அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல கோரிக்கை

கீழக்கரை பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.
அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல கோரிக்கை
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வருகின்ற னர். கீழக்கரை வழியாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.

இவைகளில் புறநகர் பேருந்துகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கும்பகோணம், நாகப்பட்டினம் டெப்போ புறநகர் பஸ்கள் கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன.

இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரு கின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு இயக்க நிறுவன வழக்கறிஞர் சாலிஹ் ஹூசைன் கூறியதாவது:-

இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து பஸ்சுக்கு 20 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து கீழக்கரை வந்து சேரும் மக்கள் முக்கு ரோட்டில் இருந்து ரூ.60 ஆட்டோவிற்கு கொடுத்து வீடு செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களையும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com