என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
    • இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி விற்பனை கடைகளில் தினசரி உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி முறையாக முடிவு செய்யாமல் ஒரு சில இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்களால் பொது இடங்கள் சாக்கடைகள் பைபாஸ் சாலைகள் ஆகியவற்றில் கொட்டி பொது சுகாதார கேடு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்கள்.

    ஏற்பாடுகள்

    இதன் தொடர்ச்சியாக இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் தங்களு டைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி ஆணை யாளர் அவர்களின் முயர்ட்சியின் படி தற்போது நாமக்கல் நகர இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கம் இறைச்சி கழிவுகளை தினசரி கடைகளில் சென்று சேகரித்து ஜே .கே. ஆர் மெரைன் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கரூரில் உள்ள வாகனத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு நேற்று யயயயயய அனைத்து கடைகளிலும் இறைச்சிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கரூர் சென்று அங்குள்ள வாகனத்தில் ஒப்படைக் கப்பட்டது.

    தினசரி நாமக்கல் நகராட்சி பகுதி களில் உள்ள இறைச்சி கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சேகரித்து கரூரில் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டுள்ளது. எனவே இறைச்சி விற்பனை கடை உரிமை யாளர்கள் தங்களுடைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை இறைச்சி விற்பனை கடை உரிமையாளர் சங்கம் மூலம் இயக்கப்படும் வாகனத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படு கிறது இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    எச்சரிக்கை

    எனவே இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி பொது இடங்களிலும் சாக்கடை களிலும் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • ர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை யில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.

    சுற்றுலா பயணிகள்

    கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து, மலை உச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. கொல்லி மலைக்கு விடுமுறை நாட்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3-ந் தேதி நடைபெற உள்ள விழா விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நீர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்லி மலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றுடன் வீடு திரும்பிச் செல்கின்றனர்.

    • பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு எல்லையம்மனுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வளையல் அலங்காரம்

    அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எல்லை யம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதமும்,11 வகையான அன்னதானம், வழங்கப்பட்டது.

    இதே போல் கோப்பணம்பாளையம் அங்காளம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், அழகு நாச்சி யம்மன், வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதி யம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் பகவதி அம்மன், ஆனங்கூர்

    மாரியம்மன், செல்லாண்டி யம்மன் , பகவதி அம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்.

    பகவதி அம்மன் மற்றும்

    பரமத்தி அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்க ளில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வளையல் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகு திகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதை கண்டித்தும், அங்கு பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகிடவும், பல தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெற கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் லலிதா கண்டன உரையாற்றினார்.

    வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரி, ராசிபுரம் ஒன்றிய தலைவர் சாவித்திரி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசவுந்தர்யா, பொருளாளர் தேவி,துணத்தலைவர் கற்பகவல்லி, திராவிடர் விடுதலை கழகம் நகர அமைப்பாளர் சுமதிமதிவதனி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிமாறன், வெண்ணந்தூர் செயலாளர் செங்கோட்டுவேல், திராவிடர் விடுதலைக் கழகம் நகர செயலாளர் பிடல் சேகுவாரா உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.      

    • திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
    • அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் விபத்து நடைபெற வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஆய்வு

    இதையடுத்து, திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

    இங்கு விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் இரு மார்க்கத்திலும் சிக்னல் விளக்குகள், சாலையின் இரு மார்க்கத்திலும் உரிய இடங்களில் ரம்பிள் கீற்றுக்கள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். இதனிடையே, மாணிக்கம்பாளை யம் பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என்ற புகாரை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா, வேலகவுண்டம்பட்டி போலீசார், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    எச்சரிக்கை

    அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவ்வாறு ஏற்றி இறக்கி செல்லாத பஸ் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை துறை மூலம் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய 50 சதவீதம் மானிய விலையில் சோளம் -கோ-32, நிலக்கடலை -கதிரிலெப்பாக்ஸி-1812, பிஎஸ்ஆர்-2, உளுந்து வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10 ஆகிய சான்று விதைகள் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா மற்றும் ஆதார் அட்டை விவரங்களுடன் பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.

    • வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து அனிச்சம் பாளையம் செல்லும் தார் சாலை, காவிரி ஆற்றின் நடுவே புகளூர் தடுப்பணை பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.இதனால் இந்த தார் சாலை முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிபடுகிறார்கள்.தார் சாலை பழுதடைந்து புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் தார்சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • காவிரி ஆற்றின் நடுவே புகளூர் தடுப்பணை பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வாழவந்தியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு குற்றபுல னாய்வு துறை ஈரோடு உட்கட்ட டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 160 மூட்டையில் 9 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடத்தல்

    விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தேவேந்திரன் (52), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்திக் கொண்டு கடலூர் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, கடத்தப்பட்ட 9 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய தேவேந்தி ரன், பன்னீர்செல்வம் ஆகி யோரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது.
    • அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் காந்தி மற்றும் சம்பத். இவர்களது விவசாய தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்கள் பயிர் செய்துள்ளார். அங்கிருந்த தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது. அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது. மேலும் அப்பகுதிகளில் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.பொதுமக்களால் தேன் கூட்டை அகற்ற முடியாததால் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வந்து தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து முழுமையாக அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த வாலிபரை போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இக்குடியிருப்பு பகுதிக்கு 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார்.

    அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்த அந்த வாலிபர், அங்கிருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து தாக்கினர்.

    பின்னர் அவரை நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த வாலிபரை போலீசார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, அங்கிருந்த பெண்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அந்த பகுதியினர் அவரை சரிமாரியாக தாக்கினர். இதில் ரத்த காயமடைந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மீண்டும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரகளையில் ஈடுபட்ட வாலிபர் பெயர் மனோஜ் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2018-ம் ஆண்டு இரவு மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார்.
    • குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜிக்கு 1 ஆண்டு சிறையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்த 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (37) என்பவர் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இரவு மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த தங்கராஜ், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதையடுத்து அவரிடம் இருந்து தப்பித்து மூதாட்டி வீட்டிற்குள் சென்று விட்டார். இதுகுறித்து மூதாட்டி பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பான வழக்கு சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜிக்கு 1 ஆண்டு சிறையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    • அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும், பெண் பக்தர்கள் அதிகாலைகளில் அம்மன் கோவில்களில் வழிபாடு
    • பக்தர்கள் விரதம் இருந்து கூழ், துள்ளுமாவு மற்றும் பொங்கல் உள்ளிட்ட வற்றை கோவிலுக்கு கொண்டு வந்து பக்தர்க ளுக்கு வழங்கல்

    நாமக்கல்:

    தமிழகத்தில், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும், பெண் பக்தர்கள் அதிகாலைகளில் அம்மன் கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஆடி முதல்வெள்ளிக் கிழமை:அந்த வகையில் இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை யொட்டி நாமக்கல் பல பட்டறை மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோவில், கொண்டிசெட்டி பட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில், சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோவில், கே.கே.வி. நகர் பாலாம்பிகை கோவில், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    பக்தர்கள் விரதம் இருந்து கூழ், துள்ளுமாவு மற்றும் பொங்கல் உள்ளிட்ட வற்றை கோவிலுக்கு கொண்டு வந்து பக்தர்க ளுக்கு வழங்கினர்.

    இதேபோல் ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரி யம்மன் கோவில், எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப் பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்ச னம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.

    அதேபோல் கோப் பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், நன்செய் இடையாறு பொன்னாச்சி அம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன், வடகரையாத்தூர் பகவதி அம்மன், மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி மாத வெள்ளி க்கிழமை யை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கொல்லி மலை

    சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், முத்து க்காப்பட்டி மாரியம்மன் கோவில், காந்திபுரம் கருமாரி யம்மன் கோவில், கொல்லிமலை நாச்சியம்மன் கோவில், எட்டிகை அம்மன் கோவில், கொல்லிமலை அடிவாரம் வேங்கை மரத்து நாச்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    ×