எல்லையம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம்

பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .
பரமத்தி வேலூர் எல்லையம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி. பரமத்தி வேலூர் எல்லையம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி. கோப்பணம்பாளையம் அரசாயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பரமத்தி வேலூர் எல்லையம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி. பரமத்தி வேலூர் எல்லையம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி. கோப்பணம்பாளையம் அரசாயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
Published on

பரமத்தி வேலூர்:

பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு எல்லையம்மனுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

வளையல் அலங்காரம்

அதனைத் தொடர்ந்து எல்லையம்மனுக்கு 50,001 வளையல்களினால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எல்லை யம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு எல்லையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதமும்,11 வகையான அன்னதானம், வழங்கப்பட்டது.

இதே போல் கோப்பணம்பாளையம் அங்காளம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், அழகு நாச்சி யம்மன், வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதி யம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் பகவதி அம்மன், ஆனங்கூர்

மாரியம்மன், செல்லாண்டி யம்மன் , பகவதி அம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்.

பகவதி அம்மன் மற்றும்

பரமத்தி அங்காளம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்க ளில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு வளையல் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகு திகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com