search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதனுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதனுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்த போது எடுத்த படம்.

    ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு கலெக்டர் பாராட்டு

    கொரோனா தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிக அளவில் காய்கறிகளை வழங்கியதற்காக ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதனுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேடயம் வழங்கி பாராட்டினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அணிக்கொரை, குருத்துக்குளி, பணஹட்டி உள்ளிட்ட கிராமங்கள் தொற்று பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.

    அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் பல்வேறு வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து வழங்கி வந்தார். கொரோனா தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிக அளவில் காய்கறிகளை வழங்கியதற்காக ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதனுக்கு நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேடயம் வழங்கி பாராட்டினார்.

    ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×