என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் கேரட் சுத்திகரிப்பு எந்திர உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விளைநிலங்களில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீரில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் மூட்டைகளில் நிரப்பி சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பெரும்பாலான எந்திரங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் தண்ணீர் வெளியேற்றியதால் கால்வாய், நீரோடைகள் மாசடைந்தன.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாவட்ட நிர்வாகம் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களில் தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்ற சுத்திகரிப்பு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே சமீபத்தில் சுற்றுச்சூழல், நகராட்சியிடம் அனுமதி பெறாததாகவும் 11 எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களின் உரிமையாளர்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஊட்டி, கேத்தி பாலாடா, முந்தோரை எம்.பாலாடா, நஞ்சநாடு, அனுமாபுரம் உள்ளிட்ட இடங்களில் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்கள் செயல்படவில்லை. வழக்கமாக நள்ளிரவு முதல் சரக்கு வாகனங்களில் மூட்டை, மூட்டையாக கேரட்டுகள் கழுவுவதற்காக கொண்டு வரப்படும். ஆனால், நேற்று போராட்டத்தால் கேரட்டுகள் கொண்டு வரப்படவில்லை.

    இதுகுறித்து சங்க செயலாளர் ரஜினி கூறும்போது, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அறிவுரைப்படி சுத்திகரிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் பணிகள் முடிவடைந்தன. 5,000 தொழிலாளர்கள் தினமும் கேரட் சுத்திகரிப்பு எந்திரங்கள் மூலம் பயனடைந்து வந்தனர். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

    நீலகிரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்டர் பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரட் கழுவி சுத்திகரித்து வெளியிடங்களுக்கு அனுப்ப எந்திரங்கள் அமைக்கப்பட்டன.

    தற்போது கேரட் சுத்திகரிப்பு எந்திரங்களின் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த கேரட்டுகளை சுத்திகரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக எந்திரங்கள் வருவதற்கு முன்பாக விவசாயிகள் தங்களது நிலத்திலேயே தண்ணீர் மூலம் கேரட்டுகளை சுத்திகரித்து விற்பனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் அவர்கள் பள்ளமான இடத்தில் தார்ப்பாய் விரித்து அதில் தண்ணீர் நிரப்பி கேரட்டுகளை கழுவி வருகின்றனர். போராட்டத்தால் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பும் கேரட் அளவு குறைந்து உள்ளது.
    பாசமாக வளர்த்த கிளி பறந்து விட்டதால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ராமசாமி. இவரது மகள் சுஜித்ரா (வயது 10). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் பச்சைக்கிளியை வளர்த்து வந்தனர்.

    மேலும் அதற்கு பழங்கள் உள்ளிட்ட உணவுகளை தினமும் வழங்கி பாசம் காட்டி வந்தனர். கடந்த 22-ந் தேதி காலையில் சுஜித்ரா பச்சைக்கிளிக்கு உணவு வழங்கினார். பின்னர் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பச்சைக்கிளி வீட்டில் இருந்து வெளியே பறந்து சென்றது. இதனால் ராமசாமி குடும்பத்தினர் பல இடங்களில் பச்சைக்கிளியை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

    இந்த சமயத்தில் கிளி பறந்து சென்றதால் சுஜித்ரா மிகவும் மனமுடைந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். இதனிடையே கிளியை தேடி சென்றவர்கள் வீடு திரும்பிய போது சுஜித்ரா மயங்கி கிடந்தார்.

    அப்போது அவர் பூச்சி மருந்து குடித்து இருந்தது தெரியவந்தது. இதையொட்டி அக்கம், பக்கத்தினர் சுஜித்ராவை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுஜித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாசமாக வளர்த்த கிளி பறந்து சென்றுவிட்ட கவலையில் மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கூடலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    குன்னூர் மற்றும் கூடலூரில் குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
    குன்னூர்:

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களிலும் பலா மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பலாப்பழங்கள் பழுத்ததால் அவற்றை சாப்பிடுவதற்காக கடந்த 3 மாதங்களாக காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன.

