search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tortoise"

    • அடர்ந்த வனப்பகுதிக்குள் வேட்டையாடும் கும்பல் வந்து விலங்குகளை வேட்டையாடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
    • அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தெங்குமரஹாடா வனப்பகுதி உள்ளது. தெங்குமரஹாடா மாயற்றை மையமாக கொண்டு பவானிசாகர் வனப்பகுதியில், நீலகிரி வனப்பகுதியும் உள்ளது.

    இந்த அடர்ந்த வனப்ப குதியில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் நட மாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கும் வகையில் நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசார், அதி விரைவு படை போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டு முயல் ஆமை, முதலைகள் போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் வேட்டையாடும் கும்பல் வந்து விலங்குகளை வேட்டையாடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று தெங்குமரஹாடா மாயாற்று அடர்ந்த வனப்பகுதியில் அதிவிரைவு படை போலீசார் சிலர் வனப்பகுதியில் இருந்து ஆமையை எடுத்து வந்து கத்தியால் ஆமையை அறுத்து சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடை ந்த வனத்துறை ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சம்பவம் நடந்த பகுதி ஈரோடு மாவட்ட எல்லை வனப்பகுதியும், நீலகிரி மாவட்ட எல்லை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் அந்த வீடியோவில் இருக்கும் வீரர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறை அலுவலர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • தொண்டி கடற்கரையில் அப்புறப்படுத்தப்படாமல் ஆமை உடல் கிடக்கிறது.
    • சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரையில் கடந்த 4 நாட்களுக்கு முன் பெரிய ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இந்த நிலையில் அந்த ஆமை உடலை பரிசோதனைக்கு எடுத்து செல்லப்படாமல் அங்கேயே கிடக்கிறது.

    வழக்கமாக இது போன்ற கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கும்போது அதை எடுத்து செல்லப்பட்டு அவை அரிய வகை சேர்ந்தவையா? ஆணா? பெண்ணா? இறந்ததற்கான காரணம் ஆகியவை குறித்து பரிசோதனை நடத்தப்படும்.

    மேலும் கடலின் மாசு பாடு காரணமாக இறந்ததா? பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமானதால் இறந்ததா ?என ஆய்வு மேற்கொள்ளப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் ஆமையின் உடல் எடுத்து செல்லப் படாமல் கடற்கரையிலேயே துர்நாற்றத்து டன் கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆமையின் உடலை அப்புறப்படுத்தி உரிய பரிசோதனை மேற்கொள்ளப் பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×