என் மலர்
நீங்கள் தேடியது "Abacus Competition"
- கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் அபாகஸ் போட்டியில் தேசிய சாதனை படைத்தனர்.
- முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
இந்திய அளவிலான அபாகஸ் போட்டி சென்னை தமிழ் நாடு வர்த்தக மையத்தில் கடந்த 24-ந்தேதி நடைபெற்றது. இதில் இந்திய அளவில் சுமார் 5,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.இசட்-1 பிரிவில் ரியா முதல் இடத்தையும், இசட்-3 பிரிவில் ஆமினத் ஹாஜிரா 2-ம் இடத்தையும், அல் அஸ்ரியா3-ம் இடத்தையும் பிடித்தது சாதனை படைத்தனர்.
அபாகஸ் பயிற்சியாளர் உமர் சரிப் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






