என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • மீனவ இளைஞர்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
    • தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

    ராமநாதபுரம்

    தமிழக கடலோர குழும ஆய்வாளர் கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், அவர்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பல் படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேர்ப்பதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப் படும் என்று முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தார்.

    அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலத் தில் நடத்தி முடிக்கப்பட்டது.

    2-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு நடப்பாண்டில் பிப்ரவரி-2023 மாத பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவே ற்கப்படுகின்றன.

    மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்மந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவல கங்களிலிருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வா ளர் அலுவலகங்களிலிருந்தும், மேலும் மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களி லிருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh?usp=sharing என்ற இணையதள முக வரியிலிருந்து பதி விறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மேற்படி பயிற்சி வகுப்புகள் 2023 பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு கடலூர், ராம நாதபுரம் மற்றும் கன்னியா குமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கடலோர மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்படும் பயிற்சி யாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூபாய் ஆயிரம் வீதம், பயிற்சிக்கால ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

    எனவே, பிளஸ்-2 வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேலும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
    • நிர்வாகிகள் தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    குறிப்பாக நடைபெற இருகின்ற இந்த இடைத்தேர்தலில் த.மா.கா-அ.இ.அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றுகிறது. எனவே த.மா.கா சார்பில் தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    1. தேர்தல் பணிக்குழு தலைவர் பி. விஜயகுமார் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா தலைவர்)

    2. ஆர்.ஆறுமுகம் (த.மா.கா மாநில துணைத் தலைவர்)

    3. விடியல் எஸ்.சேகர் (த.மா.கா மாநில பொதுச்செயலாளர்)

    4. எம்.யுவராஜா (த.மா.கா. மாநில இளைஞரணி தலைவர்)

    5. எஸ்.டி.சந்திரசேகர் (த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர்)

    6. சி.எஸ்.கவுதமன் (த.மா.கா. மாநில தேர்தல் குழு உறுப்பினர்)

    7. வி.பி.சண்முகம் (ஈரோடு தெற்கு மாவட்ட த.மா.கா தலைவர்)

    8. பிரகாஷ் ஜெயின் (த.மா.கா மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்)

    9. வி.கே.மணியன் (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்)

    10. சி.சம்பத்குமார் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா விவசாய அணி தலைவர்)

    11. எஸ்.கே.சின்னுசாமி (த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர்)

    12. சுந்தரசாமி (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்)

    13. உழவன் கொற்றவேல் (த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்)

    14. புவனேஸ்வரன் (ஈரோடு வட்டார த.மா.கா தலைவர்)

    15. கே.பி.ரபீக் (ஈரோடு மத்திய மாவட்ட தொழிற்சங்க தலைவர்)

    16. ஓ.கே.ஏ. கதிர்வேல் (ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா துணைத் தலைவர்)

    தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகள் பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என்று த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருப்புல்லாணி பகுதியில் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புல் லாணி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    கோரைக்கூட்டம் ஊராட்சி தன்ரம்பல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர், தினைக்குளத்தில் சைக்கிள் நிறுத்தம், மரைக்கா நக ரில் நிழற்குடை, பெரிய பட்டினத்தில் 63 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், ரேசன்கடை, வண்ணாங் குண்டு ஊராட்சி நேருபுரம் கிராமத்தில் கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    தினைக்குளத்தில் கலையரங்கம் கட்டவும், வண்ணாங்குண்டு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அடிக்கல் நாட்டினார். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைத்து கிரா மங்களிலும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மின்வாரிய செயற்பொ றியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சோமசுந்தரம், ராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ் கான்.

    எஸ்.டி.பி.ஐ. நகர் தலைவர் மீராசா, நகர் செயலாளர் பீர் மைதீன், எஸ்.டி.டி.யூ. நகர் தலைவர் இஜாஸ், ஹக் அம்பலம், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகர்மன்ற உறுப்பினர்கள் நசீருதீன், மீரான் அலி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், பெரியபட்டினம் தி.மு.க. செயலாளர் அன்சாரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அபிபுல்லா, ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தன், டி.கே.குமார், ரகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி.திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலை வர் கஜேந்திரமாலா முத்துகி ருஷ்ணன், வண்ணாங் குண்டு ஊராட்சி தலைவர் தியாகரா ஜன், ஜமாத் தலைவர் நிஜாப் கான், தி.மு.க.நிர்வாகி பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி டாஸ்மாக் கடை 2 மாதத்துக்குள் அகற்றப்படும் என சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
    • 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கூறி பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இந்த நிலையில் டாஸ்மாக் கடை முன்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து கீழக்கரை தாசில்தார் சரவணன் ஏற்பாட்டில் சமாதான கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் திருப்பு ல்லாணி கோவில் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து எஸ்.டி. பி.ஐ. கட்சி நிர்வாகிகள் விளக்கினர். இறைத்தொடர்ந்து 2மாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள் வதாக டாஸ்மாக் தாசில் தார் சேதுராமன் உறுதி அளித்தார். இது குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு வழங்கினர்.

