என் மலர்
நீலகிரி
குன்னூர் அருகே கன்டோன்மெண்ட் நிர்வாகத்தை கண்டித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:
குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்டில் உள்ள சுகாதார துறையில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு 30 ஆண்டாக பணியாற்றிய பரமேஸ்வரன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வழங்க வேண்டிய பண பலன்கள் வழங்கவில்லை. அத்துடன் அவரது குடும்பத்தினர் வசித்து வரும் குடியிருப்பை காலி செய்யுமாறு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.
எனவே கன்டோன்மெண்ட் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர் சங்கம் சார்பில் நுழைவு வாசலில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சர்வேஸ்வரன், நிர்வாகிகள் சுரேஷ், சுந்தரம், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பூஜா பலிச்சா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மரணமடைந்த பரமேஸ்வரனின் பண பலன்களை வழங்குவது, அவரது குடும்பத்தினரை குடியிருப்பிலிருந்து காலி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிக அளவில் காய்கறிகளை வழங்கியதற்காக ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதனுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேடயம் வழங்கி பாராட்டினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அணிக்கொரை, குருத்துக்குளி, பணஹட்டி உள்ளிட்ட கிராமங்கள் தொற்று பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் பல்வேறு வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து வழங்கி வந்தார். கொரோனா தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிக அளவில் காய்கறிகளை வழங்கியதற்காக ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதனுக்கு நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேடயம் வழங்கி பாராட்டினார்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூடலூர் அருகே மயானத்தில் மரக்கன்றுகள் நட எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் 4-ம் நெம்பர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனங்கள், தேயிலை தோட்டங்களுக்கு இடையே இக்கிராமம் உள்ளது. இங்கு தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த கிராமத்தில் இருந்து கூடலூருக்கு செல்லும் சாலையில் வட்டப்பாறை என்ற இடத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இங்குள்ள புதர்களை அகற்றிவிட்டு மரக்கன்றுகள் நடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பொது மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ, தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு மயானத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். இதையறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் பயன்படுத்தி வரும் மயான நிலத்தை வனத்துறை யினர் கைப்பற்றி வனமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த கூடலூர் வனச்சரகர் ராம கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மயான நிலத்தில் மரக்கன்றுகள் மட்டுமே நடுவதாகவும், வழக்கம்போல் கிராம மக்கள் நிலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி:
கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே அவர்கள் வசித்து வந்த குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் ஊரடங்கு தளர்வு காரணமாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொது மக்களின் நெரிசல் அதிகமாக உள்ளது.
எனவே கோத்தகிரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சாலைகள், கடைகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள்.
நாவல் பழ சீசன் தொடங்கியதால் கோத்தகிரியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது சீசன் என்பதால், இந்த மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் காய்த்து பழுத்துள்ளன. இந்த பழம் கரடிகளுக்கு மிகவும் பிடித்தது என்பதால் இந்த பழங்களை சாப்பிடுவதற்காக கூட்டங்கூட்டமாக தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.
குறிப்பாக கோத்தகிரி அர வேனு அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலை, மூணு ரோடு, அரவேனுவில் இருந்து அளக்கரை செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தனது குட்டிகளுடன் நடமாடுகின்றன. அத்துடன் அங்குள்ள நாவல் மரங்கள் மீது ஏறி பழங்களை பறித்து சாப்பிட்டு வருகின்றன. கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், குடியிருப்பு வாசிகள், தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, நாவல்பழங்களை சாப்பிடுவதற்காக பட்டப்பகலில்கூட கரடிகள் அதிகளவில் வருகின்றன. அவைகள் பழங்களை சாப்பிட்ட பின்னர், அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்குள் பதுங்கி இருக்கிறது. இதனால் பயமாக இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அந்த கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடுஹட்டி ஊராட்சிக்குட்பட்ட நடுஹட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.15.84 லட்சத்தில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை, பெத்தளா ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தளாவில் ரூ.11.85 லட்சத்தில் அமைக்கப் பட்ட கான்கிரீட் சாலை, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.91.21 லட்சத்தில் கொணவக்கரை ஊராட்சிக்குட்பட்ட அட்டடியில் போடப்பட்ட கான்கிரீட் சாலை.
