குன்னூர் ஜெய் பவானி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா

மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது.
குன்னூர் ஜெய் பவானி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா
Published on

குன்னூர்,

குன்னூர் உழவர் சந்தை, எல்ஐசி காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ ஜெய் பவானி அம்மன் கோவிலில் 28-ம்ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன் ஹோமம், கலச ஸ்தாபனம், ஸ்ரீ காமேஸ்வரி பாராயணம், ஸ்ரீ சவுபாக்கிய காமேஸ்வரி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது. அதன்பிறகு மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது. அய்யப்பன் கோவில், உழவர் சந்தை, ராக் பி சாலை, காமராஜபுரம், ரேலி காம்பவுண்ட், ப்ளூஹில்ஸ் வழியாக சென்றது. ஆடித்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com