என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறன் போட்டிகள்"

    • பல்கலைக்கழகம், மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பள்ளி படித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு மாவட்ட அள விலான திறன் போட்டிகள் அடுத்த மாதம் (ஜூலை) நடத்தப்பட இருக்கிறது.
    • மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் களுக்கு, உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பல்கலைக்கழகம், மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பள்ளி படித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு மாவட்ட அள விலான திறன் போட்டிகள் அடுத்த மாதம் (ஜூலை) நடத்தப்பட இருக்கிறது.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் களுக்கு, உலகத்திறன் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகத்திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு மிகச் சிறந்த நிறுவனத்தில் பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆகும் செலவினத்தை அரசே மேற்கொள்ளும் என தெரிவித்துக்கொள்ளப்படு கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills/என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படு கின்றன.

    10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப் படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    இத்திறன் போட்டிகளில் சேலம் மாவட்ட இளை ஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறவும். மேலும் விபரங்களுக்கு சேலம் ஏற்காடு மெயின்ரோட்டில் அரசு ஐ.டி.ஐ.வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலக முகவரியை அணுகி விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×