என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சார்பில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
- இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்
முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த 24-ந்தேதி எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்வர்ராஜா ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இன்று (17-ந்தேதி) எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் ஒட்டியுள்ள போஸ்டரில், தலைவா... நம் கட்சித் தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள்.
நாங்கள் கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்... என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராமநாதபுரத்தில் மலர் கண்காட்சி நடந்தது.
- மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே அச்சடிப்பிரம்பில் தோட்டக்கலை துறையின் மூலம் 2-வது மலர் கண்காட்சி நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி மலர் கண்காட்சியை திறந்து வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் நினைவு சின்னங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தோட்டக்கலைத்துறையின் மூலம் ராமநாதபுரம் நகர், அருகாமையில் அச்சடிபிரம்பு பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பாலை ஐந்திணை மரபணு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் பூக்கள் வரவழைக்கப்பட்டு ராமநாதபுரம், ராமேசுவரத்தின் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் கங்காரு, டைனோசர், திமிங்கலம், முதலை ஆகியவற்றின் உருவங்களை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. அதே போல் அப்துல்கலாமின் கண்டுபிடிப்பான பி.எஸ்.எல்.வி ராக்கெட் காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டதும், ராமேசுவரத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் போன்று காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்டது. அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி நறுமணம் கொண்ட திரவியங்களால் தயாரிக்கப்பட்ட யானை மற்றும் அகத்தியர் முழு உருவ சிலை நன்றாக உள்ளன. இத்தகைய மலர் கண்காட்சி மாவட்டத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன அலுவலர் பகவான் ஜெகதீஷ் சுதாகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அபிராமம் பகுதியில் பருத்தி நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- அதிக மகசூல் கிடைப்பதுடன், தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது.
அபிராமம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, அபிராமம் சுற்று வட்டார பகுதிகளில் எள், மிளகாயை தொடர்ந்து சிறுதானிய பயிர்களும், பயிறுவகைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருத்தி சாகுபடியில் விவசா யிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பருத்தி விதைப்புக்கு ஏற்ற தை, மாசி மாதம் என்பதால் கருகிய நெல் வயல்களில் உள்ள பயிர்களை கலைகொல்லி மற்றும் டிராக்டரில் உழவு செய்து அழித்துவிட்டு பருத்தி பயிர்களை நடவு செய்கின்றனர். பருத்தி விவசாயத்திற்கு தண்ணீர் தேவை இல்லாததால் முளைப்பதற்கு ஏற்ப வயலில் ஈரப்பதமும், இடை இடையே லேசான சாரல் மழையும், பெய்தாலே பருத்தி விவசாயத்தில் முழுமையான மகசூல் பெறமுடியும்.
மேலும் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால் அபி ராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருத்தி விதைப்பில் விவசா யிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கர்ணன், ராமு ஆகியோர் கூறுகையில், இந்த ஆண்டு நெல் சாகு படிக்கு போதிய தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் காலதாமதாகவும் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.இருந்தபோதிலும் பருத்தி விவசாயத்தில் அதிக மகசூல் கிடைப்பதுடன், தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது.
இதனால் தற்போது பெரும்பாலான கிராமங்களில் பருத்தி நடவு செய்யும் பணியில் அதிகமாக ஈடுபட்டுவருகிறோம் என்றனர்.
- ரெயிலில் மறந்து வைத்துச் சென்ற ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் அலங்கானூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராமச்சந்திரன் (வயது 70).இவர் பெரம்பலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் மனைவி முத்துலட்சுமியுடன் (60) நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். இன்று காலை 6 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்ததும் மனைவியுடன் இறங்கி விட்டார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமக்குடி ரெயில் நிலைய அதிகாரி யிடம் தகவல் தெரிவித்தார். அவர் ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ், போலீஸ்காரர் ஜலாலுதீன் ஆகியோர் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் ஏறி பார்த்தபோது கைப்பை அங்கு இருந்தது. அதை திறந்து பார்த்த போது ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவையும் பத்திரமாக இருந்தன.
இது குறித்து ராமநாதபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பரமக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமு மனைவியுடன் ராமநாத புரம் வந்தார். ெரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன் ராஜ், போலீஸ்காரர் ஜலாலு தீன் ஆகியோரிடம் நன்றி தெரிவித்து கைப்பையை பெற்று சென்றனர்.
போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- ராமநாதபுரத்தில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார்.
- ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி" அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க திரைப்படம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரையிடப்பட்டது.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், , உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சித்தார்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா கலெக்டர் தலைமையில் நடந்தது.
- முன்னதாக ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் \வரவேற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு சமத்துவ பொங்கல் விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரி ஜஹான் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான நிகழ்ச்சி நேற்று காலை 11 மணியளவில் சமத்துவபுரம் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகர், சித்தார்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரி ஜஹான் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார். முன்னதாக ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் \வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மகேஸ்வரி சசிகுமார், முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மைதீன், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் அலி, சித்தார்கோட்டை ஊராட்சி செயலர் முனியசாமி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத் தலைவர்கள், முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப் பெருமாள் நன்றி கூறினார்.
