என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ரூ.7.84 கோடி மதிப்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின சமூகத்தினர் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில், மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலை களில் தங்களது நிலையை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செய்ல்பட்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காக கொண்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் அதே பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட் டுள்ளது. டாப்செட்கோ கடன் திட்டம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    7 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு பல்வேறு அரசு துைறகளின் சார்பில் பல கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளன. முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் சார்பில் 286 பெண்களுக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், உலமாக்கல் மற்றும் இதர பணியாளர் நலவாரியம் சார்பாக ரூ.72 ஆயிரம் மதிப்பில் கடனு தவியும் வழங்கப்பட்டுள்ளது.

    டாம்கோ திட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 101 பயனாளிகளுக்கும், 12 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 6ஆயிரத்து69 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின பிரிவை ேசர்ந்த 5,346 மாணவ-மாணவி களுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் (மே 2021 முதல் ஜூன் 2023 வரை) ராமநாதபுரம் மாவட்டத்தில் 25460 பயனாளிகளுக்கு ரூ.7கோடியே 48லட்சத்து 87ஆயிரத்து 172 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக பெண்ணுக்கு தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டது.
    • கீழக்கரை அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை முத்துச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் குருவம்மாள் (50). திருமணம் ஆகவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக கழுத்தில் தைராய்டு சுரப்பி ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில்கீழக்கரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தைராய்டு சுரப்பி இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கீழக்கரை அரசு மருத்துவ மனையில் குருவம்மாள் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரத்குமார்.

    மயக்க மருந்து நிபுணர்கள் ராஜேஸ்வரன். மேகலா ஆகியோர் தலைமையில் 3 மணி நேரம் ஆபரேஷன் நடத்தி சுரப்பியை அகற்றினர். தலைமை செவிலியர்கள் ஆனந்தி. சுமதி ஆகியோர மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.

    இது குறித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் குருவம்மாள் கூறுகையில், 2 வருட காலமாக இந்த தைராய்டு சுரப்பி பிரச்ச னையால் கடும் அவதிக்குள்ளா னேன்.

    வசதியின்மை யால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் இருந்து வந்தேன். கீழக்கரை அரசு மருத்துவ மனையில் தற்போது நிரந்தர தீர்வு கிடைத்து ள்ளது. அறுவை சிகிச்சை செய்து சுரப்பிஅகற்றிய பின்பு தற்போது குண மடைந்துள்ளேன்.

    கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • கீழக்கரை பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வருகின்ற னர். கீழக்கரை வழியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.

    இவைகளில் புறநகர் பேருந்துகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கும்பகோணம், நாகப்பட்டினம் டெப்போ புறநகர் பஸ்கள் கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன.

    இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரு கின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு இயக்க நிறுவன வழக்கறிஞர் சாலிஹ் ஹூசைன் கூறியதாவது:-

    இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து பஸ்சுக்கு 20 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து கீழக்கரை வந்து சேரும் மக்கள் முக்கு ரோட்டில் இருந்து ரூ.60 ஆட்டோவிற்கு கொடுத்து வீடு செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களையும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சவுக்கு மரங்களை வெட்டியவருக்கு ரூ.3.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ராஜேஸ்பிரபு வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வனச்சரக அலுவா் ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் கடல் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை சாா்பில் கடலோரப் பகுதி களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு பரமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாத புரம் வனக்கோட்ட கட்டுப்பாட்டிலுள்ள