    தற்போது பலா பழ சீசன் முடிவுக்கு வந்தாலும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் அந்த பகுதிகளிலேயே முகாமிட்டு வருகின்றன. அத்துடன் சாலை ஓரத்தில் உள்ள ஆதிவாசி குடியிருப்புகளிலும் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பறா சத்திரம் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள வாழை மற்றும் பேரிக்காய் மரங்களை முறித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தினார்கள்.

    அத்துடன் இந்த யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி நடமாடி வருவதால், இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    அதுபோன்று கூடலூர் கெவிப்பாரா பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டுயானை நேற்று காலையில் கெவிப்பாரா அருகே உள்ள ராக்லேண்ட் தெருவுக்குள் நுழைந்தது. பின்னர் அந்த யானை தனியார் தேயிலை தோட்டத்தில் புகுந்தது. 
    நீலகிரியில் 5 மாதங்களாக சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு உள்ளதால் வருமானம் இல்லாமல் சிறு வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.
    ஊட்டி:

    கொரோனா காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்பட குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள சுற்றுலாத்தலங்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கின்றன.

    சுற்றுலா பயணிகள் யாரையும் அனுமதிப்பது இல்லை. குறைந்த ஊழியர்களை கொண்டு சுற்றுலா தலங்களை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் இரண்டாவது சீசன் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாத்தலங்கள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் மற்றும் தொழில் செய்து வந்த சிறு வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

    குறிப்பாக சுற்றுலாத்தலங்கள் முன்பு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை வைத்து உல்லன் ஆடைகள், நீலகிரியில் விளையும் பழங்கள், வரிக்கி, சாக்லேட் போன்றவற்றை விற்பனை செய்து வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோன்று சுற்றுலா வாகன ஓட்டுனர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் மாற்று வேலைகளுக்கு சென்று வருகிறார்கள்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா காரணமாக கோடைவிழா ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அடுத்த மாதம் தொடங்க உள்ள 2-வது சீசனும் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், சுற்றுலா மையங்கள் தவிர மற்ற பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் மூடப்பட்டு உள்ளதால் ஏராளமானோர் வேலை இழந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    மசினகுடி செல்லும் சாலையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் 130 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது கூடலூரில் இருந்து வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 130 மதுபாட்டில்கள் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மசினகுடியை சேர்ந்த வரதராஜ் (வயது 47) என்பதும், ஊரடங்கு காலத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 130 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கூடலூர்-கோழிக்கோடு சாலையில் உலா வந்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் அடர்ந்த வனங்களும் தேயிலை தோட்டங்களும் உள்ளன. வனத்திலிருந்து தினமும் காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள், ரேஷன் கடைகள், வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக கூடலூர் தொரப்பள்ளி, தோட்டமூலா, 27-வது மைல், கெவிபாரா, செளுக்காடி, 2-ம் மைல், புளியம் பாரா, தேவாலா உள்ளிட்ட பல இடங்களில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர்.

    கடந்த சில தினங்களாக வேடன் வயல் பகுதியிலிருந்து 2, 1-ம் மைல் வழியாக மெயின் ரோட்டில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் புகுந்த காட்டு யானை கூடலூர் செம்பாலா பகுதியில் வந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தியது.

    தொடர்ந்து கூடலூர்-கோழிக்கோடு சாலையில் நேற்று காலை 6.30 மணிக்கு உலா வந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேகமாக ஓடி சென்றனர். பின்னர் காட்டு யானை வாகன பழுது பார்க்கும் கடை வழியாக வெளியேறி தனியார் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வழக்கமாக நகரை ஒட்டியுள்ள சுற்றுவட்டார பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் தற்போது கூடலூர் நகருக்குள் வர தொடங்கியுள்ளது. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே மெயின் ரோட்டில் காட்டு யானைகள் நடமாடுவதை தடுக்க வேண்டும் என்றனர்.
    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தூய்மை காவலர்கள் 612 பேர், தூய்மை பணியாளர்கள் 79 பேர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தும், நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவை மிகவும் மகத்தான பணியாகும். கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்து பகுதிகளுக்கும் சென்று தன்னலம் கருதாமல் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் போன்றவற்றை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் அடிக்கடி கை கழுவுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரமேஷ், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சொத்துவரி விதிப்புக்கு அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊட்டி நகராட்சி வருவாய் உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வீடு கட்டினால் அளவீடு செய்து சொத்து வரி எவ்வளவு விதிப்பது என்று அதிகாரிகள் நிர்ணயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தீட்டுக்கல் பகுதியில் பிரபு என்பவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இவர் தனது வீட்டுக்கு சொத்துவரி விதிப்பது தொடர்பாக அளவீடு செய்யுமாறு நகராட்சி வருவாய் பிரிவில் தெரிவித்து உள்ளார்.

