என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரத்தில் இன்று முதல் ரோபோட்டிக் கண்காட்சி நடக்கிறது.
    • இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் சார்பில் ரோபோட்டிக் பொருட்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. பொருட்காட்சியில் குழந்தை களை மகிழ்விக்க மாபெரும் பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற எண்ணற்ற பொழுது போக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாவிற்கு ருசியாக வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை யாக பொருட்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம். பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு கூப்பன் வழங்கி தினந்தோறும் 50 நபர்களுக்கு அழகிய சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் பொருட்காட்சி வளாகத்தில் உள்ள வித விதமான 20 வகையான ராட்டினங்களில் விளையாட கட்டணங்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில், நாளை 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
    • இதில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை (26-ந் தேதி) அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தை ஒப்பிட்டு விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிரதமரின் குடியிருப்பு திட்ட பயனாளிகள் குறித்து விவாதித்தல். அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமரின் கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் போன்ற பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதுகுளத்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
    • ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொந்தம்புலி கிராமத்திற்கு 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவித்து வந்தனர். சித்திரங்குடி-பொந்தம் புலி கிராமத்திற்கு இடையில் 150 மீட்டர் தூரம் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை அகற்ற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பரமக்குடி சப்-கலெக்டர்அப்தாப் ரசூல் தலைமையில் தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏனாதி ஊராட்சி பொந்தம்புலி கிராமத்திற்கு முதுகுளத்தூர்-கமுதி நெடுஞ்சாலையில் இருந்து சித்திரங்குடி கிராமத்தில் 150 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி. மூலம் பழுதடைந்த மேல்நிலை தண்ணீர்தொட்டியை அகற்றும் போது தண்ணீர் தொட்டி ஜே.சி.பி. மேல் விழுந்தது. இதில் அதன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 'புறம்போக்கில் இருந்த புளிய மரத்தை ஏலம்விட சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏனாதி கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சித்திரங்குடி வி.ஏ.ஓ. பழனி உள்பட வருவாய்த்துறையினர் இருந்தனர்.

    • திருப்புல்லாணியில் கட்டுமான பயிற்சியை கிராம பெண்கள் பெறுகின்றனர்.
    • தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர்களுக்கான சமுதாயத்திறன் பள்ளியின் மூலம் 30 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கட்டிட கட்டுமான தொழில் பயிற்சிக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்ட் உரை தயாரித்தல், சிமெண்ட் செங்கல் தயாரித்தல் மற்றும் ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படு கின்றன.

    தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொழில் திறன் பயிற்சி பெற்று வரும் மகளிர் குழுவிடம் தொழில் திறன் பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, மண்டபம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் 143 கிராமங்கள் பங்கு பெறும் வகையில் 1362 மகளிர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொத்தனார் தொழில் திறன் பயிற்சி பெற்று வரும் மகளிர் மிக நேர்த்தியாக நல்ல முறையில் பயிற்சி பெற்று உள்ளது என்பது பாராட்டத்தக்க கூடியதாகும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் பாஸ்கரன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் குமார், திருப்புல்லாணி ராஜேந்திரன், கணேஷ் பாபு, உதவி திட்ட அலுவலர் கீர்த்திகா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் இலை சுருட்டல் மற்றும் வேர் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
    • இந்த முறையை செயல்படுத்தினால் இலை சுருட்டல் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடலாம் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டில் சுமார் 850 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பூ பூக்கும் தருணத்தில் உள்ள மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய் பரவி வருகிறது. அதனால் சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அபிராமம் விவசாயி கூறுகையில், இந்த ஆண்டு பருவகாலத்தில் போதிய மழை இல்லததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பொருளாதார கஷ்டத்தில் சிரமப்படுன்றனர்.

    இந்த நிலையில் மிளகாய் செடியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இலை சுருட்டல், வேர் பூச்சி போன்ற நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மிளகாய் விவசாயத்தில் பெரிய நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இது சம்பந்தமாக தோட்டக்கலை துறையினர் மிளகாய் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து தோட்டகலைத் துறையி னரிடம் கேட்ட போது, தற்போது பனி மற்றும் குளிர் காலம் என்பதால் பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் இலை சுருட்டல் மற்றும் வேர் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.

    15 நாட்கள் இடைவெளியில் 2 முறை மருந்தை தண்ணீரில் கலக்கி ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும். இந்த முறையை செயல்படுத்தினால் இலை சுருட்டல் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடலாம் என்றனர்.

    • கவினா சி.பி.எஸ்.சி. பள்ளியில் உலகத்தரம்வாய்ந்த நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மேலும் விடுதி வசதியும் வருகிற 27-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கவினா சி.பி.எஸ்.சி. பள்ளியில் உலகத்தரத்தில் நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவ மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு நீச்சல் போட்டிகளும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பள்ளியில் குதிரை பயிற்சி, சிலம்பம், யோகா உள்பட விளையாட்டு பயிற்சிகள், ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

    நீச்சல்குளம் பற்றி பள்ளியின் தாளாளர் கண்ணதாசன் கூறுகையில், நீச்சல்குளத்தை பராமரிக்க ஒரு மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் செலவாகிறது. விடுமுறை தினங்களில் பொதுமக்கள் நீச்சல்குளத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி வரை உள்ள இந்த பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் விடுதி வசதியும் வருகிற 27-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. இங்கு உலகத்தரத்தில் பாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் கலெக்டர் பங்கேற்று தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 'முகவை சங்கமம்" என்னும் 5-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுடன் புத்தகத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவு வருகை தந்து புத்தகங்கள் வாங்கிச் செல்லும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மேலும் புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரங்குகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் தங்கள் துறையின் மூலம் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் வழங்க வுள்ள நலத் திட்டங்களின் விவரம் குறித்து ஒவ்வொரு நாளும் வருகை தரும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து அரசின் திட்டங்களை பெறுவதற்கு துறை அலுவலர்கள் உறு துணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டணம் காத்தான், பனைக்குளம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணைமின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை இருக்கும்.

    பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம், பட்டணம்காத்தான், வாணி, காரிகூட்டம், சாத்தான்குளம், கழுகூரணி, குடிசை மாற்று குடியிருப்பு, ஏ.ஆர். குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம்நகர் ஆகிய பகுதிகளிலும் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், ரெட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே. வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி. ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர் ஆகிய பகுதிகள்.

    இந்த தகவலை ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரித்துள்ளார்.

    • அகதிகளாக வந்த அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
    • தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து பாரதிதாசனிடம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

    இதனால் அங்கு நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்களில் பலர், அங்கு வாழவழியின்றி தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கினர்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்தே பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலங்கையில் இருந்து வெளியேறி கடல் மார்க்கமாக படகுகளின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தனர்.

    இலங்கையில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழவழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததாகவே அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் 'கியூ' பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அகதிகளாக வந்த அனைவரும் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக நேற்று இரவு தனுஷ்கோடி வந்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த அவர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் தவித்தப்படி நின்றதை மீனவர்கள் பார்த்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்கள் அரிச்சல் முனைக்கு சென்று அதில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், ஒரு சிறுமி, ஒரு மூதாட்டி உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கை கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த பாரதிதாசன்(வயது42), அவரது தாய் முனியம்மாள் (75), மகன்கள் பவனா புருசாந்தன் (17), பவனா அருள்(15), மகள் பவனா பிருந்திகா(10) என்பது தெரியவந்தது.

    தமிழகத்திற்கு வந்ததற்கான காரணம் குறித்து பாரதிதாசனிடம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி தனது குழந்தைகள் மற்றும் தாயுடன் வந்ததாக அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் இலங்கை அகதிகள் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 217 பேர் தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுசீந்திரம் போலீசில் சுவிதா கண்ணன் புகார் செய்தார்.
    • போலீசார் அஜித்ராம் பிரதீப் மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப் (வயது 33). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    அஜித்ராம் பிரதீப்புக்கும் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த சுவிதா கண்ணன் (28) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் அஜித் ராம் பிரதீப்புக்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று சுவிதா கண்ணனிடம் மீண்டும் பணம் கேட்டு அஜித்ராம் பிரதீப் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர் மனைவியை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சுவிதா கண்ணன் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சுவிதா கண்ணனை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் சுவிதா கண்ணன் புகார் செய்தார். அதில் உனது தந்தை வீட்டு பத்திரத்தை மாற்றி தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என கணவர்மிரட்டியதாகவும் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அஜித்ராம் பிரதீப் மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அறுவடை எந்திரத்திற்கு கூடுதல் வாடகை வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.2400 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்த தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் தற்போது நெல் அறு வடை காலமாக இருப்பதால், நெல் அறுவடை செய்ய வேண்டிய விவசாயிகள் அறுவடை எந்திரங்களை எதிர்பார்த்து இருக்கின்ற னர். ஒரே நேரத்தில் அதிகப் படியான எண்ணிக்கையில் அறுவடை எந்திரங்கள் தேவைப்படுவதால், தனி யார் எந்திர உரிமையாளர் கள் அதிகப்படியான கட்ட ணம் வசூலிக்கின்றனர்.

    இதனால் தனியார் அறு வடை எந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டு வந்த னர். விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவ லர்கள், தனியார் அறுவடை எந்திரங் களின் உரிமையாளர்களிடம் ஆலோசித்து டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.1500 என்றும், பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூ.2400 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட அதிக வாடகை கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயி களின் நன்மைக்காக, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மாநில அளவில் உள்ள தனியார் அறுவடை எந்திரங்களின் பதிவு எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே வேளாண் பெருமக்கள் உழவன் செயலியில் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு'' என்பதை தேர்வு செய்து வரும் பக்கத்தில், அறுவடை இயந்திரங்கள் பற்றி என்பதை தேர்வு செய்து, மாவட்டம் மற்றும் வட்டார வாரியாக நெல் அறுவடை இயந்திரம் சொந்தமாக வைத்துள்ள உரிமையாளர்கள் விபரம் மற்றும் தொலைபேசி எண்களை நேரடியாக தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை பெற்று பயனடைந்திடலாம்.

    இவ்வாறு அதில் தெரி வித்து உள்ளார்.

    • நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடக்கிறது.
    • வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை மற்றும் கமுதி வட்டங்களில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்க

    ளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

    நீரினை பயன்படுத் துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நாளை (24-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை (காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

    இந்த வேட்புமனுக்கள் 28-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து, ஏற்கத்தக்க வேட்பு மனுக்களை சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகிகொள்ள விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை 28-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார். நீரினை பயன்படுத்துவோர் சங்கங் களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5.2.2023 அன்று மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    ராமநாதபுரம் வட்டம் சார்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவ லகத்திலும், பரமக்குடி வட்டத்திற்கு உதவி ஆட்சியர் அலுவலகத்திலும், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவாடானை வட்டத்தில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழக்கரை வட்டத்தில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கமுதி வட்டத்தில் கமுதி வட்டாட்சியர் அலுவ லகத்தில் பெற்றுக் கொள்ள லாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×