என் மலர்tooltip icon

    சேலம்

    • தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாள்.
    • தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சேலம்:

    தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்டச் செயலாளர்கள் ஜி.வெங்கடா ஜலம், ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிர மணியன், ஜெய்சங்கர், நல்லதம்பி, சித்ரா, மணி, ராஜாமுத்து, மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வ ராஜூ, ரவிச்சந்திரன், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பாலு, மாரியப்பன், சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், சார்பு அணி செயலாளர்கள் முத்து, சரவண மணி, ஜமுனாராணி, கனக ராஜ், வீரக்குமார், ராம்ராஜ், சுந்தரபாண்டி, அசோக்குமார், இளைஞரணி தலைவர் அருள்ராம், இணை செயலாளர் ஜிம் ராமு, பேரவை இணை செயலாளர் செங்கோட்டை யன், பொதுக்குழு உறுப்பினர் பட்டு ராமசந்திரன், ஜான் கென்னடி, மகளிரணி உமாராஜ், சரோஜா, லட்சுமி, கலா, முன்னாள் மண்டல தலைவர்கள் மோகன், துரை புவனேஸ்வரன், மெடிக்கல் ராஜா கவுன்சி லர்கள் ஜனார்த்தனன், மோகன பிரியா, வார்டு செயலாளர்கள் புல்லட் ராஜேந்திரன், பிரகாஷ், ஸ்ரீதர், கிருபாகரன், புல்லட்செந்தில், மேகலா பழனிசாமி, மார்க்பந்து, விநாயகம், ரஞ்சித், ஜெகதீஷ், ராஜாராம், அன்பு, சந்துரு, ரமளிசக்தி, சோடா கிருஷ்ணகுமார் மற்றும் சகாயம், தினேஷ், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பலர் வீட்டில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

    அப்போது விநாயகருக்கு எருக்கம் பூ, அருகம்புல் மாலையிட்டு, சுண்டல், கொழுக்கட்டை, பொரி, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவார்கள்.

    விநாயகர் சிலைகள்

    இதையொட்டி இன்று காலை முதலே சேலம் கடைவீதி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், பட்டைக்கோவில், ஆனந்தா காய்மார்க்கெட், சாலையோர கடைகள் மற்றும் அனைத்து உழவர் சந்தைகளிலும் எருக்கம் பூ மாலை, அருகம்புல், விநாயகர் சிலைகள் மீது வைக்கப்படும் அலங்கார குடைகள் மற்றும் தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய விநாயகர் சிலை முதல் பெரிய அளவிலான, பல்வேறு வடிவ சிலைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. சிலைகளின் அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனால் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்து ஆர்வமுடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர். பெரிய அளவிலான சிலைகளை மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி தங்கள் பகுதிகளில் வைத்து வழிபட கொண்டு சென்றனர்.

    பூஜை பொருட்கள்

    இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூஜைக்கு தேவையான பொருட்களான வெற்றிலை, பாக்கு, இலை, மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், அருகம்புல், விநாயகருக்கு உடுத்துவதற்கு பட்டு துணி, அலங்கார குடைகள் எருக்கம் பூ மாலை உள்ளிட்டவையும் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பிரசாதம் செய்வதற்கான பொருட்கள், பொரி, கடலை, வெல்லம் போன்ற பொருட்களை வாங்கவும் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

    இது மட்டுமின்றி பூக்கள், தேங்காய், வாழை தார் உள்ளிட்டவையும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    மல்லிகை கிலோ ரூ.1200

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சாமந்தி, சம்மங்கி, ரோஜா, மல்லிகை, முல்லை, அரளி உள்ளிட்ட பூ வகைகள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்குமல்லிகை-ரூ.800, முல்லை-ரூ.500, ஜாதிமல்லி-ரூ.280, காக்கட்டான்-ரூ.360, கலர் காக்கட்டான்-ரூ.360, மலைக்காக்கட்டான்-ரூ.360, அரளி-ரூ.140, வெள்ளைஅரளி -ரூ.150, மஞ்சள் அரளி -ரூ.150, செவ்வரளி -ரூ.200, ஐ.செவ்வரளி -ரூ.150, நந்தியாவட்டம் -ரூ.150, சி.நந்தியாவட்டம் -ரூ.300, சம்மங்கி -ரூ.140, சாதா சம்மங்கி -ரூ.140-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் ஆப்பிள்-ரூ.250, சாத்துக்குடி-ரூ.80, ஆரஞ்சு-ரூ.250, மாதுளை-ரூ.200, திராட்சை ரூ.100-க்கு விற்கப்பட்டது. இவை தவிர பேரிக்காய், கொய்யா சோளம் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    • நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் முதல்...

    மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுப முகூர்த்த நாள் ஆகும். இதனால் சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் வசதிக்காக சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று முன்தினம் மதியம் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் இரவில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து ஏறினர்.

    ரெயில்களில் கூட்டம் அலைமோதியது

    இதேபோல் சேலம் வழியாக வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களிலும் நேற்று முன்தினம் மாலை முதல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயிலில் முன்பதிவு இல்லாத ெபாது பெட்டிகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று நள்ளிரவு 1 மணி வரை பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

    அதேப்போல் ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் வெளியூரில்களில் இருந்து சேலத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்வோர் எண்ணிக்கையும், வெளியூர்களில் இருந்து சேலத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்தப்படி இருந்தது.

    குறிப்பாக இன்று சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிகப்படியான மக்கள் பயணம் செய்தனர்.

    போக்குவரத்து நெரிசல்

    இதைத்தவிர விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை யொட்டி பொருட்கள் வாங்குவ தற்காக சேலம் டவுன் ரெயில் நிலையம், ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தபடி இருந்தனர். அதே போல் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ரெயில்கள், பஸ்கள் மூலமாக சேலம் வந்தபடி இருந்தனர்.

    இதேபோல் கொளத்தூர், மேட்டூர், மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், சங்ககிரி, எடப்பாடி, கெங்கவல்லி, நங்கவள்ளி, ஏற்காடு, ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, வீராணம், வாழப்பாடி, அயோத்தியாப் பட்டணம் உள்பட உள்ளூர் பகுதி மக்களும் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடுவதற்கு பொருட்கள் வாங்கவும், வெளியூர்களுக்கு செல்லவும் பொதுமக்கள் குவிந்ததால் சுவர்ணபுரி, மெய்யனூர் ரோடு, புதிய பஸ்நிலையம், சேலம் 4 ரோடு, டி.வி.எஸ் பஸ் நிறுத்தம், கடைவீதி, பழைய பஸ் நிலையம், 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி, குகை, அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றது.

    கண்காணிப்பு

    போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தியும், கண்காணித்தப்படியும் உள்ளனர். கூட்டம் அதிக மாக உள்ள இடங்களில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாறைகலூர் பகுதியில் லாரியில் வந்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
    • அப்போது சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து இன்று காலை சேலம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் தாரமங்கலத்தில் இருந்து நங்கவள்ளி செல்லும் பிரதான சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

    சாலையை கடக்க முயற்சி

    பாறைகலூர் பகுதியில் லாரியில் வந்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மேட்டூர் வீரக்கல் அருகே கக்குவான் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் (45) மற்றும் அவரது அண்ணன் மகனான ஹரிஹரன் (22) ஆகியோர் விபத்தில் சிக்கினர்.

    தலை நசுங்கி

    இதில் தங்கவேல் தலை மீது பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிஹரன் பலத்த காயமடைந்தார்.

    இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஹரிஹரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டிரைவர் ஓட்டம்

    இதனிடையே பஸ்சை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமண நிகழ்ச்சி

    விபத்து குறித்து தகவல் அறிந்து தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான தங்கவேல் எல்.ஐ.சி. ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரிஹரன் இளங்கலை பட்டபடிப்பு முடித்து விட்டு தறி தொழில் செய்து வருகிறார். இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலத்திற்கு செல்லும் போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி சிலைகள் வைப்பதற்கான அனுமதியை பெற பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தை நாடினர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக பந்தல், மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள் , பூக்கள் அலங்காரம், ஒவ்வொரு நாளும் பூைஜ செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1915 ஆயிரம் விநாயகர் சிலைகள்

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டத்தில் மட்டும் 1050 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் சேலம் மாநகரில் மட்டும் 865 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு அந்த இடங்கயில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதவிர இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.