- முத்துப்பேட்டை, கீழக்கரை கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில், கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடை அணிந்து, சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி னர். தொடர்ந்து கல்லூரி அரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில், துணை முதல்வர் ஷேக் தாவூத் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஒருங் கிணைப்பாளர் கணேஷ் குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வந்த போது மாணவ மாணவியர்கள் பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டனர். விழாவை முன்னிட்டு கரகாட்டம்,ஒயிலாட்டம், கும்மியாட்டம், உரியடி, சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை கல்லூரி விரிவுரையாளர் மரியதாஸ் தொகுத்து வழங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் உமையாள் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி இயக்குனர் மருதாசல மூர்த்தி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.
- கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
- பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அனைத்து சமுதாய மக்களின் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவ னங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.
மாணவ-மாணவி களுக்கு பொங்கல் குறித்த ஓவியம் வரைதல், பானை அலங்காரம், "விவசாயம் காப்போம்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்த 590 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் கரும்புகள், தோரணங்கள் கட்டப்பட்டு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பால் பொங்குகின்ற நேரத்தில் மாணவிகள் மகிழ்ச்சியுடன் குலவையிட்டு பொங்கலை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கான வினாடி வினா போட்டி, ஆசிரியர் ஆசிரியைக ளுக்கான பல்வேறு போட்டி கள் நடந்தது.
மாலை யில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராகிம் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சமூக ஆர்வலர் சலிமுல்லா ஹ்கான், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் சேர்மன் சுந்தரம், ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் கபீர் வரவேற்றார்.
கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் உசேன், சொக்க நாதர் கோவில் குருக்கள் வன்மீகநாதன், கீழக்கரை தென்னிந்திய திருச்சபை ஆயர் விஜயகுமார், புனித அந்தோணியர் ஆலயம் பங்குத்தந்தை ரெமிஜியஸ், கீழக்கரை துணை வட்டாட்சியர் பழனிக்குமார், இயற்கை ஆர்வலர் மன்மோகன் சிங் ஆகியோர் பேசினர்.
பள்ளியின் தாளாளர் எம், எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தீப்பந்தம் சுழற்றி பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றார்.
விழாவில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர் செகானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகம்மது காசிம், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் எபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் செய்தனர்.
- முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது.
- அதிவேகமாக வந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன.
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த கொல்லங்குளத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தில் கிடை போட்டு ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வந்தார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநாவுக்கரசு தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். இதை தொடர்ந்து கோவிலாங்குளத்தில் இருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு கொல்லங்குளத்திற்கு புறப்பட்டார். அவர் இன்று காலை கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது. அதிவேகமாக வந்த அந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன. பலியான ஆடுகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த சாலை முழுவதும் ஆட்டின் சதைகள் மற்றும் ரத்தம் சிதறி கிடந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி திருநாவுக்கரசு பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பஸ் மோதியதில் 32 ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- முத்துப்பேட்டை கல்லூரி, நாகாச்சி பள்ளியில் தேசிய இளையோர் தின விழா நடந்தது.
- இந்த பள்ளி ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாட ப்பட்டது. கல்லூரியின் செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். ''இன்றைய இளை ஞர்களுக்கு சமூக வலை தளங்கள் பாதகமா? சாதகமா?'' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய ''இளைஞர் கையில் தான் எதிர்கால இந்தியா இருக்கிறது'' என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடந்தது.
பட்டிமன்றத்தின் நடுவராக நம்புகமலி இருந்தார். சொற்பொழிவில் லூப்ரின் பானு சிறப்பு பேச்சாளராக இடம் பெற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்கம் திட்ட அலுவலர் காளிஸ் பிரபு வரவேற்றார். உதவி பேராசிரியர் அமிர்தராணி நன்றி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சியில் ராம கிருஷ்ணா மடத்தின் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய இளையோர் தின விழா நடந்தது. ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தா தலைமை தாங்கினார். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
வட்டார போக்குவரத்து அதிகாரி சேக் முகம்மது, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி ஆகியோர் பேசினர். முதல்வர் கார்த்திக் நாராயண் வரவேற்றார்.
கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விவேகானந்தர் சிறப்புகளை எடுத்து ரைத்தார். தொடர்ந்து பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரை யாற்றிவிட்டு கப்பல் மூலம் பாம்பன் துறைமுகத்திற்கு வந்த போது, அவரை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் பாஸ்கர சேதுபதி எப்படி வரவேற்றார்? என்பதை மாணவர்கள் நாடகமாக நடித்துக் காட்டினர்.
இந்த பள்ளி ஆசிரி யர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ் கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வரு கின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ண த்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.
அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் வரை யிலும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
- தொண்டியில் பழுதடைந்த நூலக கட்டிடத்தை புனரமைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
- சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் சத்திரம் தெரு பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு நூலக துறை சார்பில் பொது நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறன் அதிகரித்தது.
அதன் பின்னர் இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து விட்டது. சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் வேறு வாடகை கட்டத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது. அந்த கட்டிடத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
எனவே தற்போது தொண்டி-மதுரை சாலையில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒரு வகுப்பறைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.
பள்ளி கட்டிடத்திற்குள் இயங்குவதால் இங்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்த முடியவில்லை. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் தொண்டி யில் உள்ள பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடிக்க வும், அதே இடத்தில் புதிதாக பொது நூலகம் கட்டவும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி கள் கிருஷ்ணகுமார், விஜயக்குமார் அமர்வு விசா ரித்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.
இதன் மூலம் தமிழகம் முழு வதும் உள்ள நூலகத்தின் நிலை என்ன? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் தொண்டி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பொது நூலக கட்டிடம் புனரமைக்கப்படும் எனவும், கைபேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிக்கும் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






