search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • ரூ.7.84 கோடி மதிப்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின சமூகத்தினர் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில், மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலை களில் தங்களது நிலையை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செய்ல்பட்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காக கொண்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் அதே பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட் டுள்ளது. டாப்செட்கோ கடன் திட்டம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    7 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு பல்வேறு அரசு துைறகளின் சார்பில் பல கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளன. முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் சார்பில் 286 பெண்களுக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், உலமாக்கல் மற்றும் இதர பணியாளர் நலவாரியம் சார்பாக ரூ.72 ஆயிரம் மதிப்பில் கடனு தவியும் வழங்கப்பட்டுள்ளது.

    டாம்கோ திட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 101 பயனாளிகளுக்கும், 12 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 6ஆயிரத்து69 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின பிரிவை ேசர்ந்த 5,346 மாணவ-மாணவி களுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் (மே 2021 முதல் ஜூன் 2023 வரை) ராமநாதபுரம் மாவட்டத்தில் 25460 பயனாளிகளுக்கு ரூ.7கோடியே 48லட்சத்து 87ஆயிரத்து 172 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×