என் மலர்
நீங்கள் தேடியது "கட்டுமான பயிற்சி"
- திருப்புல்லாணியில் கட்டுமான பயிற்சியை கிராம பெண்கள் பெறுகின்றனர்.
- தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர்களுக்கான சமுதாயத்திறன் பள்ளியின் மூலம் 30 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கட்டிட கட்டுமான தொழில் பயிற்சிக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்ட் உரை தயாரித்தல், சிமெண்ட் செங்கல் தயாரித்தல் மற்றும் ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படு கின்றன.
தொழில் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொழில் திறன் பயிற்சி பெற்று வரும் மகளிர் குழுவிடம் தொழில் திறன் பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, மண்டபம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் 143 கிராமங்கள் பங்கு பெறும் வகையில் 1362 மகளிர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொத்தனார் தொழில் திறன் பயிற்சி பெற்று வரும் மகளிர் மிக நேர்த்தியாக நல்ல முறையில் பயிற்சி பெற்று உள்ளது என்பது பாராட்டத்தக்க கூடியதாகும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் பாஸ்கரன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் குமார், திருப்புல்லாணி ராஜேந்திரன், கணேஷ் பாபு, உதவி திட்ட அலுவலர் கீர்த்திகா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






