என் மலர்
சேலம்
- கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.
- இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். இதில், சிங்காரவேலு என்பவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்டனர். அப்போது ஆர்.ஐ.கீதா, வி.ஏ.ஓ சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.
- அணையிலிருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 328 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 235 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 97.63 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 96.94 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து இதே நிலையில் நீடித்தால், மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
- சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டின் பூட்டை உைத்து மர்ம நபர்கள் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
- சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 6 1/2 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மரவனேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வீட்டின் பூட்டை உைத்து மர்ம நபர்கள் 38 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், இன்று காலை இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய, கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித் (வயது 25), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சோமாசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குமரவேல் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனார்.
மேலும் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில், இந்த கொள்ளையர்கள் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் 6 1/2 பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார்.
- விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சேலம்:
சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி கொல்லர் தெரு பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 38). இவரது செல்போனில் வந்த பகுதி நேர வேலை விளம்பரத்தை பார்த்துவிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரூ.12,99,534 பணம் செலுத்தி பதில் அளித்துள்ளார்.
ஆனால் இவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வரதராஜன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சேலம் மெய்ய னூர் அர்த்தனாரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (37). இவரும் ஆன்லைனில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து ரூ.2,58,921 பணம் செலுத்தி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இவருக்கும் எந்த ஒரு வேலையும் கிடைக்காத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேந்திரன், இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
- அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை யில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் நேற்று சேலம் ஜங்சன், டவுன் ரெயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு ஓட்டலில் 15 வயதுக்கு மேல் 18 வயக்குட்பட்ட ஒரு வளரின பருவத்தினர் பணிபுரிவது கண்டபிடிக்கப்பட்டது. அந்த வளரின பருவத் தினரை அதிகாரிகள் மீட்டு குழந்தை தொழிலாளர் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது, 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்த ஒரு பணியிலும் அமர்த்துவதும் குற்றமாகும். மீறி பணியில் அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதம் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்றார்.
- கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.
- அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழ்–நாட்–டில் உள்ள 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் உள்ள பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் சேரு–வ–தற்–கான மாண–வர் சேர்க்கை கலந்–தாய்–வுக்கு விண்–ணப்–பிக்க அறி–வு–றுத்–தப்–பட்–டது. அதன்–படி, 164 கல்–லூ–ரி–களில் பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் இருக்–கும் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்–பங்–கள் பெறப்–பட்டு இருந்–தன.
விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அத–னைத் தொடர்ந்து முதல்–கட்ட கலந்–தாய்வு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்–தது.
முதல்–கட்ட கலந்–தாய்வு நிறைவு பெற்ற நிலை–யில், ஒரு நாள் இடை–வெ–ளிக்கு பிறகு, கடந்த 12-ந் தேதி முதல் 20-ந் தேதி (நேற்று) வரை 2-ம் கட்ட கலந்–தாய்வு நடத்தி முடிக்–கப்–பட்டு இருக்–கிறது.
முத–லாம் ஆண்டு வகுப்–பு–கள்
அந்த வகை–யில் 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் சேரு–வ–தற்கு நடத்–தப்–பட்ட இந்த 2 கட்ட கலந்–தாய்வு முடி–வில், 31 ஆயி–ரத்து 621 மாண–வர்–கள், 44 ஆயி–ரத்து 190 மாண–வி–கள் என மொத்–தம் 75 ஆயி–ரத்து 811 பேர் இடங்–களை தேர்வு செய்து இருக்–கின்–ற–னர். இவர்–களில் அரசு பள்ளி மாண–வி–கள் 21 ஆயி–ரம் பேர் வரு–கின்–ற–னர். அவர்–க–ளுக்கு அர–சின் புது–மைப் பெண் திட்–டத்–தின் கீழ் ஒவ்–வொரு மாத–மும் ரூ.1,000 நிதி–யு–தவி கிடைக்–கும்.
மொத்–தம் உள்ள 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–களில், 75 ஆயி–ரத்து 811 இடங்–கள் நிரம்–பி–யுள்ள நிலை–யில், மீத–முள்ள இடங்–கள் நிரம்–பும் வரை கலந்–தாய்வு நடத்–தப்–படும் என கல்–லூரி கல்வி இயக்–க–கம் அறி–வித்–துள்–ளது.
இந்த நிலை–யில் கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.
சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்து வருகிறார்கள்.
- தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவை தலைவர் நடராஜன் மற்றும் மாநில, மண்டல, கோட்ட, கிளை நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பணிமனையில் ஆய்வு நடத்தினர்.
