என் மலர்
நீங்கள் தேடியது "Namakkaldistrict:ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்The month of Adi is auspicious month for Goddess"
- அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும், பெண் பக்தர்கள் அதிகாலைகளில் அம்மன் கோவில்களில் வழிபாடு
- பக்தர்கள் விரதம் இருந்து கூழ், துள்ளுமாவு மற்றும் பொங்கல் உள்ளிட்ட வற்றை கோவிலுக்கு கொண்டு வந்து பக்தர்க ளுக்கு வழங்கல்
நாமக்கல்:
தமிழகத்தில், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும், பெண் பக்தர்கள் அதிகாலைகளில் அம்மன் கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம்.
ஆடி முதல்வெள்ளிக் கிழமை:அந்த வகையில் இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை யொட்டி நாமக்கல் பல பட்டறை மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோவில், கொண்டிசெட்டி பட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில், சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோவில், கே.கே.வி. நகர் பாலாம்பிகை கோவில், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
பக்தர்கள் விரதம் இருந்து கூழ், துள்ளுமாவு மற்றும் பொங்கல் உள்ளிட்ட வற்றை கோவிலுக்கு கொண்டு வந்து பக்தர்க ளுக்கு வழங்கினர்.
இதேபோல் ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரி யம்மன் கோவில், எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புதுப் பட்டி துலுக்க சூடாமணி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்ச னம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
அதேபோல் கோப் பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், நன்செய் இடையாறு பொன்னாச்சி அம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதியம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி அம்மன், வடகரையாத்தூர் பகவதி அம்மன், மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி மாத வெள்ளி க்கிழமை யை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கொல்லி மலை
சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், முத்து க்காப்பட்டி மாரியம்மன் கோவில், காந்திபுரம் கருமாரி யம்மன் கோவில், கொல்லிமலை நாச்சியம்மன் கோவில், எட்டிகை அம்மன் கோவில், கொல்லிமலை அடிவாரம் வேங்கை மரத்து நாச்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.






