என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமத்துவ பொங்கல் விழா
    X

    பொங்கல் விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

    சமத்துவ பொங்கல் விழா

    • சித்தார்கோட்டையில் சமத்துவ பொங்கல் விழா கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • முன்னதாக ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் \வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு சமத்துவ பொங்கல் விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரி ஜஹான் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான நிகழ்ச்சி நேற்று காலை 11 மணியளவில் சமத்துவபுரம் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகர், சித்தார்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தரி ஜஹான் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார். முன்னதாக ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் -வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மகேஸ்வரி சசிகுமார், முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மைதீன், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜவகர் அலி, சித்தார்கோட்டை ஊராட்சி செயலர் முனியசாமி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத் தலைவர்கள், முஸ்லிம் ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராமநாதபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப் பெருமாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×