என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • கடலாடி அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே 42 ஆண்டு பழமையான அரசு பள்ளிக்கூடம் உள்ளது. அது தற்போது சேதமடைந்த நலையில் உள்ளது.

    இதனால் மாணவ- மாணவிகள் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்களுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். வகுப்பறையில் கருப்பு பேஜ் அணிந்து பாடங்களை கற்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலாடி அருகே ஆதஞ்சேரி கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிரா மத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடம் என்பதால் சேதமடைந்துள்ளது. எனவே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

    பல முறை ேகாரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இவர்கள் போராட்டத்துக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலோர பாதுகாப்பு படையினராலும், கடலோர பாதுகாப்பு குழுமத்தினராலும் படகுகள் சோதனையிடப்படும்.
    • கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் சஜாக் என்னும் பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை இந்திய கடலோர காவல் படையினரால் தொடங்கியது.

    மாராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்திய கடல்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவு வலை தடுப்பதற்கும், பாதுகாப்பினை பலப்படுத்திடவும் இந்திய கடலோர காவல்படையினரால் இன்று (20-ந் தேதி) காலை சஜாக் என்ற பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி,இரவு 8 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

    ஒத்திகையின்போது சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நியர்கள் படகுகளின் நடமாட்டம் குறித்து விபரத்தினை உடனடியாக தெரிவித்திடுமாறு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து மீனவ சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் கடலோர பாதுகாப்பு படையினராலும், கடலோர பாதுகாப்பு குழுமத்தினராலும் படகுகள் சோதனையிடப்படும் என்பதால் அசல் அடையாள அட்டைகள் மற்றும் படகு தொடர்பான ஆவணங்களை மீன்பிடிக்கச் செல்லும் போது உடன் எடுத்துச் செல்ல மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு ஒத்திகையில் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா். இதை முன்னிட்டு ராமநாதபுர மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடல் பகுதி முழுவதையும் இந்திய கடலோர காவல்படை தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    • நாளை அக்னிதீர்த்த கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அமாவாசை அன்று, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகின்றது. இந்த நிலையில் தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் எளிதாக புனித நீராட செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை அமாவாசையையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
    • வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ேவலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • பரமக்குடி தொகுதியில் நலத்திட்ட பணிகளை முருகேசன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்.
    • எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையையும் திறந்து வைத்தார்.

    பரமக்குடி

    பரமக்குடி நகராட்சி சார்பாக 17-வது வார்டு கொல்லம்பட்டறை தெருவில் போர்வெல் அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகராட்சி பொறியாளர் மீரானலி, உதவி பொறியாளர் சுரேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், சுகன்யா, கவிதா, துர்கா, வசந்த கல்யாணி, நகர துணைச் செயலாளர் வேலன், தெற்கு நகர் பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போகலூர் ஒன்றியம் குமுக்கோட்டை ஊராட்சி பூவிளத்தூரில் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஒன்றிய செய லாளர்கள் குணசேகரன் (மேற்கு), கதிரவன்(கிழக்கு), ஒன்றியக் குழு துணை தலைவர் பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை நடக்கிறது.
    • ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்கரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.

    கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கிறது.

    மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதைகளில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். மேலும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட், வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.

    இதுசட்ட விரோத மான மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொண்டியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு கடற்கரை மட்டுமே உள்ளது. மேலும் கடலில் சிறிது தூரம் விசைப்படகு நிறுத்த கட்டப்பட்ட ஜெட்டிபாலம் உள்ளது. அதுவும் பழு தடைந்துள்ளது.

    இதில் ஆபத்தை உணராமல் பலர் கடல் அழகை ரசிக்க ஜெட்டி பாலத்தில் நின்றும், தடுப்புச்சுவர் இல்லாத இடத்தில் கால்களை தொங்க விட்டும் உட்காரு கின்றனர். இதனால் அருகே உள்ள அழகப்பா பல்க லைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டண கடற்கரை பூங்காவில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். வெளியூர்களில் இருந்து வந்த விருந்தாளிகளும், சுற்றுலாப்பயணிகளும் கடற்கரையைச் சுற்றிப் பார்க்க வருகை தந்தனர். அங்கும் விளையாட ஊஞ்சல் கிடைக்காமல் பலர் மணலில் உட்கார்ந்து திரும்பிச் சென்றனர்.

    இதனால் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் தொண்டியில் உள்ள நீண்ட கடற்கரையை சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • நான் 100 வயது வரை வாழ்வேன் என்று நினைக்கவில்லை. இது இறைவன் கொடுத்த வரம்.
    • இன்றைய மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது. உணவில் முன்பு போல் சத்து இல்லை.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை தேவர். இவரது மனைவி ராஜாமணி (வயது 100), இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூலம் 52 பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் உள்ளனர்.

