என் மலர்
புதுக்கோட்டை
- ஆலங்குடியில் சாலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
- வம்பன் அற்புதா கலைஅறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்களில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜான் மார்ட்டின் தலைமை வகித்தார். துணை முதல்வர் பக்சிமெட்டில்டா வரவேற்றார். கருத்தரங்கில் ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் நல்லதம்பி, நகர வட்டார போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் இந்தியன் ரெட் கிராஸ் கிளை சேர்மன் மருத்துவர் முத்தையா, பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் லட்சுமி நாராயணன், துணைப் பொருளாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர் சிவ ஆனந்தன், மார்கரேர் மேரி உட்பட பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இன்னாசிமுத்து நன்றி கூறினார்.
- கந்தர்வகோட்டையில் பா.ம.க. 35-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது
- கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஒன்றிய நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு தொண்டர்களுக்கும், ,பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் வளாகத்தில் பா.ம.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பிட வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் மது விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கந்தர்வகோட்டை மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலாளர் கருப்பையா, நகரச் செயலாளர் சுரேஷ், கார்த்திக் ,திருப்பதி ,சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- தக்காளி வாங்க குவிந்த பொதுமக்கள்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிறைவுற்ற நிலையில் படிப்படியாக தக்காளி விளைச்சல் உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் தற்ப்பொழுது தக்ககாளி கிலோ ஒன்றிற்க்கு ரூ 100,110,120,140 தினமும் விலை ஏற்றத்துடன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகை சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும், பெள்ளாரி வெங்காயம் கடைகளில் 30 முதல் 40 ரூபாய்வரை விற்க்கப்படும் நிலையில் பெள்ளாரி வெங்காயம் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் என நாளொன்றிற்கு பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை ஆயிரம் நபர்களுக்கும் மாலை ஆயிரம் நபர்களுக்கும் என தினமும் 2000 நபர்களுக்கு வணிக நோக்கில் இல்லாமல் சேவை நோக்கில் இப்பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே நாள்தோறும் வழங்கி வருகின்றனர்.இதனை பெறுவதற்காக பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் காலையும், மாலையும் கடையில் நீண்ட வரிசையில் நின்று மலிவு விலையில் தக்காளி, வெங்காயம் பெற்று செல்கின்றனர்.இதனையடுத்து அக்கடையில் பொதுமக்கள் தக்ககாளி, வெங்காயம் வாங்க அப்பகுதியில் அலைமோதி கூட்டம்,ககூட்டமாக குவிந்து வண்ணம் இருந்து வருகின்றனர்.
- டாஸ்டாக் கடைகளை அகற்ற கோரி பஞ்சாயத்து தோறும் போராட்டம் நடத்தப்படும் என்று புதுக்கோட்டை பாஜக அறிவித்துள்ளது
- புதுக்கோட்டை பா.ஜ.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, 9 ஆண்டுகளில் பாஜக மக்களுக்கு செய்துள்ள நல்ல திட்டங்களை மக்களுக்கு புரிய வைக்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் வருகிற 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து, பிரச்சினைகளை முன்வைத்து புதுக்கோட்டையிலும் அனைத்து பஞ்சாயத்துகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு இரட்டடிப்பு செய்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும்அவற்றை நிறுத்தவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் குடும்ப பெண்களுக்கு உரிமை தொமை ரூ.1000 தரப்படும் என அறிவித்துவிட்டு தற்போது அதை நிறைவேற்ற பல்வேறு கண்டிசன்கள் போடப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து வாரியாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே பஞ்சாயத்துகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற முக்கியமாக போராட்டம் நடத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்றிருந்தோம். ஆனால் தற்போதைய நிலையில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராக வருவார்.பாஜக நிர்வாகிகள் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை பொய் வழக்குகளை போட்டு வருகிறது. பிரதமர் அனைவருக்கும் 15 லட்சம் தருகிறேன் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக உதயநிதிஸ்டாலின் கூறிவருகிறார். அவர் நீட் ரகசியம் தெரியும்என்றார் அதை தெரிவித்தாரா? என்று கூறினார். பேட்டியின் போது பழ.செல்வம்குருஸ்ரீராம், கார்த்திகேயன், கோவேந்திரன், சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர் .
- புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர், தூய்மை பணிகள் குறித்து கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு செய்தார்
- குடிநீர் சுத்திகரிப்பு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சியில், குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை வைரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில், பெரியார்நகர், பூங்காநகர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குடிநீர் சுத்திகரிப்பு உரிய முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஹோட்டல் அருகில், நகராட்சி குப்பை சேகரிக்கும் இடத்தில், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு, தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் தமிழ்நாடு ஹோட்டல் அருகில், குப்பைகள் குவிந்திருப்பதை, அவற்றை நீக்கிவிட்டு மரக்கன்றுகள் நட்டு, பூங்கா அமைத்திட நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உதவிப் பொறியாளர் (நகராட்சி) கலியக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் மகாமுனி, பாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டையில் 48-வது கம்பன் பெருவிழாவின் 3ம்நாள் விழா நடைபெற்றது.
- நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கம்பன் கழக சார்பில் நடைபெற்று வரும் 48-வது கம்பன் பெருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.விழாக் குழு உறுப்பினர் எம்.எஸ்.ரவி வரவேற்புரையாற்றினார். முதல் அமர்வாக சென்னை சிவக்குமார் அரங்க நடுவராக, தம்பி எத்தனை தம்பி என்ற தலைப்பில் உயிர் காத்த தம்பி என்ற தலைப்பில் சென்னை சிவ சதீஷ், உயிர் நீத்த தம்பி என்ற தலைப்பில் முசிறி ஸ்ரீநிதி, உயிர் எடுத்த தம்பி என்ற தலைப்பில் திருச்சி வீர பாலாஜி, உயிர் கொடுத்த தம்பி என்ற தலைப்பில் காரைக்குடி மீனாட்சி உரையாற்றினார்கள்.எம்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் நிறுவனர் எம்.ஆர் மாணிக்கம் தலைமை வகித்தார். சண்முக பழனியப்பன், ராமுக்கண்ணு, செந்தில், சொக்க்லிங்கம், ஆதித்தன், மத்தியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.யோகா செல்வராஜ் நன்றி கூறினார்.அடுத்த அமர்வாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது:-கம்பர் 12ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். அவரின் ஒரு புறத்தை மட்டுமே பார்க்கின்றனர். அவற்றை கடந்து வர அவர் அடைந்த துன்பத்தை பேசவே நாங்கள் வந்துள்ளோம். இலக்கிய விழாவில் நாங்களா என யோசிக்கலாம். அரசியல் வேறு இலக்கியம் வேறு. கம்பர் எப்படிஅரசு இருக்க வேண்டும், அரசர் எப்படி இருக்க வேண்டும், தனிமனிதர் ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும் பல வகைகளில் தெரிவித்துள்ளார். கம்பர் பற்றி பேச இன்று குறிப்பு எடுத்துக் கொண்டு வந்து பேசுகிறேன்.
உலகம் உருண்டை என 15ம் நூற்றாண்டில் கூறினார்கள். ஆனால் 2500 ஆண்டுகள் முன்னரே உலகம் உருண்டை வடிவில் என தமிழ் அறிஞர்கள் கூறியுள்ளனர். விமானம், ஹெலிகாப்டர் என்ற நவீன கருவிகள் பிற்காலத்தில் வந்ததை. இவையெல்லாம் வேறு பெயர்களில் முன்னரே தமிழ் இலக்கியங்களில் வந்து விட்டது என்று தெரிவித்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை கம்பன் கழக தலைவர் எஸ்.எஸ்.ராஜ்குமார், மூத்த வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், ஒலி, ஒளி அமைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.செந்தில்குமார் அறங்காவலர் நியமன குழு தலைவர் தவ.பாஞ்சாலன், தமிழ் சங்கம் தலைவர் அரு.வீரமணி, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, கட்டுனர் சங்கம் முன்னாள் மாநில தலைவர் ராய.முத்துக்குமார், ஒப்பந்தகாரர் சத்தியசீலன், நகர்மன்ற உறுப்பினர் சுப.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முரளிதரன் நன்றியுரை ஆற்றினார்.
- விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும்.
- இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:
மரங்கள் வளர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயா பிறந்த ஊரில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மிளகு, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பயிர்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் தான் வளரும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், வெப்பம் அதிகம் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்து அதில் நன்கு லாபமும் பார்த்து வருகின்றனர்.
