என் மலர்
சேலம்
- ஏற்காட்டில் நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
- கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஏற்காடு:
ஏழைகளில் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
அவர்கள் ஏற்காடு அண்ணாபூங்கா, லேடீஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ஆகியவற்றை பார்வையிட்டு படகு இல்லத்தில் படகில் சென்று ரசிப்பார்கள்.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் சீசன் களை கட்டும். பின்னர் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள், அரசு தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
மழை
கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் மழையின் காரணமாக கடுங் குளிர் நிலவி வருகிறது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகளவில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மலை பாதையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி மெதுவாக வந்து செல்கிறது.
இந்த நிலையில் சனி, ஞாயிறு, மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை யொட்டி நேற்று இரவு முதலே ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியது.
அலைமோதும் கூட்டம்
ஏற்காடு பகுதியில் இன்று அதிகாலை நிலவிய பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் காலை நேரத்தி லேயே சுற்றுலா பயணிகள் அதிகளவில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
தற்போது ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் ஏற்காடு களை கட்டியுள்ளது. ஏற்காடு பகுதிகளில் குளிரில் நடுங்கியப்படி சுற்றுலா பயணிகள் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, டெல்லி அப்பளம் ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டனர்.
- கடந்த 13-ந் தேதி மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
- இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தென் அழகாபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த 13-ந் தேதி இந்த மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அந்த மாணவனின் தந்தைக்கு நேற்று தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் நேற்று பகல் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றார்.
அங்கு மகனை அடித்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர்கள் திடீரென ஆசிரியையை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், மாவட்ட கல்வி அதிகாரி மோகன் ஆகியோரும் நடந்த சம்பவம் குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார்.
- தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் துட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் தங்கபாலு (26). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தினேஷ்குமார் (20) என்பவருடன் நேற்று மாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டிற்கு சென்றனர்.
மோட்டார் சைக்கிளை தங்கபாலு ஓட்டி சென்றார். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு இரவு 7.30 மணியளவில் சேலம் திரும்பினர்.
அப்போது கடும் பனி மூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடியே இருவரும் மலைப்பாதையில் சென்றுள்ளனர். 17-வது மற்றும் 18-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது தங்கபாலுவின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார். தங்கபாலு இடது காலில் முறிவு ஏற்பட்டு சாலையில் கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் மற்றும் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்கபாலுவை மீட்டு சிகிச்சை அளித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த தினேஷ்குமாரை தேடினர். இதில் அதிர்ஷ்டவசமாக தினேஷ்குமார் தலை மற்றும் கைகளில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு வைக்கப்படும்.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்துக்கும் மேலாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டத்தில் பயிரிட்டுள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2-வது கட்டமாகவும் மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது. மேலும் எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர் மட்டம் தினமும் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று 2-வது நாளாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
அணையில் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு வைக்கப்படும். அதன்படி பார்த்தால் அணையில் இருந்து இன்னும் 7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்ற முடியும். எனவே இன்னும் 7 நாட்கள் மட்டுமே டெல்டாவுக்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- பெண்கள் சிறையில் 350-க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்
- சிறை குடியிருப்பு வளாகத்தில் சிறை பணியாளர்களுக்காக உடற்பயிற்சி மையம்
சேலம்
சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் 350-க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய சிறை அருகிலேயே குடியிருப்பு வளாகம் உள்ளது.
இங்கு சிறை பணியாளர்களுக்காக புதிதாக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சிறைத்துறை கோவை சரக டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து சிறைப் பணியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டதை பார்வையிட்டார்.
தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் கூறியதாவது, சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் சிறை குடியிருப்பு வளாகத்தில் சிறை பணியாளர்களுக்காக உடற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தை சிறையில் பணியாற்றும் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறை பணி நேரம் முடிந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்ள வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறை பணியாளர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடற்பயிற்சி செய்யலாம்.
சிறைப் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், பணியின் போது எந்தவித அழுத்தமும் இல்லாமல் பணியாற்றவும் இந்த உடற்பயிற்சி மையம் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சேலம்
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-சேலம் மாவட்டம் வீர பாண்டி யூனியன் பகுதிக்கு உட்பட்ட பெரியபுத்தூர் அணையிலிருந்து ராஜ வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி பெரியபுத்தூர் வயக்காடு பகுதியில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பகுதியில் அமைக்கப்படும் மின்னழுத்த டவர் ராஜவாய்க்கால் கரையின் ஓரமாக அமைப்பதாக அதிகாரிகள் உறுதிமொழி கூறி இருந்தனர். தற்போது அதற்கு மாறாக அதிகாரிகள் வாய்க்காலின் நடுவே பில்லர் அமைத்து உயர்மின் அழுத்த டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வாய்க்காலின் நடுவில் பில்லர் அமைத்தால் கழிவுகளால் அடைப்புகள் ஏற்பட்டு விவசாய பாசனப்பகுதியில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறும். பாசன பகுதி முழுவதுமே விவசாயம் செய்ய வழி இல்லாத நிலை ஏற்ப டும் என்பதால் இந்த கோரிக்கை களை பரிசீலனை செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.