    இதில் கீழக்கரை துணை தாசில்தார் பழனிக்குமார், கோட்ட ஆய அலுவலர் கல்யாண குமார் கீழக்கரை இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் பெரியபட்டினம் தலைவர் முகமது மீராசா, பொரு ளாளர் சையது இப்ராம்ஷா, கீழக்கரை நிர்வாகிகள் சுல்தான் சிக்கந்தர், சாதிக் அலி ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். 2 மாத காலத்திற்குள் கடையை அகற்றவில்லையெனில் நாங்கள் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் மூலிகை செடி வளர்த்த மாணவர்களை பாராட்டினர்.
    • பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு பள்ளி முழுவதும் பசுமையாக உள்ளது. அதே போல மாணவ, மாணவிகளும் தங்களது வீட்டுத்தோட்டங்கள் மற்றும் மாடித்தோட்டங்களில் மூலிகை செடிகளை வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.

    பலர் ஆர்வத்துடன் செடிகளை வீடுகளில் வளர்த்து வந்தனர். அதன்படி தாங்கள் வளர்த்த செடிகளை பள்ளிக்கு கொண்டுவந்த மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார். வகுப்பு தொடங்கும் முன்பு கடவுள் வாழ்த்து சமயத்தில் செடிகளை நன்கு வளர்த்த மாணவ, மாணவிகளை ஆசிரியைகள் சுபஸ்ரீ, புஷ்பா, அம்சத் ராணி, ரம்யா ஆகியோர் பாராட்டினர்.

    • தமிழ் பாரம்பரியமிக்க மொழி என ராமநாதபுரம் கலெக்டர் பெருமிதம் கொண்டார்.
    • தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அத்தகைய தமிழ் மொழியாவது அனைத்து துறைகளிலும் அனைத்து பதிவேடு பராமரிப்பிலும் இருந்திட வேண்டும். என்ற நோக்குடன் அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் 2 நாட்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சி மொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடத்துகிறது.

    தமிழ் மொழியில் கையொப்பமிடுதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல், கடிதங்கள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு முழுமையாக தமிழ் மொழியில் செயல்பெற்றிட அனைத்து துறைக்கும் அறிவுறுத்துவதுடன் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு சிறப் பாக தமிழ் மொழி யை கை யாளும் அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்று, நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது.

    பொதுவாக தமிழ்மொழி என்றால் எல்லோருக்கும் பிடித்த மொழியாகும். காரணம் என்னை போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வர்களாக இருந்தாலும் ஆட்சியாளர் என்ற முறை யில் மக்களிடம் கோரிக் கையை கேட்டு தமிழில் பேசும் பொழுது என்னை அறியாமலே என்னுள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த அளவிற்கு தமிழ்மொழி நேசிக்கக்கூடிய மொழியாக என்னை போன்ற எண்ணற் றோர் புகழ்ந்து வருகின்ற னர். அந்த அளவிற்கு பாரம் பரியமிக்க மொழிகளில் தமிழ்மொழி உள்ளது என்பது எல்லோருக்கும் பெருமை வாய்ந்த ஒன்றாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, தமிழ் வளர்ச்சித்துறை உதவி பேராசிரியர்கள் கீதா மாணிக்க நாச்சியார், பழனியப்பன், காளிஸ் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் த.மு.மு.க. சார்பில் ரூ.1.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநில துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
    • அனைத்து சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு அவசர தேவைக்கு 158 பேருக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் நிருபர் களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது கடந்த ஆண்டு மருத்துவ உதவியாக ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம், சிறு தொழில் உதவி ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம், வீடு கட்டுவதற்கு ரூ. 35 ஆயிரம், உயர் கல்வி உதவி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம், விதவை மாதாந்திர குடும்பச் செலவுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம், கல்வி உதவி ரூ. 2 லட்சத்து 96 ஆயிரம், கல்லூரியின் நிர்வாக செலவு ரூ. 7 லட்சம், அனைத்து சமுதாய மக்களுக்காக புதிய ரூ. 26 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், குடும்ப நிவாரண நிதி ரூ.1 லட்சம் உதவி, வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் ரூ. 87 லட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதில் 306 பேர் கடன் பெற்று பல்வேறு தொழில் களை மேற்கொண்டு தற்போது அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது. மேலும் பல்வேறு வகையான உதவிகளின் மூலம் த.மு.மு.க, சார்பில் கடந்த ஆண்டுரூ.1.38 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    அனைத்து சமூக மக்களுக்காக ரத்ததானம், மருத்துவ முகாம் சேவை யாற்றிய தமுமுக தொண்டர் களை கவுரவிக்கும் வகை யில் மனிதநேய சேவை செய்த ராமநாதபுரம் த.மு.மு.க.விற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் ராமநாத புரம் மருத்துவ கல்லூரி சார்பில் இரண்டு மனிதநேய விருதை வழங்கினர். அனைத்து சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு. அவசர தேவைக்கு 158 பேருக்கு ரத்த தானம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது த.மு.மு.க., ம.ம.க. மாவட்ட தலைவர் பிரிமியர் இபுராஹிம், ம.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆஷிக் சுல்தான், அப்துல் ரஹீம், பொருளாளர் ஹமீது சபிக் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தை அமாவாசை தினத்தன்று ராமேசுவரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தருவார்கள்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தை அமாவாசையான நாளை 21-ந்தேதி (சனிக்கிழமை) தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தரு வார்கள். தை அமா வாசையை முன்னிட்டு இன்று (20-ந் தேதி) மதியம் முதல் நாளை இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ராமேசுவரம் நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் பஸ் நிலையத்திலிருந்து சிவகாமிநகர், சல்லிமலை, ரெட்டைப்பிள்ளையார் கோவில் தெரு, சவுந்தரியம்மன் கோவில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி கோவில் வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

