என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்லுப்பாட்டு நிகழ்ச்சி"

    • முத்துப்பேட்டை கல்லூரி, நாகாச்சி பள்ளியில் தேசிய இளையோர் தின விழா நடந்தது.
    • இந்த பள்ளி ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாட ப்பட்டது. கல்லூரியின் செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார். ''இன்றைய இளை ஞர்களுக்கு சமூக வலை தளங்கள் பாதகமா? சாதகமா?'' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், இன்றைய ''இளைஞர் கையில் தான் எதிர்கால இந்தியா இருக்கிறது'' என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடந்தது.

    பட்டிமன்றத்தின் நடுவராக நம்புகமலி இருந்தார். சொற்பொழிவில் லூப்ரின் பானு சிறப்பு பேச்சாளராக இடம் பெற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்கம் திட்ட அலுவலர் காளிஸ் பிரபு வரவேற்றார். உதவி பேராசிரியர் அமிர்தராணி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சியில் ராம கிருஷ்ணா மடத்தின் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய இளையோர் தின விழா நடந்தது. ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தா தலைமை தாங்கினார். கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.

    வட்டார போக்குவரத்து அதிகாரி சேக் முகம்மது, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி ஆகியோர் பேசினர். முதல்வர் கார்த்திக் நாராயண் வரவேற்றார்.

    கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விவேகானந்தர் சிறப்புகளை எடுத்து ரைத்தார். தொடர்ந்து பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரை யாற்றிவிட்டு கப்பல் மூலம் பாம்பன் துறைமுகத்திற்கு வந்த போது, அவரை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் பாஸ்கர சேதுபதி எப்படி வரவேற்றார்? என்பதை மாணவர்கள் நாடகமாக நடித்துக் காட்டினர்.

    இந்த பள்ளி ஆசிரி யர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.

    ×