- முதல் போட்டியாக 3000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி
- ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம்
ஓமலூர்
சேலம் மாவட்டம் ஓமலூர் மைய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் ஓமலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி பூர்ணா ரோஸ்லின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனியப்பன், இணை செயலாளர் லியா கத்அலி, மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துக்கு மார் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
ஓமலூர், காடை யாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 46 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் கலந்து கொண்டு விளை யாடி வருகின்றனர்.
இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடை பெற்றது. முதல் போட்டியாக 3000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் 35 பள்ளிகளை சேர்ந்த மாணவி ஓடினர்.
இதில் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஓமலூர் வேலா சாமி செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நி லைப்பள்ளி 2-ம் இடமும், பாத்திமா மகளிர் மேல்நி லைப்பள்ளி 3-ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.
100 மீட்டரில் பாத்திமா பள்ளி ஹரிணி, தாராபுரம் அரசு பள்ளி கணிஷா 2-ம் இடம், பாத்திமா ரூபினா 3-ம் இடம் பிடித்தனர். மகளிர் தடகள விளையாட்டு போட்டிகளில் ஓமலூர் பாத்திமா அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் அதிக பதக்கங்களை வென்றனர். அதேபோல ஆண் அரசு பள்ளிகள் பிரிவில் பெரிய வடகம்பட்டி அரசு மேல்நி லைப்பள்ளி ஒட்டுமொத்த முதலிடத்தை பிடித்தது.
- ரூ.1000 பெற்ற குடும்ப தலைவிகள் உற்சாகம்
- தமிழக அரசின் உரிமை தொகை கிடைக்கப்பெற்ற குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி
சேலம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்கூட்டியே மகளிர் உரிமை தொகை வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டதால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர். குறிப்பாக இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த தொகை வைப்பு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்திகளை அவர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அறிவித்த நாளுக்கு முன்பாகவே ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சியில் திைழக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை வரவேற்று தமிழக அரசின் உரிமை தொகை கிடைக்கப்பெற்ற குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி பொங்க பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
சேலம்
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான காளியம்மாள் (வயது 40):
மகளிர் உரிமை தொகை எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடிதட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனை திட்டத்தின் மூலம் எனது குடும்பத்திற்கு பேரு உதவியாக இருக்கும். மாதம் முழுவதும் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தான் நான் வேலை செய்கிறேன்.தற்போது ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது . என்னை போன்ற ஏழை மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால் ஏழை மக்களின் குடும்பம் வளர்ச்சி பாதையில் செல்லும். இதனை என்றும் மறக்காமல் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
ஜாகீர் அம்மாபாளையம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த துப்புரவு ெதாழிலாளி கோகிலா (35):
வறுமையால் வாடி வரும் எனக்கு தற்போது தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைத்துள்ளது எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்னை போல எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த உதவி தொகையால் எனது குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும். நான் வாங்கும் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தில் மிகவும் கஷ்டமான சூழலில் இயக்கி வருகிறேன். எனவே இந்த உரிமைத்தொகை எனக்கு பேரு உதவியாக இருக்கும் என்பதால் என்றும் இந்த அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
கருங்கல்பட்டி
சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த தறி தொழிலாளி தங்கமணி:
எனது கணவரும் நானும் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறோம். இதில் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். இதனால் குழந்தைகளை கூட சரியாக படிக்க வைக்க முடியவில்லை. தற்போது அரசு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கியதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மனதார வரவேற்கிறேன். வாழ்க்கை தரம் மேம்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு பெண்கள் பெரும் வரவேற்பு அளிப்பார்கள்.
கொங்கணாபுரம்
கொங்கணாபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி பூங்கொடி:
நான் டெய்லராக பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் சாதாரண கூலி தொழிலாளி, இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்த குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை எனக்கு கிடைத்துள்ளது. தற்போதுள்ள பொரு ளாதார சூழ்நிலையில் மாதந்தோறும் தமிழக அரசால் எனக்கு வழங்கப்படும் இந்த 1000 ரூபாய் உரிமை தொகை எனக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. பால், உணவு பொருட்கள், உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்தவும் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்து வரும் என் போன்ற குடும்ப தலைவிகளுக்கு, தமிழக அரசின் இந்த உரிமை தொகை நிச்சயம் ஒரு பெரிய உதவியாகவே அமையும்.
குடும்ப தலைவி துர்கா தேவி, (விவசாய கூலி தொழிலாளி):
எங்கள் பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது இப்பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் வருமானம் மிகவும் குறைந்து போனது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற இக்கட்டான தருணங்களில் மாதந்தோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை கொண்டு குடும்ப செலவுகளை சமாளிப்பேன்.