- இதையடுத்து தொழிலாளர்களின் புகார் குறித்து பணிமனை மேலாளர் ஹரிபிரசாத், தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் போக்குவரத்து பணிமனைக்கு வந்த தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவை தலைவர் நடராஜன் மற்றும் மாநில, மண்டல, கோட்ட, கிளை நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பணிமனையில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து தொழிலாளர்களின் புகார் குறித்து பணிமனை மேலாளர் ஹரிபிரசாத், தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பணிமனையில் பணியில் உள்ள ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் 3 பேர் கட்டுப்பாட்டில் தான் மொத்த பணிமனை நிர்வாகமும் இயங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டு காலமாக இவர்கள் தங்களுக்கான பணியை செய்யாமல் அதிகாரிகள் போல் நடந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு கூடுதல் பணி சுமை வழங்கி வருகின்றனர். உடல்நிலை சரியில்லாத தொழிலா ளர்களை பணியில் அமர்த்தி பழி வாங்குகின்றனர். இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்திடவும், தொழிலாளர்களை பாதுகாத்திடவும் உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 211 கடைகளில் 17 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- இதில் மாநகராட்சியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் உள்ள 3 கடைகளும் அடங்கும்.
சேலம்:
தமிழகம் முழுவதும் 2500 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடிக்கு மேல் விற்பனையாகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் தினசரி ரூ.5 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ஒரே நாளில் ரூ.10 கோடி வரையும் விற்பனை ஆகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியால் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து மூடப்படுவதற்கான கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வந்தன.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 211 கடைகளில் 17 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் உள்ள 3 கடைகளும் அடங்கும்.
அருகருகே உள்ள கடைகள், நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படுத்தும் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் வழிபாட்டு தலங்களின் அருகில் உள்ள கடைகளும் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
- வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிபாளையம் அருகே எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் சண்முகம் (வயது 39) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அந்த வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சண்முகத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்கலைக்கழகம், மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பள்ளி படித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு மாவட்ட அள விலான திறன் போட்டிகள் அடுத்த மாதம் (ஜூலை) நடத்தப்பட இருக்கிறது.
- மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் களுக்கு, உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்கலைக்கழகம், மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பள்ளி படித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு மாவட்ட அள விலான திறன் போட்டிகள் அடுத்த மாதம் (ஜூலை) நடத்தப்பட இருக்கிறது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் களுக்கு, உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகத்திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகச் சிறந்த நிறுவனத்தில் பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆகும் செலவினத்தை அரசே மேற்கொள்ளும் என தெரிவித்துக்கொள்ளப்படு கிறது.
இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills/என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படு கின்றன.
10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப் படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இத்திறன் போட்டிகளில் சேலம் மாவட்ட இளை ஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறவும். மேலும் விபரங்களுக்கு சேலம் ஏற்காடு மெயின்ரோட்டில் அரசு ஐ.டி.ஐ.வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலக முகவரியை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம்புதூர் ராஜராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 63).
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காளியம்மாள் என்ற லட்சுமி (வயது 42). இவர் தனது முதல் கணவர் பழனியப்பன் என்பவரிடம் விவாகரத்து பெற்று விட்டு மகன், மகளுடன் வசித்து வந்தார்.
- கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மாளுக்கு மேட்டூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரகு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
சேலம் அருகே உள்ள சின்ன சீரகப்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் என்ற லட்சுமி (வயது 42). இவர் தனது முதல் கணவர் பழனியப்பன் என்பவரிடம் விவாகரத்து பெற்று விட்டு மகன், மகளுடன் வசித்து வந்தார்.
2-வது திருமணம்
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மாளுக்கு மேட்டூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரகு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
ரவுடி ரகு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வப்போது சின்ன சீரகாபாடிக்கு வந்து காளியம்மாளுடன் தங்கி உள்ளார்.
போன் எடுக்கவில்லை
இந்த நிலையில் காளியம் மாள் தங்கி இருந்த வீடு நேற்று வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவரது மகள் போன் செய்தும் எடுக்காததால், சேலம் அன்னதானபட்டி யில் வசிக்கும் சித்தி ரத்தினம் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் நேற்று இரவு சின்ன சீரகப் பாடி சென்று பார்த்தார்.
அப்போது வீட்டை திறந்தபோது உள்ளே காளியம்மாள் கொடூரமாக கத்தியால் கொலை செய்யப் பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீடு முழுவதும் ரத்தமாக கிடந்தது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கத்திகுத்து காயங்கள்
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் ஆட்டை யாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட காளியம்மாள் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கூட்டாளிகள்
போலீசாரின் தொடர் விசாரணையில், ரவுடி ரகு, காளியம்மாள் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேரும் வந்ததாக கூறப்படு கிறது.
அவர்கள் 3 பேரும் இரவில் வீட்டில் தங்கி உள்ளனர். காலையில் அவர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் ரவுடி ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் காளி யம்மாளை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி இருக்க லாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வரு கிறார்கள்.
வாலிபருடன் பழக்கம்
மேலும் காளியம்மாளுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் காளியம்மாளை ரகு கண்டித்ததும், அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரகுவை பிடித்தால் தான் கொலைக்கான உண்மை யான காரணம் தெரியவரும் என்பதால் அவரை போலீ சார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.






