என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பெரியபட்டினம் அரசு பள்ளியில் பொது சொத்துகளை பாதுகாக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பெரிய பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சொத்துக்களை பாதுகாப்பது குறித்து மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு மற்றும் சுயஒழுக்கம் குறித்த நல்லொழுக்க போதனை நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில், கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமை வகித்து, மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி பேசினார். இன்ஸ்பெக்டர் பாலமுரளி முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியர் தபசுமுத்து வரவேற்றார். கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா போக்சோ சட்டம் சம்பந்த மாக விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

    பெரியபட்டணம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி பேசும்ேபாது, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறு வதற்கு காரண மாக இருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு பெரியபட்டினம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாகவும், ஊர் மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்தார்.

    இதில் துணைத்தலைவர் புரோஸ்கான், பெரியபட்டி னம் ஜமாத் நிர்வாகி அன்சார் அலி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பாத்திமா, உறுப்பினர் அசன் அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கணித ஆசிரியர் முத்துக் குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பெரிய பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.

    • சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆதரவு என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகி விட்டது.
    • தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்தங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர்

    பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராம நாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு வந்தார். அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து அவரை ஊர்வ லமாக அழைத்துச் சென்று நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2024பாராளு மன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தாமரையில் வெற்றிபெறும் வகையில் மாநில தலைவர அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி பாடுபட்டு வருகிறோம்.

    தி.மு.க.வின் ஊழலை, அராஜக போக்கை எதிர்த்து பா.ஜ.க. போராடி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. ஆதரவு நிலை என்பது தவிடுபொடியாகிவிட்டது. தி.மு.க. அரசு தொடர்ந்து ஊழலை செய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஸ்லிம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க.வினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளோம். போலீசாரை நடவடிக்கை எடுக்கவிடாமல் தி.மு.க. அரசு தடுக்கிறது.

    தி.மு.க. அரசு ஆளுநரை இழிவு படுத்த முடிவு செய்து விட்டது. தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்த ங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். காவல்துறை மூலம் பா.ஜ.க.வினர் மீது அடக்குமுறையை பயன்படுத்துகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு அதிர்ச்சியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சிவராம கிருஷ்ணன், எம்.சி.ரமேஷ் ராணுவ அணிசெந்தூ 

    • ராமநாதபுரத்தில் வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளது.
    • மனை ஒதுக்கீடு செய்வதற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் வீட்டுமனை திட் டப்பகுதியில் உள்ள 72 மனைகள் மொத்த கொள் முதல் செய்வதற்கு 2022 நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    1,453 சதுரடி கொண்ட ஒரு மனையின் விலை ரூ.16 லட்சத்து 69 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி உள்ள பகுதி என்பதால் மனை வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3,093 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நேற்று ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள தனியார் மகாலில் குலுக்கல் முறையில் மனை கள் ஒதுக்கீடு செய்யும் முகாம் மதுரை கோட்ட மேற்பார்வை பொறியாளர் மூர்த்தி தலைமையில், செயற்பொறியாளர் பாண்டி யராஜ், கண்காணிப்பாளர் நாகராஜன், கலெக்டர் சார்பில் பார்வையாளராக உதவி ஆணையர் குருசந்தி ரன் முன்னிலையில் நடந்தது.

    மனை ஒதுக்கீடு செய்வ தற்கு குலுக்கல் நடந்தபோது வெளியூர் நபர்களின் விண்ணப்பங்கள் உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஒரே எண்ணில் 2 டோக்கன் இடம் பெற்றுள்ளதாக கூறி பொதுமக்கள் அதி காரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தொடர்ந்து கூச்ச லிட்டதால் குலுக்கல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் முன்னி லையில் வெளிப்படையாக குலுக்கல் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    • ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக திகழ வேண்டும் என கலெக்டர் பேசினார்.
    • ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் குறித்த குழுக்கள் உருவாக்கும் பணி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    மாணவ-மாணவிகள் முன்னிலையில் ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை என 4 வண்ணங்கள் கொண்ட குழுக்கள் உருவாக்கி அதில் மாணவ-மாணவிகள் தேர்வு செய்து அவர்களுக்குரிய ஆசிரி யர்களும் தேர்வு செய்து இக்குழு செயல்பட தொடங்கி உள்ளது.

