என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே பெண் கொலையில் ரவுடியை பிடிக்க வேட்டை
- காளியம்மாள் என்ற லட்சுமி (வயது 42). இவர் தனது முதல் கணவர் பழனியப்பன் என்பவரிடம் விவாகரத்து பெற்று விட்டு மகன், மகளுடன் வசித்து வந்தார்.
- கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மாளுக்கு மேட்டூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரகு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
சேலம் அருகே உள்ள சின்ன சீரகப்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் என்ற லட்சுமி (வயது 42). இவர் தனது முதல் கணவர் பழனியப்பன் என்பவரிடம் விவாகரத்து பெற்று விட்டு மகன், மகளுடன் வசித்து வந்தார்.
2-வது திருமணம்
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மாளுக்கு மேட்டூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரகு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
ரவுடி ரகு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வப்போது சின்ன சீரகாபாடிக்கு வந்து காளியம்மாளுடன் தங்கி உள்ளார்.
போன் எடுக்கவில்லை
இந்த நிலையில் காளியம் மாள் தங்கி இருந்த வீடு நேற்று வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவரது மகள் போன் செய்தும் எடுக்காததால், சேலம் அன்னதானபட்டி யில் வசிக்கும் சித்தி ரத்தினம் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் நேற்று இரவு சின்ன சீரகப் பாடி சென்று பார்த்தார்.
அப்போது வீட்டை திறந்தபோது உள்ளே காளியம்மாள் கொடூரமாக கத்தியால் கொலை செய்யப் பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீடு முழுவதும் ரத்தமாக கிடந்தது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கத்திகுத்து காயங்கள்
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் ஆட்டை யாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட காளியம்மாள் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கூட்டாளிகள்
போலீசாரின் தொடர் விசாரணையில், ரவுடி ரகு, காளியம்மாள் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேரும் வந்ததாக கூறப்படு கிறது.
அவர்கள் 3 பேரும் இரவில் வீட்டில் தங்கி உள்ளனர். காலையில் அவர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் ரவுடி ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் காளி யம்மாளை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி இருக்க லாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வரு கிறார்கள்.
வாலிபருடன் பழக்கம்
மேலும் காளியம்மாளுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் காளியம்மாளை ரகு கண்டித்ததும், அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரகுவை பிடித்தால் தான் கொலைக்கான உண்மை யான காரணம் தெரியவரும் என்பதால் அவரை போலீ சார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.






