என் மலர்
புதுக்கோட்டை
- மணிப்பூர் பாலியல் கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அனைத்திந்தியஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளில் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், நகரச் செயலாளர் ஆர். சோலையப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம். தலைவர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசிலா, வாலிபர் சங்க நகரச் செயலாளர் கு. ஜெகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், தலைவர் அ.சந்தோஷ்குமார் , தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், மாற்றுத்திறனாளிகள் சங்க நகரச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்டோர் கண்ட உரையாற்றினார்.
- ஆலங்குடி பேரூராட்சியில் பேரூராட்சி ஆணையரக இயக்குனர் ஆய்வு
- திட்டப்பணிகளை அதிகளவு வழங்கிட கோரிக்கை
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் குளங்கள் மேம்பாடு, மின்மயானம் சாலை பணிகள் மேம்பாடு புறவழிச்சாலை போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பேரூராட்சி ஆணையரக இயக்குனர் கிரண் குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், தி.மு.க. நகர செயலாளர் பழனிகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உடன் சென்றனர். அப்போது ஆலங்குடி பேரூராட்சிக்கு மேலும் பல வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருமாறு பேரூராட்சி இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், அ.தி.மு.க. நகர செயலாளர் பழனிவேல், கவுன்சிலர் சையது இப்ராஹிம், மூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
- பொன்னமராவதி ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள ஆவுடையே சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான், தாயார் சாயாதேவியுடன் அருள் பாலிக்கிறார். கால பைரவர் சனீஸ்வர பகவானை பார்த்து வீற்றீருப்பதால் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1008 பெண்கள் கலந்துகொண்டனர்.
திருவிளக்கு பூஜையில் சிவாச்சாரியார் பாலாஜி தலைமையில் வேத மந்திரங்களை பெண்கள் உச்சரித்து, மற்றும் குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.அதன் பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
- குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
- அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் நகராட்சி குப்பை கிடங்கில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் பலமணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, திமுக நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் கவிவேந்தன், மற்றும் பிரேம் ஆனந்த் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து தீயை கட்டுபடுத்து பணியை துரிதப்படுத்தினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரா;களுக்கு தகவல் தரப்பட்டவுடன் இரண்டு வாகனத்திற்கும் மேலாக கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். விடிய,விடிய தீயை அணைக்க போராடி வருகின்றனர் . வருடத்திற்கு இரண்டு முறை இதுபோல் தீ விபத்து நடப்பது தொடர் கதையாக வருகிறது என அப்பகுதியின் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் தொpவிக்கின்றனர் . நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர் கள் தங்கள் இஷ்டம் போல் குப்பைகள் போட்டு வருவதால் இதுபோன்று தீ விபத்துக்கள் நடைப்பெறுவதாகவும் குற்றசாட்டுகின்றர் . தமிழக வாழ்வுரிமை கட்சி நியாஸ் இதற்கு கடுமையான கண்டனம் தொpவித்துள்ளார். குப்பை கிடங்கிற்கு சாpயான இடத்தை தோ;வு செய்யாத காரணமும், குப்பைகளை கையாளும் முறையே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் சமூக விரோதிகள் செயல் என்று சொல்லி கடந்து விடமுடியாது, அதிகாரிகளும் சமூக விரோதிகளாவர் கள் என்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு குப்பை கிடங்கை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- ஆலங்குடி வம்பன் அற்புதா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜான் மார்ட்டின் தலைமை வகித்தார். துணை முதல்வர் பக்சிமெட்டில்டா வரவேற்றார். கருத்தரங்கில் ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் நல்லதம்பி, நகர வட்டார போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் இந்தியன் ரெட் கிராஸ் கிளை சேர்மன் மருத்துவர் முத்தையா, பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் லட்சுமி நாராயணன், துணைப் பொருளாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர் சிவ ஆனந்தன், அருட்சகோதரி மார்கரேர் மேரி உட்பட பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இன்னாசிமுத்து நன்றி கூறினார்.
- கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- சாலை வசதி, பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.ஒன்றியக் குழு துணை தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் பால் பிரான்சிஸ், திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கந்தர்வகோ ட்டை பேருந்து நிலையத்தில் சுகாதார கழிப்பிட வசதி, கெண்டை யன் பட்டியில் அங்கன்வாடி மையம், கல்லா க்கோட்டை ஊராட்சியி ல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.நிறைவாக ஒன்றிய குழு தலைவர் பேசும் பொழுது நிதி நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகள் நிறைவேற்ற ப்படும் என்றார்.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் பாண்டியன், திருப்பதி, முருகேசன், கோவிந்தராஜ், பாரதி பிரியா, சுதா, மலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வேங்கை வயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூர் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை கோர்ட்டில் அனுமதி பெற்றனர். இதையடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் 4 சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி முன்னிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.
- லாரி தீயில் எரிந்து நாசம் ஆனது.
- சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்தது
கரூர்
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பத்மசேகர் (வயது50). இவர் தனக்கு சொந்தமான லாரியில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காட்பாடி நோக்கி மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தார். அந்த லாரி கரூர் மாவட்டம் புகழூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மசேகர் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினார். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் மோதி விவசாயி பலியானார்.
- வீட்டிற்கு வந்தபோது சம்பவம்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியை சேர்ந்தவர் அரங்கன் (வயது 70). விவசாயி. இவர் தனது மொபட்டில் ஆலங்குடி சந்தைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லாலங்குடி மாரியம்மன் கோவில் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அரங்கனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அரங்கன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடக்கிறது.
- 1,000 பெண்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை
கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், சிவபெருமான், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை குத்து விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான குத்து விளக்கு பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி 2 கட்டங்களாக மாலை வரை நடக்கிறது. இதில் 1000 பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்கிற்கு பூஜை செய்கின்றனர். இதே போல் ஆடி மாதம் 4 வெள்ளிக்கிழமைகளிலும் குத்து விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சுற்று வட்டார பழனி பாதயாத்திரை குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகில் கல்லுடைக்கும் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அன்புமணவாளன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ரெத்தினவேல் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும், நலவாரிய கூட்ட முடிவின்படியும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பணப்பலன்கள் கிடைக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
- மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை:
அன்னவாசல் அருகே புதூர் குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் தினேஷ் (வயது 21). இவரது நண்பர் இலுப்பூர் பாப்பான்குடியை சேர்ந்த அஜீத்குமார் (22). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஜீத்குமார் ஓட்டினார்.
புல்வயல் அருகே புதுக்கோட்டை-வயலோகம் சாலையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் தினேஷ், அஜீத்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்தவழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