    வருவாய் உதவியாளர் சத்திய ஆரோக்கியநாதன் (வயது 48) சொத்துவரி விதிப்புக்கு அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரபுவிடம் கொடுத்து, அதை வருவாய் உதவியாளரிடம் கொடுக்க சொன்னார்கள்.

    இதையடுத்து நேற்று பிரபு, நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, வருவாய் உதவியாளர் சத்திய ஆரோக்கியநாதன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், சாதனபிரியா மற்றும் போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் அங்கு சோதனையும் செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அத்துடன் யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை. இந்த சோதனையின்போது சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    விவசாயி தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கெந்தொரை புதுவீடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38) விவசாயி. இவர் கடந்த 15-ந் தேதி தனது நண்பர் மோட்டார் சைக்கிளில் தொட்டபெட்டா வழியாக கெந்தொரைக்கு சென்றார். அப்போது தேனாடுகம்பை போலீசார் வாகன சோதனை நடத்தினர். சீனிவாசனை நிறுத்தி சோதனை செய்த போது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அபராதம் செலுத்திய பின்னர் சீனிவாசன் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் திட்டியதாலும், அதிக பணம் செலுத்துமாறு வற்புறுத்தியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக சீனிவாசனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அத்துடன் அவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை நடத்தி 3 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

    இதற்கிடையே தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், லோகநாதன் ஆகிய 2 பேரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

    அதன்படி செந்தில்குமார் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் நிலையத்துக்கும், லோகநாதன் ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கவுரவித்து பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இதில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தூய்மை காவலர்கள் 612 பேர், தூய்மை பணியாளர்கள் 79 பேர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தும், நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவை மிகவும் மகத்தான பணியாகும். கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்து பகுதிகளுக்கும் சென்று தன்னலம் கருதாமல் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் போன்றவற்றை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு தெரிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் அடிக்கடி கை கழுவுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரமேஷ், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மசினகுடியில் மின் வாரிய குடியிருப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கூடலூர்:

    மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் மின்வாரிய குடியிருப்பு உள்ளது. இது தவிர உடற்பயிற்சி கூடம் உள்பட பல்வேறு மையங்கள் உள்ளன. மேலும் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் மசினகுடி பஜாருக்கு சென்று திரும்புகின்றனர்.

    இந்த நிலையில் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு வாகனங்களில் கொண்டு செல்ல முடிவதில்லை.

    இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையொட்டி மசினகுடி ஊராட்சி அலுவலகத்திற்கு நேற்று மின் வாரிய குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வந்தனர்.

    பின்னர் ஊராட்சி தலைவர் மாதவியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மசினகுடியில் இருந்து மின் வாரிய குடியிருப்பு பகுதி வழியாக மரவகண்டிக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் அப்பகுதிக்கு சரிவர வருவதில்லை இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது.

    மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    வட்டார கல்வி அலுவலர் நேரடியாக அரசு பள்ளிக்கு வந்து தனது மகளை அப்பள்ளியில் சேர்த்தது அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    குன்னூர் கல்வி மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலராக கார்த்திக் பணியாற்றி வருகிறார். அவர் தனது தொடக்கக் கல்வியை சொந்த ஊரான ஊட்டி அருகே நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்தார். தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதால், கார்த்திக் படித்த அதே பள்ளிக்கு மனைவி தீபாவுடன் சென்று தனது மகள் அனன்யாவை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்.

    வட்டார கல்வி அலுவலர் நேரடியாக பள்ளிக்கு வந்து தனது மகளை சேர்த்தது அங்கு பணியில் இருந்த ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை பலரும் வரவேற்றதுடன், இதுபோன்று அதிகாரிகள் பலரும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால், நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
    ×