என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியில் நீடித்து வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் அது 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் உபரிநீர் 16 கண் மதகு மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.






