என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் ஆடுகளை திருடும் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- திருட்டு கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிப்பட்டி னத்தை சோ்ந்தவர் சரவணன். இவர் தனது ஆடுகளை கழனிக்குடி கண்மாயில் வழக்கம் போல மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது ஒரு ஆட்டை காணவில்லை. அப்போது அந்த ஆட்டை 2 போ் இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றனர்.
இதைப்பாா்த்த சரவணன் அவா்களை விரட்டி சென்று பிடித்து தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீசார் நடத்திய விசாரணையில் ஆடு திருடியது தாமரை ஊரணி முனீஸ்வரன் (34), தேர்போகி முத்துமாரி என்ற பாப்பா (32) என தெரிய வந்தது. இதைத்தொ டா்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனா்.
இதே போல தனது 3 ஆடுகளை காணவில்லை என்று முருகேசன் என்பவா் ஏா்வாடி போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புத்தேந்தல் பகுதியை சோ்ந்த பூமிநாதன் தனது ஆடுகளை மா்மநபா்கள் திருடிச்சென்று விட்டதாக அளித்தாா். ராமநாதபுரம் பகுதியில் மர்மகும்பல் தொடர்ந்து ஆடுகளை திருடி வருகிறது.
எனவே மாவட்ட காவல்துறை ஆடுகள் திருடப்படுவதை தடுக்கவும், திருட்டு கும்பலை பிடிக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆடு வளா்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீதியில் மனநலம் பாதித்த நோயாளிகள் சுற்றித்திரிகின்றனர்.
- காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவிற்கு தமிழ் நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங் களில் இருந்து ஏராள மானோர் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத் தில் அரசு மன நலகாப்பகம் குறைந்தபட்சமே உள்ளது.
ஏர்வாடி தர்காவில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் குறிப்பிட்ட நபர் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏழை, எளிய மக்கள் அழைத்து வரும் மனநலம் பாதிக்கப் பட்ட வர்களை கவனிக்க வழியின்றி ராமநாத புரம், ஏர்வாடி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் இறக்கி விட்டுச்செல்லும் நிலை இருந்து வருகிறது.
இப்படி ஆதரவின்றி விடப்படுபவர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் உள்ள தடுப்புசுவர்களின் மீது ஏறி ஆபத்தான முறை யில் அமர்வதும் அதில் உறங்குவதுமாக உள்ளனர். சிலர் வீதிகளில் கிடைக்கும் உணவுகளை உண்டு சுற்றி திரியும் நிலை உள்ளது. சிலர் உடல் நிலைபாதிக்கப் பட்டு சாலையோரம் விழுந்து கிடக்கின்றனர்.
மேலும் சிலர் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இது போன்ற மனநிலை பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம் பேர் நடமாடுகின்றனர்.
இப்படி சாலையில் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து ஏர்வாடி தர்கா வில் உள்ள மனநல காப்பகத்தை விரிவுபடுத்தி வீதி களில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
- திருச்சுழி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக ஆலடிப் பட்டி பகுதியில் சமீப கால மாக கஞ்சா விற்பனை விறு விறுப்பாக நடந்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெக நாதன் தலைமையில் திருச்சுழி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் கெங்கராஜ் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப் பட்டது. அவர்கள் திருச்சுழி காவல் நிலைய எல்லைப் பகுதிக ளில் தீவிர ரோந்துப் பணி யில் ஈடுபட்டு கண்கா ணித்தனர்.
அப்போது ஆலடிப்பட்டி பகுதியிலுள்ள கல்லறை தோட்டம் அருகே சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டி மேலத்தெரு பகுதியை சேர்ந்த இருளாண்டி என்பவரின் மகன் சக்திவேல் (23) என்பதும், இவர் அந்த பகுதியில் சட்ட விரோதமாக கிலோ கணக்கில் கஞ்சாவை பதுக்கி வைத்து நெடுங்கா லமாக பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் விற்ப னைக்காக வைத்திருந்த சுமார் 1.380 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ராமநாதபுரம் நகரில் தன்னார்வலர்கள், அறக்கட்டளையினர், சுய உதவிக்குழுவினருடன் இணைந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
- விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு 175 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ஆணையாளர் அஜிதா பர்வீன் கூறியதாவது:-
ராமநாதபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் கூடும் இடங்களான புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரண்மனைரோடு போன்ற பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
165 தன்னார்வலர்கள், அறக்கட்டளையினர், சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் இணைந்து தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது தொடர்பான விளக்கத்துடன் கூடிய பிரசுரங்கள் வீடு வீடாக தன்னார்வலர்கள், மாண வர்கள், மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
அதன்படி குப்பைகளை சரியான முறையில் மக்கும் மற்றும் மறுசுழற்சி கழிவு களை பிரித்து வழங்கிய பொதுமக்கள் 58 பேருக்கு நினைவு பரிசுகள், சான்றி தழ் வழங்கப்பட்டது.நகராட் சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அனுமதி யின்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம் பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
நகரில் உள்ள நீர் நிலைகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. ஊரணிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தினசரி குப்பைகளை சரியான முறையில் மக்கும் மற்றும் மறுசுழற்சி கழிவுகளாக பிரித்து வழங்கிய 130 தூய்மை பணியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. நகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் 15 டன் கட்டுமான மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு மேடு பள்ளமான பகுதிகளில் கொட்டி சரி செய்யப்பட்டது. நகராட்சிக்குட்பட்ட 25 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்க திட்டம் குறித்து விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு 175 மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்தனர்.
- கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சண்முக பிரியா ராஜேஸ் தலைமை யில் நடந்தது. ஆணையாளர் ஜானகி முன்னிலை வகித் தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி கள்) தேவபிரியா வரவேற்றார். இதில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர் கள் சசிகலா (கருமல்),செல்வி (மேலகன்னிசேரி), கலைச் செல்வி (விளங்குளத்தூர்), முருகன் (செல்வநாயகபுரம்), அரிச்சுணன் (வளநாடு) ஆகியோர் கவுன்சில் நிதி அனைத்து கவுன்சிலர்க ளுக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும். சாலை யோரம் உள்ள முள்செடி களை வெட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். கருங்கால குறிச்சி கிராமத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும், வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் காலனி பகுதி, கீழ கன்னி சேரி பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும்.
விளங்குளத்தூர் பகுதி யில் இருந்து பருக்கைக்குடி செல்லும் தார்ச்சாலை பழுத டைந்துள்ளதை மரா மத்து செய்ய வேண்டும். பருக்கைக்குடி கிராமத்தில் 2 படித்துறை கட்ட வேண் டும். வெண்ணீர் வாய்க்கால். கிராமத்தில் சுடுகாடு வரை சாலை அமைக்க வேண்டும்.கண்மாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சம்பந்தப்பட்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
- ஆர்.எஸ்.மங்கலம் அருகே வீட்டில் கட்டி இருந்த 5 ஆடுகள் திருடப்பட்டது.
- திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.
ஆர்.எஸ்.மங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்,மங்கலம் உப்பூர் அருகே உள்ள கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது60). இவரது வீட்டு தொழுவத்தில் கட்டி இருந்த 5 ஆடுகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்லத்துரை திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய வர்களை தேடி வருகிறார். திருட்டுப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.
- கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
- மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் தலைமையில் சமூகக் கூட்டம் நடந்தது.
கீழக்கரை
கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் தலைமையில் மாவட்ட சுகாதார சமூகக் கூட்டம் நடந்தது. இதில் முகமது சதக் கல்விக் குழுமம், கீழக்கரை அனைத்து சமுதாய கூட்ட மைப்பு ஆகியவற்றிற்கு கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை உள் வளா கத்தில் தூய்மைப்பணியை மேற்கொண்டதற்காக பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கீழக்கரை தாலுகா புதிய மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ.5.45 கோடி போதுமானதாக இருக்காது என்பதால் நிதியை அதிகப் படுத்தி கோருதல், பகல் மற்றும் இரவு பணிகளில் செவிலியர் மற்றும் பணியா ளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.
பிணவறைக்கு சடலங்களை பாதுகாப்பாக வைக்க குளிரூட்டப்பட்ட வசதிகள் செய்து நவீனப் படுத்துதல், ஆய்வக உபக ரணங்கள் பழமையடைந்து விட்டதால் புதிய உப கரணங்கள், உபரி பொருட்கள் அதிகப்படுத்தி வாங்க கோருதல், ஆர்.ஓ.பி ளாண்ட் குடிநீர் வசதியை மருத்துவ மனையின் உபயோகத்திற்கு அமைத்து தர கோருதல், மருத்துவ மனை முன்பகுதியில் இருள் நீக்க நகராட்சி மூலம் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.
