search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரம்
    X

    பருத்தி நடவுப்பணியில் ஈடுபடும் விவசாயி.

    பருத்தி நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரம்

    • அபிராமம் பகுதியில் பருத்தி நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • அதிக மகசூல் கிடைப்பதுடன், தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது.

    அபிராமம்,

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, அபிராமம் சுற்று வட்டார பகுதிகளில் எள், மிளகாயை தொடர்ந்து சிறுதானிய பயிர்களும், பயிறுவகைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருத்தி சாகுபடியில் விவசா யிகள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது பருத்தி விதைப்புக்கு ஏற்ற தை, மாசி மாதம் என்பதால் கருகிய நெல் வயல்களில் உள்ள பயிர்களை கலைகொல்லி மற்றும் டிராக்டரில் உழவு செய்து அழித்துவிட்டு பருத்தி பயிர்களை நடவு செய்கின்றனர். பருத்தி விவசாயத்திற்கு தண்ணீர் தேவை இல்லாததால் முளைப்பதற்கு ஏற்ப வயலில் ஈரப்பதமும், இடை இடையே லேசான சாரல் மழையும், பெய்தாலே பருத்தி விவசாயத்தில் முழுமையான மகசூல் பெறமுடியும்.

    மேலும் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால் அபி ராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பருத்தி விதைப்பில் விவசா யிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கர்ணன், ராமு ஆகியோர் கூறுகையில், இந்த ஆண்டு நெல் சாகு படிக்கு போதிய தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் காலதாமதாகவும் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.இருந்தபோதிலும் பருத்தி விவசாயத்தில் அதிக மகசூல் கிடைப்பதுடன், தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படுகிறது.

    இதனால் தற்போது பெரும்பாலான கிராமங்களில் பருத்தி நடவு செய்யும் பணியில் அதிகமாக ஈடுபட்டுவருகிறோம் என்றனர்.

    Next Story
    ×