என் மலர்tooltip icon

    நீலகிரி

    • மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
    • கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது.

    குன்னூர்,

    குன்னூர் உழவர் சந்தை, எல்ஐசி காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ ஜெய் பவானி அம்மன் கோவிலில் 28-ம்ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன் ஹோமம், கலச ஸ்தாபனம், ஸ்ரீ காமேஸ்வரி பாராயணம், ஸ்ரீ சவுபாக்கிய காமேஸ்வரி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது. அதன்பிறகு மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது. அய்யப்பன் கோவில், உழவர் சந்தை, ராக் பி சாலை, காமராஜபுரம், ரேலி காம்பவுண்ட், ப்ளூஹில்ஸ் வழியாக சென்றது. ஆடித்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • ஊட்டி உருளைகிழங்குக்கு தனித்து வமான ருசி உள்ளது.
    • உருளை கிழங்கு விலை உயர்ந்துள்ளதால், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்த படியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்ப டுகிறது. குறிப்பாக ஊட்டி உருளை கிழங்குக்கு தனித்து வமான ருசி உள்ளது.

    ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான எம்.பாலாடா, இத்தலார், கடநாடு, நஞ்சநாடு, ஆடாசோலை, தேனாடு கம்பை, கொல்லி மலை, ஓரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்ப ட்டுள்ளது. இந்த உருளை கிழங்குக்கு தனித்துவமான ருசி இருப்பதால் நம் மாநிலம் மட்டுமின்றி வெளி மாநி லங்களுக்கு விற்பனை க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் அறுவடை செய்யப்படும் உருளை கிழங்கு மேட்டுப்பாளையம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து பல்வேறு பகுதி களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம் சந்தைக்கு சீசன் காலங்களில் நாள்தோறும் 40 டன் அளவுக்கு உருளைகிழங்கு விற்பனைக்கு வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக 45 கிலோ எடை கொண்ட உருளை கிழங்கு மூட்டை சராசரியாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்பனையாகி வருகிறது.

    உருளை கிழங்கு விலை உயர்ந்துள்ளதால், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், உருளை கிழங்கு அறுவடை யில் சற்று தொய்வு காணப்பட்டது.

    தற்போது மழை குறைந்து விட்டதால், அறுவ டைக்கு தயாரான உருளை கிழங்கை மூட்டை களில் நிரப்பி மேட்டுப்பாளையம் சந்தைக்கு விவசாயி கள் எடுத்து சென்று வரு கின்றனர்.

    அங்கு உருளைகி ழங்குக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர்.

    இதேபோல் கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளை யத்தில் ஊட்டி பூண்டும் அதிகபட்சமாக கிலோ 4500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    இதனால் ஊட்டி நகரா ட்சி மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு வரும் பூண்டு, உருளை கிழங்கு அளவு குறைந்துள்ளது.

    • தொடர்ந்து குட்டையில் இறங்கிய காட்டு யானை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது.
    • இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் செல்போனில் இந்த காட்சிகளை வீடியோ எடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கேரள எல்லைக்கு அருகில் உள்ள கெத்தை, பரளிக்காடு பகுதியில் தமிழக அரசின் மின்சார வாரிய குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை வந்தது. அந்த யானை அங்குமிங்குமாக சுற்றி திரிந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய குட்டையில் தண்ணீர் இருப்பதை பார்த்ததும் யானை அதனை நோக்கி ஓடி சென்றது.

    தொடர்ந்து குட்டையில் இறங்கிய காட்டு யானை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தது. மேலும் அங்கிருந்த சேற்றை எடுத்து தனது உடல் முழுவதும் பூசி கொண்டது.

    அதன்பிறகு வனப்பகுதிக்குள் யானை சென்றுவிட்டது. வனப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷப் பூச்சிகள் அதிகம் உண்டு. அவற்றின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டி காட்டு யானை சேற்றுக்குளியலில் ஈடுபட்டதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் செல்போனில் இந்த காட்சிகளை வீடியோ எடுத்தனர். பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    • உதவி மேலாண்மை உதவி இயக்குனர் ஜோதிகுமார் மண் மாதிரிக்கான செயல்முறை விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை செய்து இருந்தன.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரக்கம்பை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டம் குறித்து விளக்கினார்.