கீழக்கரை நகராட்சியிடம் மருத்துவமனை சுற்றுப் புறத்தை தூய்மைப்படுத்து வதற்கு வெளியாட்கள் அனுப்பக் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜூன் மாதத்தில் இருந்து முகமது சதக் கல்விக்குழுமம், மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் மூலம் 2 தூய்மைப் பணியாளர்களை மருத்துவமனை உட்பகுதியை சுத்தம் செய்ய அனுப்பியதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் நன்றியை தெரிவித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வுள்ளதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார். இதில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் சேக் உசேன், தி.மு.க. நகர் செயலாளர் பஷீர் அகமது, அ.தி.மு.க.நகர் செயலாளர் ஜகுபர் உசேன், கம்யூனிஸ்டு நகர் செயலாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கும் விழா நடந்தது.
- பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் நன்றி கூறினார்.
கீழக்கரை
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்க ளுக்கு தகுதி அடிப்படையில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் முகை தீன் இபுராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட கென்சிகாய் கொஜீ ரியூ சுராத்தே பயிற்சியாளர் சசி குமார் வரவேற்றார். கராத்தே ஆசிய பயிற்சி யாளர் கியேசி சேகர் முன்னிலை வகித்தார்.
விழாவில் 3 மாதம் பயிற்சி பெற்ற 43 பேருக்கு மஞ்சள் பெல்ட், 6 மாதம் பயிற்சி பெற்ற 18 பேருக்கு ஆரஞ்சு பெல்ட் 6 பேருக்கு பச்சை பெல்ட். 1 வருடம் பயிற்சி பெற்ற 8 பேருக்கு நீல பெல்ட். ஒரு வருடத்திற்கு மேல்பயிற்சி பெற்ற 8 பேருக்கு கரு நீல பெல்ட், 2 வருடம் பயிற்சிபெற்ற 12 பேருக்கு பிரவுன்பெல்ட் வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இபுராகிம், ஆசிய பயிற்சியாளர் கியேசி சேகர் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கராத்தே பெல்ட் வழங்கினர். முடிவில் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் நன்றி கூறினார்.
- ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
- தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப்பட்டி ருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 849-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா இன்று (12-ந்தேதி) நடை பெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு யானை, குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது.
நாளை அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஏர்வாடி தர்கா பகுதி முழு வதும் பக்தர்கள் கூட்டத்தால் களை கட்டி யுள்ளது. மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்கா விற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. தர்கா வளாகத்தில் கூடுத லாக சிறப்பு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப் படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். சீருடை அணியாத போலீ சார், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியு டன் அன்னதானம் வழங்கப பட்டு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்துள்ளனர்.
- மீனவர் மீது தாக்குதல் நடத்தினர்.
- தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.
தொண்டி
தொண்டி அருகே உள்ள புதுப்பட்டினம்- கண்கொள்ளான் கடலோர கிராமத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன்(40). மீனவ சங்க செயலாளரான இவர் சம்பவத்தன்று நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
அப்போது மகாசக்திபுரத்தை சேர்ந்த சில மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தி முத்துசெல்வத்தை தாக்கியதாக தெரிகிறது. படுகாயமடைந்த அவர் திருவாடனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தால் 2 மீனவ கிராமங்கள் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவிபட்டினம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.
- ராமநாதபுரம்- விருதுநகர்-சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் தொடங்கின.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, போகலூர், நயினார் கோயில், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் 157 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள், 36 அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகள், 22 தனியார் நடுநிலை பள்ளிகள் உள்ளன.
66 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி கள், 27 தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளிகள், 56 தனி யார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இங்கு படித்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்ட இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்ததால் இன்று (12-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. ஒரு மாத காலம் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் நண்பர்களை பார்த்து நலம் விசாரித்தனர். முதல் நாளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் அறிமு கப்படுத்தி கொண்டனர்.
இதேபோல் விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. 2 மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.
வருகிற 14-ந்தேதி அன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.
- போதை ஆசாமிகள் தொல்லையால் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை, திருச்சி, நாகர் கோவில் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதி களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது.
தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் பின் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு மது அருந்து பவர்களில் சிலர் பஸ் நிலையம் வளாகத்திற்குள் வந்து பயணிகளிடம் வம்பு செய்கின்றனர்.
போதை தலைக்கேறிய சிலர் பஸ்சிற்குள் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் பணம் கேட்டும் தொல்லை செய்கின்றனர். இதை கண்டிக்கும் கண்டக்டர், டிரைவர்களிடம் தகராறு செய்கின்றனர்.
இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பஸ் ஸ்டாண்டிற்குள் போதையில் குறிப்பாக இரவில் அரைநிர்வாணமாக திரிவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர்.