14-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.14.42 லட்சத்தில் முல்லை நகர் முதல் இம்பியாடாமட்டம் வரை முடிக்கப்பட்ட சாலை, நவக்கரை எவில் தேயிலை தோட்டம் வரை ரூ.5.75 லட்சத்தில் முடிக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை, கொட்டக்கம்பை பகுதியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் காலனி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்தில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள், கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிகள் போன்ற வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து சாலையோரம் உள்ள முட்புதர் களை அகற்றி தடுப்பு சுவர்களை மேம்படுத்தி தரமான சாலைகள் அமைக்க வேண்டும், கிராம சாலைகளில் பெயர் பலகைகளை வைக்குமாறும், பழுதடைந்துள்ள தடுப்புச்சுவர்களை உடனடியாக சரி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் குப்பைகளை ஓடைகளில் கொட்டாமல் குப்பை தொட்டியில் கொட்டி, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து உள்ளனரா என அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஜெயபாலன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து ஜக்கனாரை ஊராட்சியில் கலெக்டர் தலைமையில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
நீலகிரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட கருவூல அலுவலகம் மூடப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,083 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 3 பேர் வெளிமாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டு திருத்திய பட்டியல் 1,080 ஆக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,089 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் 952 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இதற்கிடையே கூடலூரில் இருந்து வருகை தரும் ஒரு ஆண், ஒரு பெண் ஊழியர்கள், ஊட்டியை சேர்ந்த ஒரு ஊழியர் ஆகிய 3 பேருக்கு கொரோனா உறுதியானது.
தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட கருவூல அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் மூடப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் அலுவலகம் செயல்படாது என்றும், வருகிற 24-ந் தேதி மீண்டும் அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா பாதித்த ஊழியர்களுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் 20 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கூடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்:
தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கண்டித்தும், பொதுத்துறைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் இந்தியை திணிப்பதை கண்டித்தும் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முகமது கனி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜா, பெஞ்சமின், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதேபோல் மசினகுடி அருகே சிங்காரா பஜாரில் அகில இந்திய மின் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
யூனியன் பிரதேச மின்வாரியங்களை தனியாரிடம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சிங்காரா கோட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மின்வாரிய பொறியாளர் சங்க வீரப்பன், தொழிலாளர் சம்மேளனம் ரஞ்சித், சி.ஐ.டி.யூ. செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரியில் அதிவேகமாக சென்ற கார் கடைக்குள் புகுந்தது. இதில் காருக்குள் இருந்த 4 பேர் எவ்வித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோத்தகிரி:
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணிக்கு கோத்தகிரி- மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலையில் ஒரு கார் அதிவேகமாக சென்றது.
பின்னர் அந்த கார் காமராஜர் சதுக்கத்தில் இருந்து டாணிங் டன் செல்லும் பகுதியில் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஒரு கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இதனால் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காருக்குள் 4 பேரை பத்திரமாக மீட்டனர். நல்ல வேளையாக அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் காரை ஓட்டியது கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது 25) என்பதும், அவர் தனது மனைவியை சிகிச்சைக்காக அழைத்துச்சென்று மீண்டும் வீடு திரும்பும்போது விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த விபத்து பதிவாகி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடலூர் அருகே ரேசன் கடையை காட்டு யானைகள் சூறையாடியது. அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே ஆமைக்குளம் அரசு கல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ள கடையை காட்டு யானைகள் சேதப்படுத்தி, கடையில் இருந்த பொருட்களை தின்றும், வெளியே வீசியும் நாசம் செய்தன.
இந்த நிலையில் ஆமைக்குளத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பாண்டியாறு குடோன் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் உள்ள ரேசன் கடையின் கதவை காட்டு யானைகள் உடைத்து, தும்பிக்கைகளை கடைக்குள் விட்டு அங்கிருந்த கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றும், வெளியே வீசியும் சூறையாடியன. இதில் கடையில் இருந்த பொருட்கள் நாசமானது. காட்டு யானைகளின் அட்டகாசத்தில் அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
தொடர்ந்து அதிகாலை வரை அங்கு நின்றிருந்த காட்டு யானைகள், அரசு தேயிலை தோட்டம் வழியாக அடர்ந்த வனத்துக்குள் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தேவாலா வனத்துறையினர் நேரில் ரேசன் கடையை பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரிடம் பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் நாங்கள் அச்சம் அடைந்து வருகிறோம். இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. எனவே காட்டு யானைகளை கண்காணித்து குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும் என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளியை கடைபிடிக்காத 242 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த 2 மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறந்து செயல்பட்டு வருகின்றன. கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் அல்லது வட்டங்கள் வரைய வேண்டும். கைகளை சுத்தப்படுத்த தண்ணீர், கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை கடைக்காரர்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளியை கடைபிடிக்காத 242 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிந்து கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.