    ஊட்டி மண் ஆய்வுக்கூட வேளாண் அலுவலர் நிர்மலா, காய்கறி தோட்டத்தில் ஏக்கருக்கு 10 புள்ளி 12 இடங்களில் முக்கால் அடி ஆழத்தில் மண் மாதிரி சேகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி மேலாண்மை உதவி இயக்குனர் ஜோதிகுமார் மண் மாதிரிக்கான செயல்முறை விளக்கம் அளித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் பேசும்போது உழவன் அட்மா திட்டம், வட்டார தொழில்நுட்பம், உழவன் செயலி பயன்பாடு மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் விளக்கினார். பிரவீனா மணிமேகலை நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை செய்து இருந்தன.

    • புலியின் நடமாட்டத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர்.
    • சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்ப கத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெ ருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன.

    இந்த நிலையில் ஒருசில சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் இருந்து கூடலூருக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

    அப்போது கூடலூர்-தெப்பகாடு சாலையில் உள்ள பாலம் அருகே, ஒரு புலி உலா வந்தது. அது ரோட்டில் இங்கும் அங்குமாக சிறிது நேரம் ஓடி விளையாடியது. அதன்பிறகு அந்த புலி வனப்பகுதிக்குள் பாய்ந்தோடி சென்றது.

    கூடலூர்-முதுமலை ரோட்டில் புலியின் நடமாட்டத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து பகிர்ந்தனர். இது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    குன்னூா் வன சரகத்துக்கு உட்பட்ட மவுண்ட் பிள சண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியை சுற்றிலும் சோலைகள் நிறைந்து உள்ளன. எனவே அங்கு வனவிலங்குகள் நடமா ட்டம் அதிகமாக இருக்கும்.இந்த நிலையில் ஒரு சிறுத்தைப்புலி நள்ளி ரவு நேரத்தில் மவுண்ட்பி ளசண்ட் பகுதிக்கு வந்தது. இது அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    இது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தைப்புலியால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக அதனை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனா்.

    • சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது
    • வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி சென்று வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் குந்தா ரோட்டில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே ரோட்டில் ஆங்காங்கே குவியல் குவியலாக மண் கொட்டப்பட்டு உள்ளது.

    இது மழை காலம் என்பதால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக, சாலை முழுவதும் நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    எனவே அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊட்டி மஞ்சூர் குந்தா பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.
    • அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்களாக காட்சி அளிக்கிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 2196 மீட்டர் உயரத்தில் பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது. இது உலகச் சிறப்புமிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்து உள்ளது.

    அங்கு உள்ள அடர்ந்த இயற்கைக் காடுகள், பலவிதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கண்களுடன் மனதையும் மகிழ வைப்ப வை ஆகும். தூய்மையான காற்று, பனிபடர்ந்த மேகக் கூட்டத்துடன் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாக உள்ளது.

    ஆங்கிலேயப் பொறி யாளர் பார்சன் ஹட்சன் என்பவர் கடந்த 1862-ம் ஆண்டு இந்த பகுதியில் அழகான இடத்தை தேர்வு செய்து பாதை வகுத்து வழி ஏற்படுத்தித் தந்தார். எனவே அந்த பகுதி இவரது பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

    குளிர் காலத்தில் மிகுந்த குளிர், மழைக்காலத்தில் மிகுந்த மழை, கோடை க்காலத்தில் குறைந்த வெப்பம் என்று அற்புத சூழலுடன் விளங்குகிறது. அதுவும் தவிர ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 3வது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகி ன்றன. இன்னொருபுறம் புனல் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.

    பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். இங்கு தற்போது 33.59 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன் வேலி க்கான நீர்பிடிப்புப்பகுதி, 202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இதேபோல பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பாதுகாக்க ப்பட்ட வனமாக உள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வ லர்களுக்கு முழுமையான இன்பம் தரும் சுற்றுலாத்தலம் ஆகும்.மரங்களின் தடையற்ற வளர்ச்சியும், படர்தாமரை களும், ஊர்ந்து செல்லும் பறவைகளின் சப்தமும், ஒருசில நேரங்க ளில் புலியின் உறுமல்களும் சுற்றுலா பயணிகளின் கற்ப னையை கவர்ந்திழுக்கும். பார்ச ன்ஸ்வேலி பள்ள த்தாக்கு பகுதிகளில் காட்டெரு மை களை அதிகம் பார்க்க முடியும். காட்டுப்பாதை செல்லும் வழியில் இருபக்கமும் செறிந்து நிற்கும் அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்கள் மற்றும் சிறு, சிறு நீரோடைகளை கடந்து செல்வது மனதிற்கு உற்சாகம் தரும் அனுபவமாக உள்ளது.