    3,200 போலீசார் குவிப்பு

    இதற்காக சேலம் புறநகர் பகுதியில் 2000 போலீசாரும், மாநகர் பகுதியில் 1200 போலீசாரும் என மொத்தம் 3,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிலை வைக்கப்படும் இடங்களில் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து போலீசாரும் இந்த இடங்களில் அவ்வப்போது வாகனங்களில் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் வீதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    16 இடங்களில் கரைக்க முடிவு

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைத்திட வேண்டும் என சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் சேலம் மாநகர எல்லைக்குட்பட்டவர்கள் மூக்கனேரியில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். மேலும் சேலம் ஊரக பகுதிகளான சங்ககிரி உட்கோட்டம், தேவூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கல்வடங்கம் பகுதியிலும், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சந்தைபேட்டை, பில்லுக்குறிச்சி, கோம்பைக்காடு ஆகிய பகுதிகளிலும், ஆத்தூர் உட்கோட்டம், தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி ஏரியிலும், ஆத்தூர் ஊரகம் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் முட்டல் ஏரி மற்றும் ஒட்டம்பாறை ஏரியிலும் சிலைகளை கரைத்திட வேண்டும்.

    மேட்டூர் உட்கோட்டம் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் காவேரி பாலம் பகுதியிலும், கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சென்றாய பெருமாள் கோவில் பகுதியிலும், கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் திப்பம்பட்டியிலும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கூனாண்டியூர், கீரைக்காரனூரிலும் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்

    ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் டேனீஷ்பேட்டை ஏரியிலும், வாழப்பாடி உட்கோட்டம, வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஆணைமடுவு அணை பகுதியிலும், கருமந்துறை போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் மணியார்குண்டம் ஏரியிலும் சிலைகளை கரைத்திட நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தவிர பிற இடங்களில் சிலைகளை கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
    • இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 5 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தாசில்தார் அறிவுடைநம்பிக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணை தமிழகத்தின் பல மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது குறுவை பயிர் அறுவடை செய்யும் தருவாயில் உள்ளதால் கடந்த சில நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய தண்ணீரை வழங்கவில்லை. சமீப காலமாக தமிழக எல்லையில் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    நேற்று காலையில் 2,047 கன அடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று காலையில் 2,244 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 41.05 அடியாக சரிந்தது. அணையில் 12.6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

    நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 6 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என தெரிகிறது. இதனால் மேட்டூர் அணையை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.
    • கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

    மாவட்டச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சண்முகம், சட்ட செயலாளர் மோகன், மகளிர் அணி அருள்மொழி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இதர எமிஸ் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும். பணி பாதுகாப்பு சட்டம்இயற்ற வேண்டும். ஆசிரியர்களின் பணி வரன் முறை, தகுதி தான் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற கருத்துக்கள் மீது உடனடி தீர்வு காண மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ் கார் ஓட்டுநராக இருந்தார்.
    • தனபால் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அழித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீ னில் வெளியே வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ் கார் ஓட்டுநராக இருந்தார்.

    தனபால் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை அழித்ததாக கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீ னில் வெளியே வந்தார்.

    இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நில மோசடி வழக்கில் கடந்த ஜுலை மாதம் 29-ந் தேதி தனபால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இந்த வழக்கிலும் ஜாமீன் பெற்றார்.

    இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களாக கொடநாடு வழக்கு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

    இதனிடையே கடந்த 14-ந் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு தனபால் விசாரணைக்கு ஆஜராகினார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

    • மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த உண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உண்ணாமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மழை

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அயோத்தியாப் பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் 30 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதே போல் ஆணைமடுவு, பெத்த நாயக்கன் பாளையம், சேலம் மாநகரம், ஏற்காடு, கரியகோவில், காடையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

    மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. சேலம் மாவட்டத்திலேயே அதிக பட்சமாக மேட்டூரில் 28.40 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதுமே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டம் முழுவதும் பெய்த அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆணை மடுவு-9, பெத்த நாயக்கன்பாளையம்-8, சேலம்-3.90. ஏற்காடு-3.20, கரிய கோவில்-3. காடையாம்பட்டி-3, ஆத்தூர்-1.20 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 59.70 மி.மீ.மழை கொட்டியது.

    • போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    சேலம்:

    தமிழக அரசின் சார்பில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முதல்-அமைச்சரின் அண்ணா விருது ஏ.எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 100 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலாவிற்கு அண்ணா விருதுடன், ரூ.10 ஆயிரம் வெகுமதியும், சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதுடன் ரூ.5 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்படுகிறது.

    இதேபோல் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள் முருகன் மற்றும் காளியப்பன் ஆகியோருக்கும் அண்ணா விருது, தலா ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கபட உள்ளது.

    ×