search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து புறநகர் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை
    X

    அனைத்து புறநகர் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை

    • கீழக்கரை பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • முக்கு ரோட்டில் இருந்து ஆட்டோவுக்கு ரூ.60 கொடுத்து வீடு செல்ல வேண்டி உள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வரு கின்றனர். கீழக்கரை வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.

    திருநெல்வேலி டெப்போ, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் புறநகர் பஸ்கள் கீழக்கரை பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் சிரமப்படுகின்றனர்.

    எனவே அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு இயக்க நிறுவன வழக்கறிஞர் சாலிஹ் ஹூசைன் கூறுகையில், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    ராமநாதபுரத்தில் இருந்து ரூ. 20 கொடுத்து டிக்கெட் எடுத்து கீழக்கரை வந்து சேரும் மக்கள் முக்கு ரோட்டில் இருந்து ஆட்டோவுக்கு ரூ.60 கொடுத்து வீடு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே இந்தப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×