என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் போக்குவரத்து பணிமனையில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆய்வு
- தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவை தலைவர் நடராஜன் மற்றும் மாநில, மண்டல, கோட்ட, கிளை நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பணிமனையில் ஆய்வு நடத்தினர்.
- இதையடுத்து தொழிலாளர்களின் புகார் குறித்து பணிமனை மேலாளர் ஹரிபிரசாத், தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் போக்குவரத்து பணிமனைக்கு வந்த தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவை தலைவர் நடராஜன் மற்றும் மாநில, மண்டல, கோட்ட, கிளை நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பணிமனையில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து தொழிலாளர்களின் புகார் குறித்து பணிமனை மேலாளர் ஹரிபிரசாத், தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பணிமனையில் பணியில் உள்ள ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் 3 பேர் கட்டுப்பாட்டில் தான் மொத்த பணிமனை நிர்வாகமும் இயங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டு காலமாக இவர்கள் தங்களுக்கான பணியை செய்யாமல் அதிகாரிகள் போல் நடந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு கூடுதல் பணி சுமை வழங்கி வருகின்றனர். உடல்நிலை சரியில்லாத தொழிலா ளர்களை பணியில் அமர்த்தி பழி வாங்குகின்றனர். இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்திடவும், தொழிலாளர்களை பாதுகாத்திடவும் உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.