விவசாயிகளாகிய உங்களால் தான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்க முடியும். வெப்பமயமாதல் என்னும் பிரச்சினை உலகளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதில் மரங்கள் வளர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் விவசாயிகளாகிய நீங்கள் முன் களப் பணியாளர்களாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறனின் வேண்டுகோளின்படி, சந்தன மரங்களை வளர்ப்பதிலும், அதை வெட்டுவதிலும் விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகளை நீக்குவதற்கு தமிழக முதல்வருடன் நான் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்வேன்.
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் பேசுகையில், "சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் வருமானத்தையும் ஒரு சேர அதிகரிப்பதற்கு மரம்சார்ந்த விவசாய முறை தான் சிறந்த தீர்வு. மரப் பயிருக்கு மாறும் விவசாயிகள் அதை அறுவடை செய்யும் போது லட்சங்களிலும் கோடிகளிலும் லாபம் எடுக்க முடியும். அதேசமயம் அறுவடை காலம் வரை அவர்கள் காத்திருக்காமல் மரம் நட ஆரம்பிக்கும் சமயத்தில் இருந்தே தொடர் வருமானம் பார்க்கும் பல்வேறு வழிமுறைகள் நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம்.
குறிப்பாக, சமவெளியில் மரங்களுக்கு இடையே மிளகு சாகுபடி செய்வது குறித்து கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறோம். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற நறுமணப் பயிர்களையும் மரங்களுக்கு இடையே ஊடுப் பயிராக வளர்த்து விவசாயிகள் தொடர் வருமானம் பார்க்க முடியும்.
வெற்றி விவசாயிகளிடம் இருந்து அந்த வழிமுறைகளை மற்ற விவசாயிகள் அறிந்து கொள்வதற்காகவே இப்பயிற்சி நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதுதவிர, காய்கறிகள், மஞ்சள், வாழை, சிறுதானியங்கள், கால்நடை வளர்ப்பு என பல வழிகளில் மரம்சார்ந்த விவசாய முறையில் வருமானம் பார்க்க முடியும்." என்றார்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் வல்லுனர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமவெளியில் நறுமணப் பயிர்களை சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று மற்ற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
குறிப்பாக, இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன், திருச்சூரைச் சேர்ந்த ஜாதிகாய் விவசாயி திருமதி. சொப்னா சிபி கல்லிங்கள், மதுரையைச் சேர்ந்த தேனீ வளர்ப்பு பயிற்சியாளர் திருமதி ஜோஸ்பின் மேரி, நிகழ்ச்சி நடந்த தோட்டத்தின் உரிமையாளரும் முன்னோடி விவசாயியுமான திரு.செந்தமிழ் செல்வன் உட்பட ஏராளமான விவசாயிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
- புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி பணிகளை ஐகோர்ட் நீதிபதிகள் பார்வையிட்டனர்
- அகழ்வாராய்ச்சிக்கு நிலம் வழங்கியவர்களை அழைத்து பாராட்டினர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான தொல்லியல் அடையாள சான்றுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து அப்பகுதியில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 10 குழிகள் தோண்டப்பட்டு அதில் இருந்து பொருட்கள் கண்டெடுக்கப்படுகிறது. இதுவரை வட்ட சில்லுக்கல், கெண்டி மூக்குகள், கண்ணாடி வளையல்கள், சுடு மண் விளக்கு, எலும்பு முனை கருவி, தங்க அணிகலன் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் தங்க அணிகலன் கிடைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூக்குத்தி அல்லது தோடாக கருதப்படுகிறது. இந்த நிலையில் துளையிடப்பட்ட பானை ஓடுகள் 7 எண்ணிக்கையில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுரேஷ்குமார், மகாதேவன் பார்வையிட்டனர். அப்போது அரிய பொருட்கள் குறித்து அகழாய்வு இயக்குனர் தங்கதுரை விளக்கி கூறினார். தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். முன்னதாக அகழாய்வு பணிக்கு நிலம் வழங்கியவர்களை நீதிபதிகள் பாராட்டி கவுரவித்தனர்.
