகசிய எண் என்று நேரடியாகக் கொடுத்து ஏமாறுபவர்கள் உண்டு. சில நேரம் ஓடிபி எண் மட்டும் கொடுத்து ஏமாறுபவர்களும் உண்டு. அட்டை என்னிடம் தானே இருக்கு எப்படி ஏமாற்ற முடியும் என நினைக்கலாம். ஆனால் அட்டை இல்லாமல் அட்டை எண்ணுடன் ரகசிய எண் மட்டும் கொடுத்து, பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் குறுஞ்செய்தி கூட இல்லாமல் பணம் மாற்றமுடியும்.
வங்கியில் பணமில்லை என்றுகூட அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஓ.டி.பி. மூலம் கணக்கில் நுழைந்து, உங்கள் பெயரில் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நீங்கள் கொடுக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று மெல்லிய மிரட்டல்கள் வந்தாலும் இத்தகைய தகவல்களைப் பகிரவேண்டாம். வங்கியைத் தொடர்பு கொண்டு நிலையறிந்து செயலாற்ற வேண்டும்.
இதுபோன்ற இணையவழி குற்றங்களை தடுக்க அரசு சைபர் கிரைம் என்ற்ர பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. எனினும் குற்றச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இந்த சூழலில் சேலத்தில் வேலை தருவதாக எஸ்.எம்.எஸ்.அனுப்பி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி திவ்யா (வயது 36). இவரது செல்போனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த குறுந்தகவலை பார்த்து, அதில் வேலை கேட்டு மெயில் அனுப்பி உள்ளார்.
அதை தொடர்ந்து இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சில நிபந்தனைகளை பணம் செலுத்தி செய்தால், பகுதி நேர வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய திவ்யா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் செலுத்தி அதன் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி எந்த ஒரு வேலையும் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பாலாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வீரமணிகண்டன் (வயது 28). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை பார்த்து பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொண்டு உள்ளார். இவரும் அதே பாணியில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் பேச்சைக் கேட்டு ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளார்.
ஆனால் இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீர மணிகண்டன், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தினேஷ் (வயது 24). இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் முத்து நாயக்கன்பட்டி பர்ன் அண்ட் கோ அருகே வந்து கொண்டிருந்தார்.
- அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் எதிரே வந்த 3 வாலிபர்கள் தினேஷை நிறுத்தி அவசரமாக போன் செய்ய வேண்டும், சற்று உங்கள் செல்போனை தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மல்ல மூப்பம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த செல்வ ராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 24). இவர் நேற்று இரவு 9.30 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் முத்து நாயக்கன்பட்டி பர்ன் அண்ட் கோ அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் எதிரே வந்த 3 வாலிபர்கள் தினேஷை நிறுத்தி அவசர மாக போன் செய்ய வேண்டும், சற்று உங்கள் செல்போனை தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு தினேஷ் நம்பரை சொல்லுங்கள் நான் போட்டு தருகிறேன் என்று கூறியுள் ளார். அப்போது அந்த கும்பலில் ஒருவர் திடீரென தினேஷை தாக்கி அவரது கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 78). இவர் கடந்த 9-ம் தேதி காலை ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சதாசிவத்தை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதாசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
- பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனிவாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனி வாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.46 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து சீனிவாசன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
- போலியான, உணவுக்கு ஒவ்வாத கேடு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு சேலம் டி.ஆர்.ஓ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- தொடர்ந்து 43 சிவில் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த சோதனையில் கலப்படம், தரமற்ற, பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் போலியான, உணவுக்கு ஒவ்வாத கேடு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு சேலம் டி.ஆர்.ஓ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிவில் பிரிவின் கீழ் பதியப்பட்ட 43 வழக்குகளில் 3.7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ மேனகா உத்தரவிட்டார்.