    ஆா்.எஸ்.மங்கலம் வனச்சரகம் சோழந்தூா் பிரிவில் களப்பணி யாளா்கள் ரோந்து பணி மேற்கொண்ட போது, வேலாங்குடி கிராமத்தில் வனத்துறை மூலம் நடவு செய்யப்பட்ட 125 சவுக்கு மரங்களை தொண்டியைச் சோ்ந்த ராஜேஸ்பிரபு வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, அவருக்கு தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 210 அபராதம் விதிக்கப்பட்டது.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதுபாட்டில்கள் கிடந்தன.
    • அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்வி துறை அலுவலகம், நீதிமன்றம், டி.ஐ.ஜி. அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், உள்ளிட்ட மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. ஆனால் இந்த வளாகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மறைவான பகுதிகளில் அமர்ந்து கஞ்சா, மது அருந்தி வருகின்றனர். அவர்கள் வீசி செல்லும் மதுபாட்டில்கள் அந்த பகுதியில் சிதறி கிடக்கின்றன. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே மதுபாட்டில்கள் சிதறி கிடப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் சமூக விரோதிகள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெரு நாய்கள் தொல்லையால் மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
    • அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றது. இதில் பல நாய்கள் வெறிபிடித்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் நாய் கடியால் தினமும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த நாய் கடியால் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மாதத்திற்கு பெரும் அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தெரு நாய்களை பிடித்து அப்புறபடுத்த கோரி கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    2 நாட்களில் மட்டும் தெருக்களில் நடந்து சென்ற 12 பேரை வெறிபிடித்த நாய்கள் பல்வேறு இடங்களில் கடித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலைகளில் நடந்துசெல்ல அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தொடந்து அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி கூட்ட அரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளதாக கீழக் கரை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கலந்தாய்வு கூட்டம் வழக்கம் போல் கண் துடைப்பு கூட்டமாக இல்லா மல் கீழக்கரை நகரில் வெறி நாய்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வலைதளங்களில் பொதுமக்களின் கண்டனம் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கமுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இந்த பேரணி நாடார்பஜார், பஸ் நிலையம் என முக்கிய வீதிகள் வழியாக, கோட்டைமேடு வரை நடைபெற்றது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமை வகித்தார். போலீசார் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பேரணி சந்தைப்பேட்டை பகுதியில் தொடங்கியது. இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், அபுதுல்லா, விமலா,கோமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ், அருண்பாண்டியன், சத்தியநாராயணன், ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர். இந்த பேரணி நாடார்பஜார், பஸ் நிலையம் என முக்கிய வீதிகள் வழியாக, கோட்டைமேடு வரை நடைபெற்றது.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் அபாகஸ் போட்டியில் தேசிய சாதனை படைத்தனர்.
    • முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    இந்திய அளவிலான அபாகஸ் போட்டி சென்னை தமிழ் நாடு வர்த்தக மையத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சுமார் 5,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.இசட்-1 பிரிவில் ரியா முதல் இடத்தையும், இசட்-3 பிரிவில் ஆமினத் ஹாஜிரா 2-ம் இடத்தையும், அல் அஸ்ரியா3-ம் இடத்தையும் பிடித்தது சாதனை படைத்தனர்.

    அபாகஸ் பயிற்சியாளர் உமர் சரிப் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • தொண்டி கடற்கரையில் அப்புறப்படுத்தப்படாமல் ஆமை உடல் கிடக்கிறது.
    • சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் கடந்த 4 நாட்களுக்கு முன் பெரிய ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இந்த நிலையில் அந்த ஆமை உடலை பரிசோதனைக்கு எடுத்து செல்லப்படாமல் அங்கேயே கிடக்கிறது.

    வழக்கமாக இது போன்ற கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கும்போது அதை எடுத்து செல்லப்பட்டு அவை அரிய வகை சேர்ந்தவையா? ஆணா? பெண்ணா? இறந்ததற்கான காரணம் ஆகியவை குறித்து பரிசோதனை நடத்தப்படும்.

    மேலும் கடலின் மாசு பாடு காரணமாக இறந்ததா? பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமானதால் இறந்ததா ?என ஆய்வு மேற்கொள்ளப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் ஆமையின் உடல் எடுத்து செல்லப் படாமல் கடற்கரையிலேயே துர்நாற்றத்து டன் கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆமையின் உடலை அப்புறப்படுத்தி உரிய பரிசோதனை மேற்கொள்ளப் பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தனக்கூடு திருவிழாவில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிய வேண்டாம்.
    • குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். .

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி கூறியதாவது:-

    பெரியபட்டினத்தில் அடுத்த 10 நாட்களுக்கு சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருவிழா என்பதினால் பல்வேறு புதிய நபர்கள் ஊருக்குள் வரக்கூடும். எனவே நமது குழந்தைகளை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிய வேண்டாம்.

    கூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல வும். தங்கள் குழந்தைகளை தனியாக கேளிக்கை போன்ற விளையாட்டுக்கு தனியாக செல்ல அனுமதிக்க வேண்டாம். பெரியவர்கள் உடன் செல்லவும். எந்த விதமான தேவைகள் இருந்தாலும் பஞ்சாயத்து நிர்வாகத்தை அனுகவும். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியநாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்ந்த கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டை கிராமத்தில் அரியநாச்சியம்மன், இருளப்பசுவாமி, கருப்பணசுவாமி, கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 2 கால யாக சாலை பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்று கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்ந்த கோட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கீழக்கரை பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • முக்கு ரோட்டில் இருந்து ஆட்டோவுக்கு ரூ.60 கொடுத்து வீடு செல்ல வேண்டி உள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வரு கின்றனர். கீழக்கரை வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.

    திருநெல்வேலி டெப்போ, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் புறநகர் பஸ்கள் கீழக்கரை பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் சிரமப்படுகின்றனர்.

    எனவே அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு இயக்க நிறுவன வழக்கறிஞர் சாலிஹ் ஹூசைன் கூறுகையில், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    ராமநாதபுரத்தில் இருந்து ரூ. 20 கொடுத்து டிக்கெட் எடுத்து கீழக்கரை வந்து சேரும் மக்கள் முக்கு ரோட்டில் இருந்து ஆட்டோவுக்கு ரூ.60 கொடுத்து வீடு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே இந்தப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×