என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 38 மி.மீ. மழை கொட்டியது
    X

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு: தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 38 மி.மீ. மழை கொட்டியது

    • சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான தம்மம்பட்டியில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான தம்மம்பட்டியில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பெய்த திடீர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு திரும்பினர்.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 14.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 52.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×