ஓமலூர்
கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அருள்கோபி மனைவி சத்யா (22):
நாங்கள் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தோம். மகளிர் உரிமை தொகை வழங்குவதாக கூறினார்கள். விண்ணப் பித்திருந்தேன். நேற்று மாலை எனது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வந்து உள்ளதாக குறுந்தகவல் வந்தது. இதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது வழங்கிய மகளிர் உரிமைத்தொகை மாதம் 1000 ரூபாய் எங்களுக்கு பேர் உதவியாக இருக்கும். எங்கள் குடும்பத்தில் நான் எனது கணவன், 2 குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மாதத்திற்கு குடும்ப செலவுக்கு பெரும் உதவியாக இருக்கும் உரிமைத்தொகை வழங்கிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓமலூரில் பூ வியாபாரம் செய்யும் சகிலா:
நான் ஓமலூரில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எங்கள் குடும்பத்தில் 6 பேர் இருக்கிறோம். நாங்கள் பூக்கடை நடத்தி தான் எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். எங்கள் குடும்பத்திற்கு போது மான வருமானம் இல்லாததால் கஷ்டப்பட்டு வந்தோம். எங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைத்துள்ளது. இதனால் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து எங்கள் குடும்ப செலவுக்கு இது பேரு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
- தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி), தமிழ்நாடு மதமில்லா உலகம், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) தமிழ்நாடு பிரிவின் தமிழ்மாநில அவைத் தலைவரும், தமிழ்நாடு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர்.கே.நடராஜ் தலைமை வகித்தார். இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) மாநிலத் தலைவர் டாக்டர்.ஆர்.வெங்கடேசன், இந்திய குடியரசு கட்சி (எம்.சி.ஆர்) மாநிலத் தலைவர் எம்.சி.ராஜேந்திரன், இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.
இந்த தொடர் முழக்க போராட்டத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சரபங்கா நீர்பாசன ஓடை நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை ரத்து செய்து மீதமுள்ள காலி நிலத்தில் அனைத்து சமூக பயனாளிகளுக்கும் அரசு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி முழக்கமிட்டனர்.
இந்திய குடியரசு கட்சி (ஆர்.வி) சேலம் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், சேலம் மாநகரத் தலைவர் ராஜபிரசாத், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ரங்கசாமி, இந்திய குடியரசு கட்சி (எம்சிஆர்) சேலம் மாவட்ட தலைவர் பாலசுப்ர மணியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
- சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி சரவணா நகரை சேர்ந்தவர் கொல்லப்பட்டி குமார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ெதாழிலாளி பாபு (வயது 34) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு குமார், பாபுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு அடி நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாபுவை சமாதானம் பேசலாம் என கூறி அவரை ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே அழைத்து சென்றனர். அங்கு வைத்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேர் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பாபு உடன்படவில்லை. ஆக்கிரமித்த ஒரு அடி நிலத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தரப்பு பாபுவை அடித்து உதைத்து ஆயுதங்களால் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இந்த ெகாலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆயுள்தண்டனை
இது குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், பிரேம்குமார் உள்பட 9 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, ரத்தம் படிந்திருந்த சட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பு கூறினார். அதில் குமார், பிரேம்குமார் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை யொட்டி அவர்களது உறவினர்கள் கோர்ட்டில் கூடியிருந்தனர். குமார், பிரேம்குமார் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதும் சோகம் அடைந்தனர். 2 பேரையும் ஜெயிலில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
- சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
- தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது.
சேலம்:
சேலத்தில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெல்லை கிளை சார்பில் காலை 8 மணி மற்றும் இரவு 10 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
அதேபோல அரசு போக்குவரத்து கழகம் நெல்லைக்கோட்டம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் 2001 ஜனவரி 14 முதல் தினமும் மாலை 4.15 மணிக்கு சேலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோல் மறு மார்க்கத்திலும் பஸ் இயக்கப்பட்டது.
அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் 2014-ம் ஆண்டு பகலில் நெல்லைக்கு இயக்கிய பஸ் சேவையை நிறுத்திவிட்டது. 2021 இல் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓசூர் கிளை தொடங்கப்பட்ட நிலையில் சேலத்தில் இருந்து நெல்லைக்கு இயங்கிய பஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு நீட்டிக்கப்பட்டது .
இதனால் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும் களியக்காவிளை பஸ் மட்டும் நேரடி பஸ்சாக இயங்கியது. இந்த பஸ்சிற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல் நெல்லைக்கோட்ட நிர்வாகம் எந்த அறிவிப்பு இல்லாமல் சேலம் கலியக்காவிளை பஸ் சேவையை நிறுத்தியது. இதனால் சேலத்தில் இருந்து மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கண்ணன் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார்.
சேலம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசப்பாக்கம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40). இவர் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று சேலம் சூரமங்கலம் அருகே மற்றொரு லாரிக்கு லோடை மாற்றி உள்ளார். அப்போது லாரியில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






