என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொச்சுவேலியில் இருந்து ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில்
- கர்நாடக மாநிலம் பெங்க ளூருக்கும், பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.
- இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி , ஓசூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
கேரள மாநிலம் கொச்சுவேலியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்க ளூருக்கும், பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி , ஓசூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 25, 26 ஆகிய தேதியிலும், அடுத்ததாக ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படு கிறது.
அதன்படி வண்டி எண் 06211 கொச்சுவேலியி லிருந்து பெங்களூரு விஸ்வேஸ்வரயா (எஸ்.எம்.வி.டி.) ஆகிய ரெயில் நிலையத்திற்கு வருகிற 25-ந் தேதி மற்றும் ஜூலை 2-ந் தேதி கொச்சுவேலிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் செங்னூர், கோட்டயம், எர்னாகுளம் டவுண், திரிச்சூர் வழியாக கோவை ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு 1 மணி 32 நிமிடங்களுக்கு வந்தடையும்.
பின்னர் 1 மணி 35 நிமிடங்களுக்கு புறப்பட்டு 2 மணி 18 நிமிடங்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும், பின்னர் அங்கிருந்து 3 மணி 15 நிமிடங்களுக்கு கிளம்பி சேலத்திற்க்கு 4 மணி 12 நிமிடங்களுக்கும், தர்மபுரி ரயில் நிலையத்திற்கு 6 மணி 19 நிமிடங்களுக்கும், ஓசூர் ரயில் நிலையத்திற்கு 7 மணி 49 நிமிடங்களுக்கும், எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கும் சென்றடையும்.
இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 06212 எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்திலிருந்து கொச்சுவேலிக்கு வருகிற 26 மற்றும் ஜூலை 3-ந் தேதி ரெயில்கள் செல்லும். பெங்களூரு எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு ஓசூர் ரெயில் நிலையத்திற்கு 2 மணி 19 நிமிடங்களுக்கும், தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு 3 மணி 48 நிமிடங்களுக்கும், சேலத்திற்கு 6 மணி 2 நிமிடங்களுக்கும், ஈரோடு ரெயில் நிலையத்திற்கு 7 மணி 5 நிமிடத்திற்கும், திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு 7 மணி 53 நிமிடங்களுக்கும், கோவை ரெயில் நிலையத்திற்கு 8 மணி 45 நிமிடங்களுக்கும் வந்து சேரும். பின்னர் திருச்சூர், அலுவா, எர்னாகுளம், திருவல்லா, மாவலிக்கரா, காயன்குளம் வழியாக காலை 6 மணி 50 நிமிடங்களுக்கு கொச்சுவேலி சென்றடையும்.
இந்த ரெயில் 26-ந் தேதி மற்றும் ஜூலை 3- ந் தேதி மட்டும் இயக்கப்படும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.