- புதுக்கோட்டையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருச்சியை சேர்ந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்
- கொள்ளையனிடம் இருந்து 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கணேஷ்நகர், கந்தர்வகோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து தொடர் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திருச்சி ஏர்போர்டை சேர்ந்த விஷ்வபிரகாஷ்(வயது 20) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அனைத்து கொள்ளைகளிலும் ஈடுபட்டது அவர்தான் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இலுப்பூர் டி.எஸ்.பி. ஜெயந்தி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், போலீசார் பிரவீன்குமார், பிரபாகரன், செல்வராசு ஆகியோர் கொண்ட தனிப்படையினரை, மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே பாராட்டினார்.இது குறித்து போலீசார் கூறும்போது, தொடர் திருட்டில் ஈடுபட்ட விஷ்வபிரகாஷ் மீது ஏற்கனவே திருச்சியில் திருட்டு வழக்கு பதிவாகி உள்ளது.இதில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் பதிவான விரல் ரேகைகளை வைத்தும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து விஷ்வபிரகாஷை பிடித்ததாக கூறினர்.
- கம்பன் கழக பெருவிழாவில் ஐகோர்ட் நீதிபதிகள் நூல்களை வெளியிட்டு பேசினர்
- கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கம்பன் கழக பெருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் அம்சவேணி தயாரித்து, புதுச்சேரி ரவி குணவதி மைந்தன் எழுத்து இயக்கத்தில் தயாரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் திரைப்படம் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்பணி அரங்கம் நடைபெற்றது. இதில் இலக்கிய மாமணி விருது பெற்ற புதுகை தென்றல் ஆசிரியர் தர்மராஜன், கம்பன் பணிவள்ளல் விருது பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி, தங்கமாளிகை உரிமையாளர் சோம.நடராஜன் மற்றும் முத்து மீனாட்சி மருத்துவமனை டாக்டர்.பெரியசாமி, கண் தான ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினர். நிலாவைப்பழனியப்பன் உள்ளிட்டவர்கள் எழுதிய நூல்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரங்க மகாதேவன், சுரேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் தலைமை தாங்கி பேசுகையில், கம்பனின் படைப்புகள் உலகில் தத்துவங்களை மிஞ்சும் வகையில் இருந்து வருகிறது. உலகில் உன்னதமான படைப்பாக கம்பராமாயணம் இருந்து வருகிறது. இயல், இசை, நாடகம், மானிடம் வாழ்க்கை முறை என பலவற்றை உணர்த்தியுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி காப்பியங்கள் வாழ்வியலை உலகிற்கு காட்டியது. கம்பனின் படைப்புகள் தமிழில் தனித்தன்மையுடன் இருந்து வருகிறது. வாழ்வில் நல்லதை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கம்பனின் காவியங்கள் உயர்த்தியுள்ளது, என்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலை வகித்து பேசுகையில், கம்பனின் எழுத்துகள் புதிய பரிமானத்தை தந்து கொண்டிருக்கிறது. கம்பனின் ஆரன்ய காண்டத்தை படித்த போது புதிய வினாக்கள் தோன்றுகிறது. காவியங்கள் அனைத்தும் இன்று வரை படித்து கொண்டே இருக்கலாம் என்றார். அதை தொடர்ந்து உள்ளத்தனையது உயர்வு என்ற பொருளில் இலங்கை ஜெயராஜ் பேசினார்.விழா ஏற்பாடுகளை கம்பன் கழகத் தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார், மாவட்ட செயலாளர் அறிவியல் இயக்கம் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அறிவியல் இயக்கத்தலைவர் வீரமுத்து , செயலாளர் முத்துகுமார், மணவாளன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், டெல்லி தமிழ் சங்கம் பெருமாள், பரணி, முன்னாள் எம்எல்ஏ சுப்ராம், வழக்கறிஞர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கறம்பக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் நைனான் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கேசவன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கேசவன் தனது வீட்டின் அருகே உள்ள சுரேஷ் என்பவரது வீட்டின் முன் இருந்த மரத்தில் ஏறி மர கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மர கிளைகள் பட்டது இதில் கேசவன் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது இதைக் கண்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் கேசவனை மீட்டு மலையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கேசவன் இறந்துவிட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேசவன்உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கந்தர்வகோட்டையில்தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை தீயணைப்பு துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது, முதலுதவி மற்றும் காயம் அடைந்த வர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அறிவழகன் தலைமையில் காவலர்கள் செய்து வருகின்றனர்.பயிற்சியின் போது பள்ளி கல்லூரி மாணவர்களை பயிற்சியில் ஈடுபடுத்தி அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பேரிடர் காலங்களில் தங்களை காத்துக் கொள்வது மற்றும் மற்றவர்களுக்கு உதவுவது போன்ற பயிற்சிகளை செய்து காண்பித்தனர்.