    ஊட்டியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்க பார்க்க பரவசம் தரும் பார்சன்ஸ்வேலி, ஊட்டி யின் தாகம் தீர்க்கும் அணையாக உள்ளது. இயற்கை அன்னையின் ஆட்சியின் கீழ் உள்ள அற்பு தமான இடம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். அங்கு உள்ள பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு மனநிறைவுடன் திரும்பி வருகின்றனர்.

    • பிரதமர் நரேந்திர மோடியும் பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி சென்றிருந்தார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மியை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர்.

    பாகன் தம்பதியினர் மற்றும் யானை குட்டிகள் இடையேயான பாச உறவை மையமாக வைத்து தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் தயாரானது.

    இந்த ஆவணப்படம் அண்மையில் ஆஸ்கர் விருதினையும் பெற்றது. இதையடுத்து அந்த படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளி மற்றும் யானை குட்டிகள் உலகளவில் புகழ் பெற்றன. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடியும் பாகன் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டி சென்றிருந்தார்.

    இந்த நிலையில் பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி முதுமலைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து மைசூருக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மசினகுடி வந்து, அங்கிருந்து கார் மூலம் முதுமலைக்கு வருகிறார்.

    அங்கு பாகன் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டுவதோடு, அங்குள்ள பழங்குடி மக்கள் மற்றும் பாகன்களையும் சந்தித்து பேச உள்ளார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு முதுமலை தெப்பக்காடு முகாம் தற்காலிகமாக மூடப்படுகிறது. இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை 6 நாட்கள் முகாம் மூடப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தெப்பக்காடு யானைகள் முகாம் இன்று முதல் வருகிற 5-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

    யானைகள் முகாமுக்குள் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து கொள்ளலாம் என்றனர்.

    • காட்டுயானையை பட்டாசு வெடித்து விரட்டினர்.
    • பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது.

    கூடலூர்

    கூடலூர் அருகே மேல் கூடலூருக்குள் காட்டுயானை ஒன்று, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு நுழைந்தது. உடனே அப்பகுதி மக்கள் காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் கெவிப்பாரா பகுதிக்கு காட்டுயானை இடம் பெயர்ந்தது.

    இதுகுறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வன ஊழியர்கள் விரைந்து வந்து கெவிப்பாரா பகுதியில் முகாமிட்ட காட்டுயானையை பட்டாசு வெடித்து விரட்டினர். இதனால் கோக்கால் மலைக்கு அந்த காட்டுயானை சென்றது.

    இதற்கிடையில் திருவள்ளுவர் நகர் அருகே உள்ள அட்டி பகுதியில் 2 காட்டுயானைகள் புகுந்தது. மேலும் கூடலூர்-ஓவேலி சாலையில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதிக்குள் சில காட்டுயானைகள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    • டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கி பேசினார்கள்.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே உள்ள அம்பலவயலில் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியானது மஞ்சல்மூலா, பூலக்குன்று போலீஸ் சோதனை சாவடி வரை சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. அப்போது சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில், பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து ஆசிரியர்கள் விளக்கி பேசினார்கள். இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • மணிப்பூரில் மத்திய அரசு அமைதியை நிலை நாட்ட வேண்டும்.
    • போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

    கோத்தகிரி

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டும் நீலகிரி மாவட்ட பெண்கள் இணைப்புக்குழு சார்பில் கோத்தகிரி மார்கெட் திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெண்கள் இணைப்புக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாராள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், மத்திய அரசு தலையிட்டு அங்கு அமைதியை நிலை நாட்ட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவி ரோஸ்மேரி நன்றி கூறினார்.

    • கேத்தி பகுதியில் பெரிய மரம் வேருடன் பெயா்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி குன்னூா், கூடலூா், கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊட்டி-குன்னூா் ெரயில் பாதையில் கேத்தி பகுதியில் பெரிய மரம் வேருடன் பெயா்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் ெரயில்வே துறையினா் விரைந்து வந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

    இப்பகுதியில் அபாய நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    குன்னூர் அடுத்துள்ள ஏலநள்ளி கிராமத்துக்கு செல்லக்கூடிய சாலையில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனடியாக குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அவர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான சூறாவளி காற்றும் சாரல் மழையும் பெய்து வருவதால் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    ×