    அங்கிருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் கோவில் மேற்குவாசல் வழியாக திட்டக்குடி வந்து பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். தனுஷ்கோடி செல்லும் வாகன ங்கள் திட்டக்குடி வந்து தேவர் சிலை ரெயில்வே பீடர் ரோடு வழியாக செல்ல வேண்டும். தனுஷ் கோடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் ரெயில்வே பீடர் ரோடு, வண்ணார் தெரு, டவுன் போலீஸ் நிலையம், பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

    ராமேசுவரம் பஸ் நிலையம், பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து வாகனங்கள் நிறுத்துமிடம் வரை சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்ற செயல்களை தடுத்து கண்காணிக்கும் விதமாக ராமேசுவரம் கோவிலை சுற்றிலும், நகரின் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    ராமேசுவரம் கோவில், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
    • அபிராமம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரேசன்கடை கடந்த சில வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த ரேசன்கடை மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் குடும்ப அட்டைதாரர்கள பயனடைந்து வருகின்ற னர். ரேசன்கடை வாடகை கட்டிடத்தில் செயல்படு வதால் அடிக்கடி ரேசன் கடையை இடமாற்றம் செய்து வருகின்றனர்

    இதனால் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் முதிய வர்கள், மாற்றுதிற னாளிகள், பெண்கள் என அனைவரும் அலைக்கழிக்கப்படு கிறார்கள். எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அபிராமம் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுெதாடர்பாக சமூக ஆர்வலர் அருணாச்சலம் கூறுகையில், அபிராமம் பேருராட்சி பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 2 ரேசன் கடைகளும், ராம்கோ மூலம் ஒரு ரேசன் கடையும் என மொத்தம் 3 ரேசன்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    3 ரேசன்கடைகளிலும் 2000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ரேசன்கார்டுகள் உள்ளன. இந்த 3 கடையும் வாடகை கட்டிடத்தில்தான் இன்றுவரை செயல்பட்டு வருகின்றன.

    எனவே அனைவரும் பயனடையும் வகையில் 3 ரேசன் கடைகளையும் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைத்து தர ேவண்டும் என்றார்.

    • கார் மோதி மீன் வியாபாரி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் வீரசெல்வமுத்து (வயது 25), மீன் வியாபாரி.

    சம்பவத்தன்று திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டிணத்திற்கு மீன் வியாபாரம் செய்ய வீரசெல்வமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சம்பை பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீரசெல்வமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வீரசெல்வமுத்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து தேவிபட்டினம் போலீசில் இறந்த வாலிபரின் தந்தை ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் காரை ஒட்டி வந்த தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை வேலை நாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்களநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெற்றதை முன்னிட்டு 6.1.2023 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 'உள்ளூர் விடுமுறை" அறிவிக்கப்பட்டது.

    அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 சனிக்கிழமை வேலை நாளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 21.1.2023 தை அமாவாசை என்பதால் 21.1.2023 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக 28.1.2023 சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 28.1.2023 அன்று வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (21-ந்தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும்.

    பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக தை அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும். அக்னிதீர்த்தக்கடல் பகுதியி லுள்ள மண்டகப்படியில் இருந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்சமுர்த்திகளுடன் கருட வாகனத்தில் ராமர் புறப்பாடு நடைபெறும் என்று கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.

    தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவ ரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வசதிக்காக ராமேசுவரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை ஆயிரம் போலீசாரை நியமித்து பாதுகாப்பு அளிக்கவும், நகர் முழுவதும் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவில் 4 ரத வீதிகளில் காமிரா அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    ×