என் மலர்
நீங்கள் தேடியது "கடலோர பாதுகாப்பு ஒத்திகை"
+2
- இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது.
- கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கடலோர காவல்படை வீரர்களே பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கியுடன் தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இரு குழுக்களாக மீனவர்கள் உதவியுடன் கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் கடலுக்கு சென்று மீனவர்கள் போர்வையில் எவரேனும் புதிய ஆட்கள் உள்ளனரா? என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 6மணி வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.
- மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
- இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது.
அதன்படி இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு ஆகிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 6 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் "சாகர் கவாச்" என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடலோர பாதுகாப்பு படையினராலும், கடலோர பாதுகாப்பு குழுமத்தினராலும் படகுகள் சோதனையிடப்படும்.
- கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் சஜாக் என்னும் பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை இந்திய கடலோர காவல் படையினரால் தொடங்கியது.
மாராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்திய கடல்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவு வலை தடுப்பதற்கும், பாதுகாப்பினை பலப்படுத்திடவும் இந்திய கடலோர காவல்படையினரால் இன்று (20-ந் தேதி) காலை சஜாக் என்ற பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி,இரவு 8 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
ஒத்திகையின்போது சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நியர்கள் படகுகளின் நடமாட்டம் குறித்து விபரத்தினை உடனடியாக தெரிவித்திடுமாறு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து மீனவ சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கடலோர பாதுகாப்பு படையினராலும், கடலோர பாதுகாப்பு குழுமத்தினராலும் படகுகள் சோதனையிடப்படும் என்பதால் அசல் அடையாள அட்டைகள் மற்றும் படகு தொடர்பான ஆவணங்களை மீன்பிடிக்கச் செல்லும் போது உடன் எடுத்துச் செல்ல மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஒத்திகையில் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்துகின்றனா். இதை முன்னிட்டு ராமநாதபுர மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடல் பகுதி முழுவதையும் இந்திய கடலோர காவல்படை தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.