அதில் அதிகபட்சம் ஜவ்வரிசி தொடர்பான 7 வழக்குகளில் 1.11 லட்சம் ரூபாய், நாட்டு சக்கரை தொடர்பான 7 வழக்கில் 71 ஆயிரம் ரூபாய், மசாலா பொருட்கள் தொடர்பான 7 வழக்கில் 45 ஆயிரத்து 500 ரூபாய், இனிப்பு வகை தொடர்பான 3 வழக்கில் 12 ஆயிரம் ரூபாய் உள்பட மொத்தம் 3.7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து 43 சிவில் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
- கர்நாடக மாநிலம் பெங்க ளூருக்கும், பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.
- இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி , ஓசூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்க ளூருக்கும், பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி , ஓசூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 25, 26 ஆகிய தேதியிலும், அடுத்ததாக ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படு கிறது.
அதன்படி வண்டி எண் 06211 கொச்சுவேலியி லிருந்து பெங்களூரு விஸ்வேஸ்வரயா (எஸ்.எம்.வி.டி.) ஆகிய ரெயில் நிலையத்திற்கு வருகிற 25-ந் தேதி மற்றும் ஜூலை 2-ந் தேதி கொச்சுவேலிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் செங்னூர், கோட்டயம், எர்னாகுளம் டவுண், திரிச்சூர் வழியாக கோவை ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு 1 மணி 32 நிமிடங்களுக்கு வந்தடையும்.
பின்னர் 1 மணி 35 நிமிடங்களுக்கு புறப்பட்டு 2 மணி 18 நிமிடங்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும், பின்னர் அங்கிருந்து 3 மணி 15 நிமிடங்களுக்கு கிளம்பி சேலத்திற்க்கு 4 மணி 12 நிமிடங்களுக்கும், தர்மபுரி ரயில் நிலையத்திற்கு 6 மணி 19 நிமிடங்களுக்கும், ஓசூர் ரயில் நிலையத்திற்கு 7 மணி 49 நிமிடங்களுக்கும், எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கும் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 06212 எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்திலிருந்து கொச்சுவேலிக்கு வருகிற 26 மற்றும் ஜூலை 3-ந் தேதி ரெயில்கள் செல்லும். பெங்களூரு எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஓசூர் ரெயில் நிலையத்திற்கு 2 மணி 19 நிமிடங்களுக்கும், தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு 3 மணி 48 நிமிடங்களுக்கும், சேலத்திற்கு 6 மணி 2 நிமிடங்களுக்கும், ஈரோடு ரெயில் நிலையத்திற்கு 7 மணி 5 நிமிடத்திற்கும், திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 7 மணி 53 நிமிடங்களுக்கும், கோவை ரெயில் நிலையத்திற்கு 8 மணி 45 நிமிடங்களுக்கும் வந்து சேரும். பின்னர் திருச்சூர், அலுவா, எர்னாகுளம், திருவல்லா, மாவலிக்கரா, காயன்குளம் வழியாக காலை 6 மணி 50 நிமிடங்களுக்கு கொச்சுவேலி சென்றடையும்.
இந்த ரெயில் 26-ந் தேதி மற்றும் ஜூலை 3- ந் தேதி மட்டும் இயக்கப்படும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- வாழப்பாடியை அடுத்த குறிச்சி கிராமத்தில் 2 சமூக மக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியை, வருவாய்த்துறை யூ.டி.ஆர். நில உடமை பதிவேடுகளில் நெடுஞ்சாலை புறம்போக்கு என வகைப்பாடு செய்தனர்.
- இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
வாழப்பாடி:
வாழப்பாடியை அடுத்த குறிச்சி கிராமத்தில் 2 சமூக மக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியை, வருவாய்த்துறை யூ.டி.ஆர். நில உடமை பதிவேடுகளில் நெடுஞ்சாலை புறம்போக்கு என வகைப்பாடு செய்தனர். இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்கு இலவச வீட்டு மனை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளை பலமுறை அணுகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து இப்பகுதி மக்கள், குழந்தைகள், கால்நடை களுடன் ஊர்வலமாக சென்று, பேருந்து நிறுத்தத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலை களுக்கு அருகே அமர்ந்து உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாயத்துறையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஓரிரு மாதங்க ளில் நிலஉடமை பதிவேடு களில் தேவையான மாற்றங் களை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.