    மேலும் இக்குழு வின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் கற்றல் ஊக்குவித்தல், விளை யாட்டு ஊக்குவித்தல் மற்றும் தனித்திறன் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒவ்வொரு குழுவாக பிரித்து அவர்க ளுக்கான வழிகாட்டுதல் பணியை கையாளும் பொழுது ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும். அதே போல் ஒரு குழு என்பது குறைந்த எண்ணிக்கை கொண்ட நபர்களாக இருப்பதால் அவர்களை ஊக்குப்படுத்தும் பணியும் எளிதாக இருக்கும்.

    அதேபோல் சக மாண வர்கள், சக மாணவிகள் வெவ்வேறு குழுவில் இருக்கும் பொழுது எந்த குழு முதலில் வருகிறது என்ற நிலைப்பாட்டுடனும் ஒவ்வொரு குழுவும் ஆரோக்கியமான இந்த போட்டியில் பங்கேற்று ஆசிரியர்கள் வழிகாட்டும் பயிற்சியை கையாளுவதுடன் தங்கள் திறமையையும், ஆர்வத்தையும் செயல்ப டுத்தும் பொழுது அங்கு தனக்கென ஒரு வெற்றி கிடைக்கும் வகையில் ஒரு மகிழ்ச்சி தோன்றும்.

    அந்த மகிழ்ச்சியின் விளைவு தான் ஒவ்வொரு வரின் திறமைக்கும் வழி காட்டியாக அமையும். அவ்வாறு தன் திறமையை வெளிப்படுத்தி கல்வி யிலும், விளையாட்டிலும் தனி திறனிலும் சாதனை படைக்கும் பொழுது அந்த சாதனையானது தனக்கு மட்டுமின்றி, தனக்கு வழிகாட்டி ய ஆசிரியர்களுக்கும், தான் படித்த பள்ளிக்கும் என பாராட்டுக்கள் கிடைப்பதுடன் அதன் மூலம் மாவட்டத்திற்கு பெருமையை தேடித்தரும் நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதா வது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இடையூறுமின்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையி லிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங் கண்ணி, மயிலாடு துறை, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர். புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 12,13,14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய ஊர்க ளுக்கும் மற்றும் கும்ப கோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஜன. 12-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை யும், அனைத்து முக்கிய. நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஜன. 12-ந் தேதிமுதல் 14-ந்தேதி வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேரா வூரணி, மன்னார்குடி, நன்னி லம், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய ஊர்க ளுக்கும், கோயம் பேடு டாக்டர் எம். ஜி. ஆர். பஸ் நிலை யத்திலிருந்து கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப் பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடு துறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்லும் வகையில் ஜனவரி 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரத்தில் 3 இளம்பெண்கள் திடீரென மாயமானார்கள்.
    • ராமநாதபுரம் பஜார், மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தவமணி. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தவமணியின் கணவர் இறந்து சுமார் 15 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் ஜான்சிராணி(வயது20). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் தீக்காயம் ஏற்பட்டு அதனால் அவர் வெளியில் செல்லாமல் வீட்டிலே தாயாருடன் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று தவமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது மகள் ஜான்சி ராணி மாயமாகி இருந்தார்.

    பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தவமணி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் பஹ்ருதீன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் இர்பானா (வயது20). சம்பவத்தன்று பஹ்ருதீன் மற்றும் அவரது மனைவியும் மருத்துவ சிகிச்சைக்கு திருச்சி சென்றனர். அப்போது இர்பானா மளிகை கடையை திறக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் கடையை திறக்காமல் மாயமானார். எங்கும் தேடியும் கிடைக்காததால் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் பஹ்ருதீன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மண்டபம் அருகே வேதாளை கிராமத்தைச் சேர்ந்தவர் மக்மூது. இவரது மகள் ஆயிஷத்துத்துல்பியா (வயது 20). இவர் நேற்று காலை திடீரென மாய மானார். மக்மூது அளித்த புகாரின் படி மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட கோரி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    கடலாடி பா.ஜ.க. சார்பில் முத்தாலம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக 2024-ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமையவும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட கோரியும் 124 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் வெற்றி மாலை, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவர்களின் சிலம்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொருளாளர் ஜெயராமலிங்கம், மாவட்ட தரவு மேலாண்மைச் செயலாளர் ஹரிஹரன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், மேகஜோதி, மூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர்கள் சபரிநாதன், முத்துமாரி, மாணிக்க மீனாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • 80 பயனாளிகளின் 104 மாடுகள், 473 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள், 175 கோழிகள் 3 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வேளாங்குளம் கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டன. சிறந்த கால் நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊராட்சி தலைவர் காளிமுத்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் ராமநாதபுரம் கால்நடை கால்நடை உதவி மருத்துவர் நிஜாமுதீன் தலைமையில் கால்நடை ஆய்வாளர் பூங்கோதை, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் திருவாசகம் ஆகியோர் கொண்ட குழுவினர் 80 பயனாளிகளின் 104 மாடுகள், 473 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள், 175 கோழிகள் 3 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • நீலகண்டி ஊரணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.200 லட்சம் மதிப்பீ ட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.செம்மங்குண்டு ஊரணியில் ரூ.103 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நடைபாதை அமைப்பு உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகளும், முகவை ஊரணியில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, கைப்பிடி கம்பி, சுற்றுச் சுவர், தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், கல் இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க ப்படவுள்ளது.இதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.

    தொடர்ந்து நீலகண்டி ஊரணியை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றி கரையில் போதுமான மரக்கன்றுகள் நட்டு தூய்மையாக வைத்துக் கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதேபோல் பல்ேவறு அரசு வளர்ச்சி திட்ட பணி களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்

    இந்த ஆய்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், நகர் மன்றத் தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரன், ராமநாதபுரம் வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், தமீம்ராஜா, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அபிராமம் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், பாப்பனம், நகரத்தார் குறிச்சி, பள்ளபச்சேரி, உடையநாதபுரம், விரதக்குளம், காடனேரி, பொட்டகுளம் உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இந்த பயிர்களை காட்டுப் பன்றி, மான்கள் சேதப்படுத்தி நாசம் செய்து வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

    பி்ன்னர் வன விலங்கு களிடம் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

    இதுகுறித்து விவசாயி விரதக்குளம் கர்ணன் கூறுகையில், மான், காட்டுப்பன்றி, முயல், நரி போன்ற வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிராமங்களில் நிலக்கடலை, பயிறு வகைகள், கேப்பை போன்ற பயிர்களை சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். வனத்துறையினர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • சாயல்குடி, கடலாடி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    • சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.



    சாயல்குடியில் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், மேலக் கிடாரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், நகர் இளைஞரணி செய லாளர் விக்னேஷ் ராம், சாயல்குடி நகர துணை செயலாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சித் தலைவர்கள் மங்களசாமி கன்னியம்மாள், சண்முகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் இளங்கோவன், வகிதா சகுபர், மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், வார்டு செயலாளர் கென்னடி, கிளைச் செயலாளர் மாரியூர் ஜமால், காசி, காவா குளம் முருகேசன், மேலக் கிடாரம் பழனிச்சாமி, ஒப்பிலான் இப்ராகிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நரிப்பையூர், கன்னிராஜ புரம், செவல்பட்டி, எஸ். தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    இதில் ஊராட்சித் தலைவர்கள் செஞ்சடை நாதபுரம் லிங்கராஜ், காணி ஒக்கூர் தென்னரசி செல்ல பாண்டியன், ஏ.புனவாசல் ராஜேந்திரன், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். தரைக்குடி முனியசாமி, டி. வேப்பங்குளம் முருகன், எஸ்.வாகைக்குளம் ஜெயலட்சுமி வடமலை, முன்னாள் உச்சநத்தம் ஊராட்சி தலைவர் பால கிருஷ்ணன், சாயல்குடி தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கடலாடி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆப்பனூர், பொதிகுளம், கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். கடலாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடலாடி, புனவாசல், ஓரிவயல், கருங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளை கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார்.

    ×