search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி
    X
    இந்திய கம்யூனிஸ்டு கட்சி

    கூடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கூடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கூடலூர்:

    தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கண்டித்தும், பொதுத்துறைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் இந்தியை திணிப்பதை கண்டித்தும் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முகமது கனி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜா, பெஞ்சமின், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதேபோல் மசினகுடி அருகே சிங்காரா பஜாரில் அகில இந்திய மின் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

    யூனியன் பிரதேச மின்வாரியங்களை தனியாரிடம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சிங்காரா கோட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மின்வாரிய பொறியாளர் சங்க வீரப்பன், தொழிலாளர் சம்மேளனம் ரஞ்சித், சி.ஐ.டி.யூ. செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×