    ராஜாமணி தனது மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் முன்னிலையில் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கேக் வெட்டி தனது பேரன்-பேத்திகளுக்கு ஊட்டினார். அவரை கிராம மக்கள் அனைவரும் வாழ்த்தினர். இன்றைய காலகட்டத்தில் 50 வயது வரை வாழ்வது அரிதாக உள்ளது. அதிலும் கொரோனா போன்ற நோய் தொற்றுகளால் பலர் உயிரிழந்து விட்டனர். ஆனால் ராஜாமணி பாட்டி 100 வயதிலும் நல்ல ஆரோக்கியமாக உள்ளார். அவர் தனது 5-வது தலைமுறையை பார்த்து விட்டார்.

    ராஜாமணி பாட்டி தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடியது தொடர்பாக கூறும்போது, நான் 100 வயது வரை வாழ்வேன் என்று நினைக்கவில்லை. இது இறைவன் கொடுத்த வரம். எனது வாழ்நாளில் பல அனுபவங்களை பெற்று விட்டேன். இன்றைய மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது. உணவில் முன்பு போல் சத்து இல்லை. நான் 52 பேரன்-பேத்திகளை பார்த்து விட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எதற்கும் கவலைப்படாமல் இருந்தால் 100 வயது வரை வாழலாம். அதற்கு உடல் உழைப்பும் அவசியம் என்றார்.

    • அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.
    • சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் மகாதேவன், அவைத்தலைவர் மகேந்திரன் மாவட்ட பேரவை செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வெள்ளத்துரை வழங்கினார். இதில் ஒன்றிய மாணவர் அணி காளிமுத்து, ஊராட்சி செயலாளர்கள் நல்லமருது, பெருமாள், முனியசாமி, பேரவை துணைச் செயலாளர் கருப்பசாமி, கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடியில் அ.ம.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு தலைமை வகித்தார். நகர செயலாளர் சரிபு, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர்ஜெசிமா பானு, தொண்டர் அணி ராமசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் .அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் கடலாடி தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பாப்பாகுளம் பூமிநாதன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    • அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.
    • சங்க துணை தலைவர் செய்யது காதர் முன்னிலை வகித்தனர் .

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மற்றும் சாயல்குடியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. கடலாடியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், சேது பாண்டியன், ஞானம்மாள் மோகன், ஊராட்சித் தலைவர்கள் கடுகு சந்தை காளிமுத்து, கடலாடி ராஜமாணிக்கம் லிங்கம், மேலச்செல்வனூர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர்.

    கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் கொடி ஏற்றி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர் செயலாளர் முருகேஷ் பாண்டியன், கிளைச் செயலாளர் கிழவன், அங்குசாமி, மாரிமுத்து, வில்வத்துரை, சண்முகராஜா, வீராசாமி, லிங்கம், பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் சாயல்குடி யில் அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ், நகர் செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி அமிர்த பாண்டியன், செவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பால்பாண்டியன், பிள்ளையார்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் கதிரேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் செய்யது காதர் முன்னிலை வகித்தனர் .

    சாயல்குடியில் எம்ஜிஆர் படத்திற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் அதிபன் சக்கரவர்த்தி நிர்வாகிகள் மதி, அசோக், சவுந்தர்ராஜ், சண்முகராஜ், செல்வவேல், மாரியப்பன், ராஜகோபால், செல்லத்துரை, ஜெயசீலன் புல்லந்தை செந்தூர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்-மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அறிவுறுத்தலின்படி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர்-வழக்கறிஞர் முத்துமுருகன் ஏற்பாட்டில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் கவிஞர் ராமநாதன், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைசாமி, ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பாரதி நகரில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் நாரல் ஊராட்சி செயலாளர் நாரல் சுரேஷ், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துப்பாண்டியன், சத்துணவு பாஸ்கர், கழுகூரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபதி, புத்தேந்தல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி, தெற்குதரவை கிளை செயலாளர் திருமுருகன், சண்முகநாதன், சக்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆர்.எஸ்.மடை யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகர் சார்பில் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் விடுமுறை, சபரிமலை சீசன் முடிந்ததை முன்னிட்டு திரளான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் வழிபாடு செய்தனர்.
    • அக்னி தீர்த்க்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை கொடுத்தனர்.

    ராமேசுவரம்

    பொங்கல் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் அய்யப்பன் கோவிலில் மகரஜோதி முடிந்து ராமேசுவரத்திற்கு இன்று காலை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனம் மற்றும் பஸ்கள் மூலம் வந்தனர். அவர்கள் அக்னி தீர்த்க்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை கொடுத்தனர்.

    அய்யப்ப பக்தர்கள் அக்கினி தீர்த்த கடலில் புனித நீராடி, பின்னர் அனைத்து பக்தர்களும் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களுடன் நீராடினர். தொடர்ந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உள்பட அனைத்து சன்னதியிலும் பல மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். அதிகளவில் வந்த பக்தர்கள் கூட்டத்தால் ராமேசுவரம் பகுதியில் திருவிழா கோலம் போல் காட்சியளித்தது. 

    ×