search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் சாதனையாளர்களாக திகழ வேண்டும்
    X

    மாணவர்கள் சாதனையாளர்களாக திகழ வேண்டும்

    • ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக திகழ வேண்டும் என கலெக்டர் பேசினார்.
    • ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் குறித்த குழுக்கள் உருவாக்கும் பணி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    மாணவ-மாணவிகள் முன்னிலையில் ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை என 4 வண்ணங்கள் கொண்ட குழுக்கள் உருவாக்கி அதில் மாணவ-மாணவிகள் தேர்வு செய்து அவர்களுக்குரிய ஆசிரி யர்களும் தேர்வு செய்து இக்குழு செயல்பட தொடங்கி உள்ளது.

    மேலும் இக்குழு வின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்பள்ளியில் உள்ள மாணவர்களின் கற்றல் ஊக்குவித்தல், விளை யாட்டு ஊக்குவித்தல் மற்றும் தனித்திறன் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒவ்வொரு குழுவாக பிரித்து அவர்க ளுக்கான வழிகாட்டுதல் பணியை கையாளும் பொழுது ஒவ்வொரு மாணவரின் திறமையையும் எளிதாக அறிந்திட முடியும். அதே போல் ஒரு குழு என்பது குறைந்த எண்ணிக்கை கொண்ட நபர்களாக இருப்பதால் அவர்களை ஊக்குப்படுத்தும் பணியும் எளிதாக இருக்கும்.

    அதேபோல் சக மாண வர்கள், சக மாணவிகள் வெவ்வேறு குழுவில் இருக்கும் பொழுது எந்த குழு முதலில் வருகிறது என்ற நிலைப்பாட்டுடனும் ஒவ்வொரு குழுவும் ஆரோக்கியமான இந்த போட்டியில் பங்கேற்று ஆசிரியர்கள் வழிகாட்டும் பயிற்சியை கையாளுவதுடன் தங்கள் திறமையையும், ஆர்வத்தையும் செயல்ப டுத்தும் பொழுது அங்கு தனக்கென ஒரு வெற்றி கிடைக்கும் வகையில் ஒரு மகிழ்ச்சி தோன்றும்.

    அந்த மகிழ்ச்சியின் விளைவு தான் ஒவ்வொரு வரின் திறமைக்கும் வழி காட்டியாக அமையும். அவ்வாறு தன் திறமையை வெளிப்படுத்தி கல்வி யிலும், விளையாட்டிலும் தனி திறனிலும் சாதனை படைக்கும் பொழுது அந்த சாதனையானது தனக்கு மட்டுமின்றி, தனக்கு வழிகாட்டி ய ஆசிரியர்களுக்கும், தான் படித்த பள்ளிக்கும் என பாராட்டுக்கள் கிடைப்பதுடன் அதன் மூலம் மாவட்டத்திற்கு பெருமையை தேடித்தரும் நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×