search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tai Amavasha"

    • தை அமாவாசை தினத்தன்று ராமேசுவரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தருவார்கள்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தை அமாவாசையான நாளை 21-ந்தேதி (சனிக்கிழமை) தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தரு வார்கள். தை அமா வாசையை முன்னிட்டு இன்று (20-ந் தேதி) மதியம் முதல் நாளை இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ராமேசுவரம் நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் பஸ் நிலையத்திலிருந்து சிவகாமிநகர், சல்லிமலை, ரெட்டைப்பிள்ளையார் கோவில் தெரு, சவுந்தரியம்மன் கோவில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி கோவில் வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

    அங்கிருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் கோவில் மேற்குவாசல் வழியாக திட்டக்குடி வந்து பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். தனுஷ்கோடி செல்லும் வாகன ங்கள் திட்டக்குடி வந்து தேவர் சிலை ரெயில்வே பீடர் ரோடு வழியாக செல்ல வேண்டும். தனுஷ் கோடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் ரெயில்வே பீடர் ரோடு, வண்ணார் தெரு, டவுன் போலீஸ் நிலையம், பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

    ராமேசுவரம் பஸ் நிலையம், பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து வாகனங்கள் நிறுத்துமிடம் வரை சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்ற செயல்களை தடுத்து கண்காணிக்கும் விதமாக ராமேசுவரம் கோவிலை சுற்றிலும், நகரின் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    ராமேசுவரம் கோவில், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (21-ந்தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும்.

    பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக தை அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும். அக்னிதீர்த்தக்கடல் பகுதியி லுள்ள மண்டகப்படியில் இருந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்சமுர்த்திகளுடன் கருட வாகனத்தில் ராமர் புறப்பாடு நடைபெறும் என்று கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.

    தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவ ரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வசதிக்காக ராமேசுவரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை ஆயிரம் போலீசாரை நியமித்து பாதுகாப்பு அளிக்கவும், நகர் முழுவதும் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவில் 4 ரத வீதிகளில் காமிரா அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    ×