என் மலர்
புதுக்கோட்டை
விராலிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சத்திரம் அருகே சத்திரம் குளம் உள்ளது. இந்த குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்களை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களுடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகள் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி வீடுகள் மற்றும் கடைகளை அகற்றக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் இது நீதிமன்ற உத்தரவு என கூறி, மின் இணைப்பை துண்டித்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட தொடங்கினர்.
அப்போது, ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் அவர்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களின் உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள், நீதிமன்றத்தில் தடை உத்தரவு எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனவே அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் 2 வாரகால அவகாசம் கொடுத்து பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் கூடுதல் சிகிச்சை மையங்களில் நோயாளிகள் ‘அட்மிஷன்‘ இல்லாமல் அரசு மருத்துவமனையில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டை:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆண்டி முதல் அரசன் வரை தாக்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தொற்று பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்பு இருந்ததை விட தற்போது தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளன.
தினமும் சராசரியாக 3 இலக்க எண்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது இரட்டை இலக்க எண்களில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது கூடுதல் படுக்கை வசதிகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டன. புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி, அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்திலும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் ராணியார் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் மட்டும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. கூடுதலாக அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையங்களில் தற்போது ‘அட்மிஷன்‘ இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
மேலும் ஒரிரு நோயாளிகளுக்காக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தவிர்க்கவும் தற்போது ‘அட்மிஷன்‘ போடுவதில்லை. மாறாக ராணியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்திலும் போதுமான படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகள் இருப்பதால் நோயாளிகள் அனைவரும் அங்கு அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
மீனவர் ஒருவர் வலையில் 2 கிலோ எடை கொண்ட 2 அதிசய சிங்கி இறால் சிக்கியது.
கோட்டைப்பட்டினம்:
கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். வழக்கம் போல் நேற்று மீன்பிடித்துக் கொண்டு கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் 2 கிலோ எடை கொண்ட 2 அதிசய சிங்கி இறால் சிக்கியது. இதன் விலை ரூ.2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விலை போகும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இல்லாததால் குறைந்த விலைக்கே விலை போனது.
புதுக்கோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தார். அகரப்பட்டி கல்லுப்பட்டறை அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த பெருமாள் சம்பவஇடத்திலேயே இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கியில் 1 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்துகரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அறந்தாங்கி கோட்டை 4-ம் வீதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்து இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜிமுகமது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பபிதாபாபு முன்னிலை வகித்தார். இதில் அரசு ஆரம்பசுகாதார மருத்துவர் ஆசிக்அசன்முகமது தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதி பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்னவாசல் அருகே மணல் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குடுமியான்மலை அருகே உள்ள விசலிக்குளம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் மணலை அள்ளி டிராக்டர் டிப்பரில் சிலர் கடத்த முயன்றது தெரிய வந்தது.
அதன்பேரில், பரம்பூர் வண்ணாரப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 30) மற்றும் காரையூர் சாத்தனூரை சேர்ந்த சின்னப்பா (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வம்பரம்பட்டி பாம்பாறு பாலம் பகுதியில் கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மொபட்டில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த சரவணனிடம்(22) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கறம்பக்குடி பகுதியில் முககவசம் அணியாத 130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது, பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் துரைமாணிக்கம் மற்றும் ஊழியர்கள் கறம்பக்குடி சீனி கடைமுக்கம், அம்புக்கோவில் முக்கம், கடைவீதி ஆகிய பகுதிகளில் கொரோனா ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற முககவசம் அணியாத, வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள், பாதசாரிகள் ஆகியோரை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது சிலர் சுகாதார துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். நேற்று மட்டும் கறம்பக்குடி பகுதியில் முககவசம் அணியாத 130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாகன ஒட்டிகளை சுகாதார துறை ஊழியர்கள் விரட்டி பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருமயம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள கரையான்பட்டியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவரது மனைவி ஆராயி (வயது 79). சம்பவத்தன்று ஆராயி வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
புதுக்கோட்டையில் கீழராஜவீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 16 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கீழராஜ வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதிக்கு பொருட்கள் வாங்க மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவது உண்டு. இந்த நிலையில் நேற்று இரவு கீழ இரண்டாம் வீதியை சேர்ந்த உண்ணாமலை என்ற பெண் கீழ ராஜ வீதியில் மனோன்மணி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென உண்ணாமலை கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவரிடம் விசாரித்தனர். மேலும் கடைவீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கடைகளில் முகப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
அப்போது சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களின் அடையாளம் மற்றும் வாகனம் அதில் பதிவாகி இருந்தது. அந்த வாகனத்தின் அடையாளத்தை இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 150-ல் இருந்து 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று தினசரி பரிசோதனைகளின் சராசரி எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கென பிரத்யேகமான நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தினசரி பரிசோதனை திறன் 2,500 மாதிரிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களை காலதாமதமின்றி கண்டறியும் வகையில் 113 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தினமும் 2 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
தினசரி சராசரியாக 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 12 பேருக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 12,793 பேருக்கு சளி, காய்ச்சலுடன் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா மாதிரி சேகரித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல கொரோனா பாதித்த 100 கர்ப்பிணிகளுக்கு இதுவரை உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு தாய்சேய் முழு நலத்துடன் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை:
தமிழக சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 266 ஆக உயர்ந்தது. சிகிச்சையில் இருந்தவர்களில் 98 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 399 பேர் கொரோனா சிகிச்சையில் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். தற்போது 726 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவரும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்ற 65 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 2 பேர் இறந்ததால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அரிமளம் ஒன்றியத்தில் செங்கீரை ஊராட்சி மேனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒன்றியத்தில் கடியாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 11 பேருக்கும், ராயவரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 16 பேருக்கும், அரிமளம் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 22 பேருக்கும், கீழாநிலைக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 20 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களான ஆதனக்கோட்டையில் 21 வயது வாலிபருக்கும், கல்லுவிடுதியில் 15 வயது சிறுமிக்கும், ஸ்ரீநகரில் 54 வயது பெண்ணுக்கும், வாராப்பூரில் 66 வயது பாட்டிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 407 ஆகவும், சிகிச்சைகள் இருப்போர் எண்ணிக்கை 20 ஆகவும் உள்ளது. இதுவரை 379 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.