என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
    • ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் மேக கூட்டம் இருட்டாக திரண்டு மழை வருவது போல் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது. குறிப்பாக நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. திடீரென ஏற்காட்டில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது கனமழையாக சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இதை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ரசித்து குதூகலம் அடைந்தனர்.

    இதே போல் சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது. இன்று காலையும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம்-16.5, ஏற்காடு-25.2, வாழப்பாடி-13, ஆனைமடுவு-6, ஆத்தூர்-2, கெங்கவல்லி-4, தம்மம்பட்டி-3, ஏத்தாப்பூர்-7, கரிய கோவில்-13, எடப்பாடி-1, மேட்டூர்-3.6, ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.

    • அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.
    • மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 28,784 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது இன்று காலை முதல் வினாடிக்கு 31,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 22,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 31,000 கன அடியாக உள்ள நிலையில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன?.
    • வேறு யாரும் கூட்டணி குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

    பெத்தநாயக்கன்பாளையம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிபேட்டையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜ ராஜ சோழன் தலைமை தாங்கினார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல் தூங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தான் எழுந்துள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற நாடகத்தை தொடங்கி உள்ளார். இதில் மக்கள் ஏமாற கூடாது. மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப நாம் போராட வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன?. அவர்கள் வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தனர். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். இதற்காக தான் மக்களும் காத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை கோட்டைக்கு அனுப்ப வேண்டும், மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    2026-ல் அதிமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக கூட்டணி கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும். அதிமுக- பாஜக கூட்டணி ஒரு தெளிந்த நீரோடை, அதில் கல்லெறியாதீர்கள். தெளிந்த நீரோடையில் கல்லெறிபவர்கள் காணாமல் போவார்கள். கூட்டணி அரசு என அமித்ஷா கூறவில்லை. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி- அமித்ஷா பேசிவிட்டார்கள். வேறு யாரும் கூட்டணி குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் வர்த்தக அணி துணை செயலாளர் வரதராஜன், விவசாய அணி ஜெயசாமி, ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித்குமார், வி.பி.சேகர், மோகன், முருகேசன், மாவட்ட பாசறை தலைவர் வாசுதேவன், இணை செயலாளர் வீரபாண்டி பாலாஜி, தகவல் தொழில்நூட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீர்மட்டம் 119.50 அடியாகவும், நீர் இருப்பு 92.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
    • கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,485 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 17,235 கனஅடியாக குறைந்தது. இன்று காலையில் நீர்வரத்து 17,880 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நீர்மட்டம் 119.50 அடியாகவும், நீர் இருப்பு 92.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    • மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
    • கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, மேட்டூர் அணை வரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி 44-வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

    தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,485 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,235 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 119.56 அடியாகவும், நீர் இருப்பு 92.77 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    • தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
    • மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, மேட்டூர் அணை வரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி 44-வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த 5-ந் தேதி நடப்பாண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.

    தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

    நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 19,760 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,485 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 119.66 அடியாகவும், நீர் இருப்பு 92.93 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    • தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.
    • போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி மிக வலுவாகவே உள்ளது.

    * தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறதா என உதயநிதி பார்த்து கொள்ளட்டும்.

    * தனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது.

    * போகும் இடமெல்லாம் தி.மு.க. ஆட்சி இருக்கக் கூடாது என மக்கள் கூறுகின்றனர்.

    * அடுத்தாண்டு தேர்தல் வருவதால் தி.மு.க. நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.

    * உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்கிற பெயரில் நாடம் நடத்தப்படுகிறது.

    * 4 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் இப்போது குறைகளை கேட்கிறார்கள்.

    * அ.தி.மு.க.வுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணி வைக்க உள்ளன என்றார். 

    • விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி பகுதியில் உள்ள சுண்டக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகளிடம் வகுப்பு ஆசிரியர் தங்கவேல் (43) என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக தலைமை ஆசிரியருக்கு புகார் வந்தது.

    மாணவிகளின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் தங்கவேல் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அரசு பள்ளியில் 5 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் பிடித்து விசாரித்து வரும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் தங்கவேல் நெல்லை மாவட்டம் வடக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியில் நீடித்து வருகிறது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் அது 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் 16 கண் மதகு மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • தற்போது அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை இந்தாண்டில் 2 முறை நிரம்பியது. தற்போது அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் படிப்படியாக மழை குறைந்ததால் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் குறைந்தது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 58 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 16 கண் மதகு மற்றும் நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 27ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சீறிப்பாய்ந்து செல்வதால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
    • மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    மேட்டூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து நீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 58,500 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 40,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    • அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு அதிகளவில் வரத்தொடங்கியதால் கடந்த 29-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதையடுத்து உபரிநீர் அப்படியே 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் படிப்படியாக மழை நின்றதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. அதே நேரம் பாசனம் மற்றும் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இதற்கிடையே தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.72 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 31 ஆயிரத்து 624 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 35 ஆயிரத்து 860 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 16 கண் மதகு பாலம் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரை பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்தனர்.

    ×