என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி
- பெரம்பலூரில் நிதி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார்
- நிதி நிறுவனம் நடத்திய 3 பேர் கைது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் சபரிநாதன் (வயது 35), அஜித்குமார் (32), சதீஷ் குமார் (29) ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். ஒரு குறிப்பிட்டதொகை செலுத்தினால் அதற்கு இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என்று கூறி பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் வசூல் செய்து உள்ளனர். ஆனால் அவர்கள் கூறிய காலக்கெடுவிற்கு முடிந்த பின்னரும் இரு மடங்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது உரிய பதில் கிடைக்கவில்லை.இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள், புதுக்கோட்டை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சபரிநாதன் உள்பட 3 பேரையும் கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






