என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 17 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது
- சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 211 கடைகளில் 17 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- இதில் மாநகராட்சியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் உள்ள 3 கடைகளும் அடங்கும்.
சேலம்:
தமிழகம் முழுவதும் 2500 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடிக்கு மேல் விற்பனையாகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் தினசரி ரூ.5 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ஒரே நாளில் ரூ.10 கோடி வரையும் விற்பனை ஆகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியால் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து மூடப்படுவதற்கான கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வந்தன.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 211 கடைகளில் 17 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சியில் 14 கடைகளும், கிராமப்புறங்களில் உள்ள 3 கடைகளும் அடங்கும்.
அருகருகே உள்ள கடைகள், நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படுத்தும் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் வழிபாட்டு தலங்களின் அருகில் உள்ள கடைகளும் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






